புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 டிச., 2012


பிரதம நீதியரசர் சிராணி திடீர் வெளிநடப்பு


விசாரணைகள் மீது நம்பிக்கையில்லை என தெரிவித்த பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க பாராளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணையிலிருந்து திடீர் என வெளிநடப்புச் செய்துள்ளார்.




 

எமது இளைஞர்களின் உயிருக்கு உத்தரவாதம் அற்ற நிலை தற்போது உருவாகியுள்ளது-
தமிழ் தேசியக் கூட்டமைப்பு 
 புனர்வாழ்வளிக்கப்பட்ட எமது இளைஞர்கள் காணாமல் போகின்றனர். கடத்தப்படுகின்றனர் இதனாலேயே அவர்கள் ஆஸி. நோக்கி செல்கின்றனர். எனவே அவுஸ்திரேலிய அரசாங்கம் எமது இளைஞர்களை திருப்பி அனுப்ப வேண்டாம். அவ்வாறு அனுப்பப்பட்டால்

13ஆவது திருத்தத்திற்கு அப்பால் தீர்வு வழங்க ஆரதவு கிடைத்துள்ளதா?: தயாசிறி


தேசிய பிரச்சினைக்கு பதின் மூன்றாவது திருத்தத்திற்கும் அப்பால் சென்று தீர்வை வழங்குவதற்கு அரசாங்கத்திலுள்ள அனைத்து பங்காளிக் கட்சிகளினதும் ஆதரவு கிடைத்துள்ளதா என பாராளுமன்றத்தில் இன்று கேள்வியெழுப்பிய ஐ.தே. கட்சி எம்.பி. தயாசிறி

யாழில் கைதுசெய்யப்பட்ட நபர்களுக்கும் புலிகள் இயக்கத்திற்கும் இடையில் தொடர்பு: ஜயக்கொடி


 காரணமும், அறிவித்தலும் இன்றி விசேட பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட 9 பேரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தோடு தொடர்புபட்டவர்கள் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

"தலைவர் பிரபாகரன் வருவார் என்கிற நம்பிக்கையில் ஒரு கிராமம்"
=========================
புலியூர் குடியருப்பாளர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு வாழும் இருப்பாக உள்ளனர்கடந்த செவ்வாய் மாலையில் மிகவும் நேரம் கழித்து, 100 பெண்கள் மற்றும் சிறார்கள் உட்பட சுமார் 400 க்கும் மேற்பட்ட மக்கள் சேலம் மாவட்டத்திலுள்ள அதிகம் பிரசித்தமடையாத கிராமமாகிய புலியூரில் ஒன்றுகூடி கடலுக்கு அப்பால் யுத்தம் செய்து உயிர் நீத்த வீரர்களை நினைவுகூரும் விதமாக மெழுகுவர்த்திகளை ஏற்றினார்கள்.
 
தமிழீழ விடுதலைப் புலிகள்(எல்.ரீ.ரீ.ஈ) ஸ்ரீலங்காவிலிருந்து துடைத்தழிக்கப்பட்டு விட்டது, அனால் இங்குள்ள கிராமவாசிகளுக்கு புலிகள் ஒரு வாழும் இருப்பாகவே இன்னமும் உள்ளார்கள். அன்றைய தினம் புலியூர் பிரிவிலுள்ள பொன்னம்மான் நினைவு பேரூந்து தரிப்பிடத்தில் புலியூர், மேட்டூர் அணை, கொளத்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஆண்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என அனைவரும் கடந்த 21 வருடங்களாகச் செய்து வருவதைப் போலவே மூன்று தசாப்தங்களாக ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற இனப் போராட்டத்தில் ஸ்ரீலங்கா இராணுவத்துடன் போரிட்டு மடிந்துபோன தமிழர்களை நினைவுகூரும் வகையில் கைகளில் மெழுகுவர்த்திகளை ஏந்தியவண்ணம் வரிசையாக நின்றார்கள். அவர்கள் அந்த வீரர்களையும் மற்றும் தமிழீத்தையும் புகழ்ந்து பாடல்களைப் பாடினார்கள்

நவம்பர் 26, வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநாள். எல்.ரீ.ரீ.ஈ அந்த நாளுக்கு அடுத்த நாளை மாவீரர் தினமாக கொண்டாடுவது வழக்கம், அதன் தலைவரின் தலைமையின் கீழ் அந்த இயக்கம் இறந்துபோன அதன் அங்கத்தவர்களுக்கு அன்றைய தினம் அஞ்சலி செலுத்துவது வழக்கம். அந்த வழக்கத்தை புலியூர் மக்களும் பின்பற்றுவது மரபு. ஸ்ரீலங்கா தமிழர்களின் உரிமைகளுக்காக எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் போராடி தமது உயிரை அர்ப்பணித்தார்கள். அவர்களின் தியாகத்துக்கு நாங்கள் தலை வணங்குகிறோம், எனத் தெரிவித்தார் மேட்டூர் அணையை வதிவிடமாக கொண்ட 37 வயதான எஸ் கனகரத்தினம் என்ற பெண், அவர் தனது கணவர் முல்லைவேந்தனுடன் மாவீர் தின நிகழ்வுக்கு சமூகமளித்திருந்தார்.
 
ஈழத்துடனான அந்தக் கிராமத்தின் சந்திப்பு எல்.ரீ.ரீ.ஈ யினருக்காக ஒரு பயிற்சி முகாம் அந்தக் கிராமத்தில் 1983ம் ஆண்டு அமைக்கப்பட்டபோது ஆரம்பமானது. சுமார் 3 வருடங்களாக எல்.ரீ.ரீ.ஈ யின் லெப்.கேணல் பொன்னம்மானினால் 800 க்கும் மேற்பட்ட எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் இந்த முகாமில் பயிற்றுவிக்கப்பட்டனர். 1983ல் 130 க்கும் மேற்பட்ட எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் கும்பாரபட்டி கிராமத்தில் பயிற்சி பெற்றார்கள். இவர்களுக்கான பயிற்சி பொன்னம்மானினால் வழங்கப்பட்டது. கும்பாரபட்டி,கொளத்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் அவர்களுக்கு அரிசி தானியங்கள் போன்றவற்றை வழங்கினார்கள். எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களும் பொதுமக்களுடன் கலந்து பழகி ஸ்ரீலங்காத் தமிழர்களின் நிலையை அவர்களுக்கு எடுத்து விளக்கியிருந்தார்கள். புலியூர் வாசியான பி.எஸ் பழனிசாமி என்பவர் கூறுகையில், அந்தப் பயிற்சிநெறி எனது பண்ணையில்தான் நடைபெற்றது,நான் பெரும்பாலான நாட்களை அவர்களுடனேயே கழித்துள்ளேன். அந்தப் பயிற்சி முகாமின் பின்னர்தான் இந்தக் கிராமத்தின் பெயர்கூட புலிகளின் ஊர் என்கிற அர்த்தத்தில் புலியூர் என மாற்றப்பட்டது. கிராமத்தின் பேரூந்து தரிப்பிடத்துக்கும் பொன்னம்மான் நினவாக பெயரிடப்பட்டது.
 
கிராமவாசிகளின் தகவல்களின்படி 1983 முதல் 1985 வரை மூன்று தொகுதி அங்கத்தவர்கள் புலியூரில் பயிற்சி பெற்றார்கள், அவர்களில் பெரும்பாலானவர்கள் யுத்தத்தில் கொல்லப்பட்டு விட்டார்கள். “ நான் வழக்கமாக எல்.ரீ.ரீ.ஈ யினருக்காக உணவுப் பொருட்களை வாங்கி வருவது வழக்கம், மற்றும் மூன்று வருடங்களாக நான் அவர்களுடன் இருந்துள்ளேன். முகாமுக்கு பிரபாகரன் வருகை தந்தபோது அவரை நான் சந்தித்துள்ளேன். தனது அங்கத்தவாகளுக்கு உதவி செய்த பொதுமக்களை பிரபாகரன் சந்தித்து அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அங்கத்தவர்கள் தங்கள் பயிற்சிகளை நிறைவு செய்து பின்னர் கிராமத்திலிருந்து யுத்த களத்துக்கு அனுப்பப் படவிருந்தபோது அவர்களைக் காண்பதற்காக பிரபாகரன் புலியூர் வந்தார். எனத் தெரிவித்தார் கொளத்தூரை சேர்ந்த ஏ. பாலசுப்ரமணியம் என்பவர்.
 
பாலசுப்ரமணியம், பிரபாகரன் என்கிற மனிதர்மீதும் அவரது லட்சியங்கள்மீதும் மிகுந்த மதிப்பு வைத்திருந்ததால் தனது மகனுக்கு தம்பி பிரபாகரன் என்றே பெயரிட்டுள்ளார். தம்பிக்கு இப்போது 20 வயதாகிறது. அவரது வயதை ஒத்த அநேகர் யுத்தத்தில் கொல்லப்பட்ட எல்.ரீ.ரீ.ஈ தலைவர்களின் நினைவாக அவர்களின் பெயர்களைக் கொண்டுள்ளனர்.
 
இந்தக் கிராமத்தவர்களுக்கு பிரபாகரனும் ஈழமும் வரலாற்றின் ஒரு பகுதி மட்டுமல்ல. உண்மையில் அந்தக் கிராமத்திலுள்ள பெரும்பாலானவர்கள் எல்.ரீ.ரீ.ஈயின் பெருந் தலைவர் பிரபாகரன் இன்னமும் உயிரோடுதான் உள்ளார், எந்த நேரத்திலும் போரை மீண்டும் ஆரம்பிப்பார் என நம்புகிறார்கள். “பிரபாகரன் உயிரோடுதான் உள்ளார் என்றே நாங்கள் நம்புகிறோம், மற்றும் உலகத்தின்முன் அவர் விரைவில் தோன்றுவார்” என்றார் பழனிசாமி.
‎"தலைவர் பிரபாகரன் வருவார் என்கிற நம்பிக்கையில் ஒரு கிராமம்"
=========================
புலியூர் குடியருப்பாளர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு வாழும் இருப்ப
ாக உள்ளனர்கடந்த செவ்வாய் மாலையில் மிகவும் நேரம் கழித்து, 100 பெண்கள் மற்றும் சிறார்கள் உட்பட சுமார் 400 க்கும் மேற்பட்ட மக்கள் சேலம் மாவட்டத்திலுள்ள அதிகம் பிரசித்தமடையாத கிராமமாகிய புலியூரில் ஒன்றுகூடி கடலுக்கு அப்பால் யுத்தம் செய்து உயிர் நீத்த வீரர்களை நினைவுகூரும் விதமாக மெழுகுவர்த்திகளை ஏற்றினார்கள்.

கர்நாடகா அரசு, காவிரியிலிருந்து உடனடியாக, தமிழகத்துக்கு, 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும். காவிரி கண்காணிப்பு குழு, உடனடியாக கூடி, தமிழகத்துக்கான தண்ணீர் தேவை குறித்து ஆலோசித்து, வரும், 10ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வழக்கு:காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக, தமிழகம் மற்றும் கர்நாடகா அரசுகளுக்கு இடையே, நீண்ட காலமாக பிரச்னை இருந்து வருகிறது. இது தொடர்பாக, இரு மாநில அரசுகளுமே
கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மீது மோதிவிட்டு தப்பியோடிய தனியார் பஸ்ஸை தேடி விசாரணைகளை -மாங்குளம் பொலிஸார் 
. ஏ- 9 வீதியின் முருங்கன் ஆலயத்திற்கு அருகில் இச்சம்பவம் நேற்று (04) இரவு இடம்பெற்றுள்ளது என மேலும் அறியப்படுகிறது. மாங்குளம் பொலிஸ் நிலையத்தில்
 இலங்கையில் சுமுகமான நிலை இல்லை என்பதற்கான,பதற்றம் அதிகரித்து வருவதற்கான அறிகுறி என்று ஏஎவ்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் போர் முடிவுக்கு வந்து மூன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர், அரசுக்கு எதிராக நூற்றுக்கணக்கான தமிழர்கள் இணைந்து யாழ்ப்பாணத்தில்போராட்டம் நடத்தினர். இது அங்கு


யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது. 
அண்மையில் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் காணப்படும் மனித உரிமை மீறல் மற்றும் நீதிச் சுதந்திரத்துக்கு சவால்விடப்படும் சம்பவங்கள் தொடர்பில் தமது அக்கறையை வெளிப்படுத்தி ஐரோப்பிய ஒன்றியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
"இலங்கையில் சட்டத்தின் ஆட்சி மற்றும் தனிநபர்களின் சுதந்திரம் போன்ற விடயங்களில் அண்மைக்காலத்தில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பில் கொழும்பிலுள்ள ஐரோப்பிய
உலகளவில் மக்கள் வாழ்வதற்கு வசதியான நகரங்களை மெர்செர் என்ற ஆய்வு நிறுவனம் கணக்கெடுத்ததில் முதல் பத்து நகரங்களில் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜுரிச், ஜெனீவா, பெர்ன் ஆகிய மூன்று நகரங்கள் இடம் பெற்றுள்ளன.
அரசியல் நிலைப்பாடு, குறைவான குற்றங்கள், நல்ல மருத்துவ வசதி ஆகியன வெளிநாட்டிலிருந்து இங்கு வந்து தொழில் நடத்துவோர், பணிபுரிவோர், படிக்கும் மாணவர் ஆகிய
சுவிட்சர்லாந்தில் சூரிச் மாநிலத்தில் உள்ள எம்பிராச் நகராட்சியில் உள்ள புகலிட மையத்தில் தங்கியிருந்த டுனீஷியர் ஒருவர் அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அவரைச் சுட்ட சில நிமிடங்களில் காவல்துறைக்கு தொலைபேசித் தகவல் வந்தது.
சூரிச் காவலர் சம்பவ இடத்திற்குச் சென்றபோது துப்பாக்கியால் சுட்ட காயங்களுடன்

புலனாய்வுப் பிரிவினரால் வல்வெட்டித்துறை மாணவன் கடத்தல் - மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு
வ்ல்வெட்டித்துறையில் தண்ணீர் எடுக்கச் சென்ற பாடசாலை மாணவனை படைப்புலனாய்வாளர்கள் வீட்டாருக்குத் தெரியாமல் கடத்திச் சென்ற நிலையில் குறித்த மாணவனைக் காணாத பெற்றோர் யாழ்.மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளனர்.
]
யாழ்ப்பாணத்தில் எவ்வித முன்னறிவித்தலுமின்றி பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் 10 பேர் கைது செய்யப்பட்டு கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று பிற்பகல் கொழும்பிலிருந்து வருகை தந்த குற்றப்புலனாய்வு பிரிவினர் சாவகச்சேரி மற்றும் கோப்பாய் பொலிஸ் நிலையங்களுக்கு வருகை தந்து, குறித்த நபர்களை அழைத்து சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
கிராண்ட்பாஸில் நடந்தது முக்கொலை?: மீட்கப்பட்ட கடிதத்தின் கையெழுத்து கணவன் மனைவியுடையது அல்ல!
கடந்த 26ம் திகதி கிராண்ட்பாஸ் பகுதியில் தாய், தந்தை மற்றும் இரண்டு வயது குழந்தை ஆகியோர் சடலங்களாக பொலிஸாரினால் மீட்கப்பட்டன.

மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து பேராதனை பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் மற்றும் மாணவர்களின் கைதுஇ பெண் மாணவர்களின் விடுதிக்குள் இராணுவத்தினர் நுழைந்தமை ஆகியவற்றை கண்டித்து பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் இன்று பகல் பாரிய எதிர்ப்பு
இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 273 ரன்கள் சேர்த்தது. 
கூக் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் போட்டித் தொடரில் அகமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா 9 விக்கெட் வித்தி
மணமகன் கொலை: மனைவியுடன் தொடர்பு என்பதால் நண்பன் வெறிச்செயல்?
செய்யாறு அடுத்த செய்யனூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (25). இவர் தனது திருமண அழைப்பிதழை உறவினர்களுக்கு கொடுப்பதற்காக ஆம்பூருக்கு சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை.

அவதூறு வழக்கு:விஜயகாந்த் ஆஜராக உத்தரவு
முதல்வர் ஜெயலலிதாவை விருதுநகரில் அவதூறாக பேசிய வழக்கில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், 2013 ஜனவரி 18-ம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக நீதிபதி ஆர்.கிருஷ்ணமூர்த்தி புதன்கிழமை உத்தரவிட்டார்.

இனியும் பாமகவில் தலித்துக்கள் இருப்பது நியாயம் இல்லை என்பதை உணர்ந்து விலகுகிறோம்: பாமக மா.செ. பேட்டி
 

பாமக நிறுவனர் ராமதாசின் தலித் விரோத போக்கை கண்டித்து பாமவில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் வேலூர் மாவட்டச் செயலாளர் சாமுவேல் செல்லப்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

ad

ad