-

5 அக்., 2025

www.pungudutivuswiss.com
கட்டுநாயக்காவிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிச் சென்ற பஸ் மீது லொறி மோதி 3 பேர் பலி!! பலர் படுகாயம்!!நாரம்மல-குருணாகல் பிரதான வீதியில் சம்பவித்த கோர விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் படுகாயம் அடைந்த 4 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாரம்மல நகருக்கு அருகில் லொறி மற்றும் பேருந்து மோதியதில் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


மேலதிக விசாரணை

குருணாகலில் இருந்து நாரம்மல நோக்கிச் சென்ற லொறி, கட்டுப்பாட்டை இழந்து வீதியின் வலது பக்கமாகத் திரும்பி, கட்டுநாயக்கவிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

அதிகாலையில் கோர விபத்து - பெண்கள் உட்பட மூவர் பலி - 4 பேர் படுகாயம் | 3 Dead 3 Others Injured After A Lorry Bus Collide

ஆண், இரண்டு பெண்கள் மற்றும் லொரியில் பயணித்த இரண்டு குழந்தைகள் காயமடைந்து நாரம்மல மற்றும் குருணாகல் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையில் சிகிச்சை

லொறியின் ஓட்டுநர், அதில் பயணித்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் உயிரிழந்துள்ளனர்.

அதிகாலையில் கோர விபத்து - பெண்கள் உட்பட மூவர் பலி - 4 பேர் படுகாயம் | 3 Dead 3 Others Injured After A Lorry Bus Collide

உயிரிழந்தவர்கள் பொலன்னறுவையைச் சேர்ந்த 41, 80 மற்றும் 82 வயதுடைய மூவராகும். 40 வயதுடைய 41 வயதுடைய பெண் ஒருவர், 16 மற்றும் 9 வயதுடைய இரண்டு சிறுமிகள் குருணாகல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேருந்தின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார், மேலும் விபத்து குறித்து நாரம்மல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





ad

ad