வணிகவரித்துறை, சட்டம், நீதித்துறை பொறுப்புகளை வகித்து வந்த அமைச்சர் சி.வி. சண்முகம் தமிழக அமைச்சரவையிலிருந்து நீக்கப்படுவதாக அரசு செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.
அதே நேரம் சட்டமன்ற அஇஅதிமுக கொறடா ப.மோகன் ஊரக தொழில் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக ஷண்முகம் விழுப்புரம் வடக்கு மாவட்ட அஇஅதிமுக செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாக கட்சியின் பொதுச்செயலாளராகவும் இருக்கும்