நீலகிரி குன்னூலிருந்து 36 கிலோ மீட்டர் மலைத்தொலைவின் மேல் இருக்கிறது குந்தா தாலுக்காவிலிருக்கும் எடக்காடு. 11 மணிக்குள் நடையாய் நடந்து எல்லோரும் வந்து சேர்ந் திருக்க முதலமைச்சர் ஜெ. மதியம் 1.20 மணியளவில்தான் மேடைக்கு வருவார் என்பதால் எடக்காடு பெண்களைச் சந்தித் தோம்.
இங்குதான் தமிழக முதல்வர் ஜெ., கடந்த 4-01-13ந் தேதி உடலை வருடும் இதமான தென்றலுக்கும், வானத்தைத் தொடும் அளவு வளர்ந்திருக்கும் மரங்களுக்கும், காற்றோடு கலந்து வீசும் ரம்யமான யூகலிப்டஸின் நறுமணத்திற்கு மிடையே குந்தா தொழிற் கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலையின் 50-வது ஆண்டு விழாவில்... அத்தொழிற்சாலையின் கண்காட்சி யைத் திறந்து வைத்து பின் பொன்விழாவில் கலந்து கொள்கிறார் என்ற அறிவிப்பில் நீலகிரியே சின்னாபின்னமாக்கப்பட்டது.