புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 மார்., 2013


இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தின் இறுதி வரைவு தொடர்பில் சர்வதேச மன்னிப்புச்சபை கருத்து
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தற்போதைய அமர்வில் அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மான வரைவு உறுப்பு நாடுகளுக்கு சுற்றுக்கு
புங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்பிரமணியர் கோவில்,ஊரதீவு பாணா விடை சிவன் ஆலயம் என்பன  புனருத்தாரணம் செய்யப்படுகிறது படங்கள் இணைக்கப் பட்டுள்ளன 

தாயகத்தின் போர்க்கால சூழ்நிலையை அடுத்து பாரிய அழிவுகளை சந்தித்த புங்குடுதீவு ஆலயங்கள் சீரமைக்கப் பட்டு மீண்டும் கும்பாபிசேஷங்கள் செய்யப் பட்டு வருகின்றன .இந்த வரிசையில் மடத்துவெளி முருகன் ஆலயமும் சுவிஸ் வாழ் மடத்துவெளி ஊரதீவு மக்களின் கூட்டு முயற்சியில்
புதிய ராஜகோபுரம் அமைக்கப் பட்டு வருவதோடு ஆலயம் முற்று முழுதாக திருத்தி அமைக்கப் பட்டு  முடிவுறும் நிலையில் காணப் படுகிறது .பாரிய இயந்திரங்களை பயன்படுத்தி நவீனமுறையில் இந்த ஆலயம் கும்பாபிசெகாத் துக்கு தயாராகி வரும் வேளையில் இன்னும் பல திருப்பணி வேலைகள் தேங்கி உள்ளன.இது வரை பங்களிப்பு செய்யாதவர்கள் மற்ற நாடுகளில் இருந்து கூட இதற்கு உதவிடுமாறு அன்போடு அழைக்கின்றோம் .இந்த ஆலய திருப்பணி வேலைகளை கனடாவில் இருந்து தாயகம் திரும்பி உள்ள சமூக சேவையாளர் அ .சண்முகநாதன் (கண்ணாடி )அவர்களே நேரடியாக பார்வையிட்டு கவனித்து வருகிறார் ஊரதீவு பானாவிடை சிவன் ஆலயமும் முற்று முழு தாக மேலும் சீரமைக்கப்டுகிறது .சுவிசில் உதவ விரும்புவோர் தொடர்பு கொள்ளவும் அருணாசலம் கைலாசநாதன் (குழந்தை )

                                          எனது கண்ணீர் அஞ்சலி 
                                                          சசிபாரதி 
                                  முன்னாள் ஈழநாடு ஆசிரியபீடம் 
எண்பதுகளின் ஆரம்பத்தில் நான் ஈழநாடு நிருபராக  இருந்த போது  மதிப்புக்குரிய சசி பாரதி அவர்களை எப்போதாவது காரியாலயத்தில் கண்டு ஓரளவு புன்முறுவல் பழக்கம்  தான் . இருந்தாலும் இவரது எழுத்துக்களை மொண்டிருகிறேன்.பெரும்பாலான காலம் இவர் ஒப்பு நோக்குனராகவும் சஞ்சிகை ஆசிரியராகவும் இருந்திருக்கிறார்.எனது இளமைக் காலத்தில் எல்லா ஞாயிறு பதிப்புகளும் எம்மை கவர்ந்திழுக்கும் .ஆனாலும் ஈழநாடு மட்டுமே கவர்ச்சி இல்லாது சினிமா இல்லாது வண்ணக் கலவைகள் இல்லாது தமிழை மட்டுமே நம்பி வெளிவந்து எங்கள் இளமைபருவத்தை சுண்டி இழுத்த பெருமையை பெற்றது .இந்த பெருமை மிகு ஞாயிறு வாரமலரின் பிரம்மா .சசிபாரதி இவரது காலத்தில் சரிசமமாக உதவி ஆசிரியராக இருந்த  எஸ்.எஸ்.குகநாதன் அவர்களை எனது உயர்ந்த நண்பனாக கிடைத்த பேறு பெற்றாலும் இவரோடு பழகும் காலம்  அரிதாகவே  எட்டியது .யாழ்ப்பான பத்திரிக்கை உலகின் முன்னோடி இன்று எம்மிடையே இல்லை வருந்துகிறேன் உங்களோடு இணைந்து .அஞ்சலிக்கிறேன்
                                    சிவ-சந்திரபாலன் -சுவிட்சர்லாந்து 
வவுனியாவில் 5 ஆயிரம் சிங்கள குடும்பங்களுடன் நாமல் கிராமம் : அசாத் சாலி


வவுனியாவில் நாமல் கிராமம் உருவாக்கப்பட்டு சிங்களக் குடியேற்றம் இடம்பெறுவதாக கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

சட்டக்கல்லூரி மாணவர்கள் மறியலில் கைகலப்பு : திருச்சி பரபரப்பு ( படங்கள் )
இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க கோரி திருச்சி சட்டக்கல்லூரி மாண வர்கள் டிவி.எஸ். டோல்கேட் அருகே சாலை மறியலில் ஈடுபட்டார்கள். 


சட்டக்கல்லூரி மாணவர்கள் பஸ் மறியல்
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக செங்கல்பட்டில் சட்டக்கல்லூரி மாணவர்கள் இன்று 3-வது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். Photos

சென்னை தாம்பரம் அருகே கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை
சென்னை மேற்கு தாம்பரம் அருகே இன்று (13.03.2013) அதிகாலை கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

5 துரோகிகள் விலகி போனதால் எங்கள் கட்சி அழிந்துவிடாது: பிரேமலதா

 
தே.மு.தி.க. மகளிர் அணி சார்பில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, ஆசிட் வீச்சு, விலைவாசி உயர்வை கண்டித்தும், பூரண மதுவிலக்கு கோரியும் வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர்கள் 18 பேர் கைது
ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேர் 4 படகுகளில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது அவர்களை இலங்கை கடற்படை கைது செய்து,  தலைமன்னார் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள் ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.பிடித்துச் செல்லப்பட்ட மீனவர்கள் 18 பேரும் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
ஜெனிவாவில் சிறிலங்காவுக்குத் தொடங்கியது தலைவலி
ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 22வது அமர்வில்  நேற்று இடம்பெற்ற பொதுவிவாதத்தில் சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளும் உரையாற்றியுள்ளனர். 
கொல்ல வேண்டாம் என்று கெஞ்சிய நடேசனின் மனைவியை சுட்டுக்கொன்ற சிறிலங்கா இராணுவ மேஜர்
தான் ஒரு சிங்களவர் என்றும் தன்னை கொல்ல வேண்டாம் என்றும் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசனின் மனைவி வினிதா உரக்கக் குரல் எழுப்பிய போதும், சிறிலங்கா இராணுவத்தின் சிறப்புப் படைப்பிரிவின் மேஜர் ஒருவர் அவரைச் சுட்டுக் கொன்றார். 

13 மார்., 2013


ஐ.நாவுக்கு தகவல் வழங்கும் இலங்கையர்களைப் பாதுகாப்பது ஐ.நாவின் கடமை! நவநீதம்பிள்ளை சுட்டிக்காட்டு
ஐநா மனித உரிமைகள் பேரவைக்கு தகவல்களை வழங்கும் மக்களின் பாதுகாப்பை இலங்கையில் உறுதிப்படுத்துவது ஐக்கிய நாடுகளின் சபையினது தலையாய கடமையாக இருப்பதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை
‘‘மூணு பிள்ளைகளப் பெத்தும் இப்பிடி அனாதியா கிடந்து அவதிப்படுறேன்... இருக்கனா, போயிட்டேனான்னு கூட எதுவும் வந்து பாக்கமாட்டேங்குது. என் பொணத்துக்கும் நானேதான் கொள்ளி வச்சுக்கணும் போலருக்கு... - கண்கள் கலங்க சகுந்தலா சொன்ன இந்த வார்த்தைகளுக்கு அக்கம்பக்கத்தினர் ஆறுதல் மட்டுமே சொல்லமுடிந்தது. தனிமைத் துயரால் கொஞ்சம் கொஞ்சமாக மரணித்து வந்த அந்தத் தாய், சுடுகாட்டுக்குச் சென்று, உடம்பில் மண்ணெண்ணெய் ஊற்றி தனக்குத்தானே கொள்ளி வைத்துக்கொண்டார்.

இதயமுள்ள மனிதர்களின் உயிரைப் பிடித்து உலுக்குகிறது சகுந்தலாவின் மரணம். பெற்று, வளர்த்து, ஆளாக்கி சமூகத்தில் உலவவிடும் பெற்றோரை, முதுமையில் தள்ளிவைத்து தனிமையில் தவிக்கவிடும்


இலங்கைக்கு எதிராக செயற்பட்ட எவரும் நாடு திரும்ப முடியாது!?

 
piyasriஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக செயற்பட்ட யாரும் மீண்டும் நாட்டிற்குள் வர முடியாது. இந்தியாவில் தேவையென்றால் தமிழீழம் ஒன்றை அமைத்துக் கொள்ளலாம். இலங்கையில் அந்த பேச்சுக்கே இடமில்லை என்று தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகச் செயாலாளர் பியசிறி விஜேநாயக்க தெரிவித்தார்.அமெரிக்காவினதும் இந்தியாவினதும் கூட்டு முயற்சியே ஐ.நா. மனித உரிமை பேரவையின் இலங்கைக்கு எதிரான தீர்மானங்களாகும். எனவே இதனை அடியோடு நிராகரித்து 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக ஒழித்து, வடமாகாண சபை தேர்தலை அரசு நடத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.



ஐ.நா. மனித உரிமைப் பேரவைக்கு எடுத்துச் செல்லப்பட்ட தமிழர்கள் திருப்பி அனுப்பப்படும் விவகாரம

 
20130311_140232-1 (2)சுவிசில் அகதித் தஞ்சம் மறுக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்களைத் திருப்பி அனுப்புவதை ஆட்சேபித்து ஆர்ப்பாட்டமும் மனுக் கையளிப்பும் திங்கட்கிழமை பிற்பகல் ஜெனீவா நகரில்

ஜெனீவா சென்ற கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி இழக்கும் அபாயம்!

 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த 5 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கைது செய்வதற்கான இரகசியத் திட்டம் ஒன்று அரசிடம் இருப்பதாகக் கூறப்படுகின்றது. ஜெனிவாவில் இருந்து

'உடனடியான அனைத்துலக விசாரணை வேண்டும்' ஐ.நா மனித உரிமைச் சபையில் நா.க.த. அரசு வெளியிட்ட கையேடு
இலங்கை தொடர்பில் சுதந்திரமானதொரு அனைத்துலக விசாரணை வேண்டும் என்ற குரல்கள் பல்வேறு தரப்புக்களிடம் இருந்தும் வலுத்து வரும் நிலையில் 'உடனடியான அனைத்துலக விசாரணை வேண்டும்: தமிழ் மக்கள் மீதான திட்டமிட்ட மனித உரிமை மீறல்கள் ' எனும்

12 மார்., 2013


இசைப்பிரியா தொடர்பில் கருத்து! இராணுவத்தினரின் சாபக்கேடு ரணிலை சும்மாவிடாது!- பஷில்
இராணுவத்தினரின் சாபக்கேடு ரணில் விக்கிரமசிங்கவை வெறுமனே விட்டுவிடாது என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளருமான பஷில் ராஜபக்ச தெரிவித்தார்.

வேலை நிறுத்தம் வெற்றி! இனிமேலாவது இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும்!- கருணாநி
தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் தமிழின உணர்வோடு பொங்கியெழுந்து இந்தப் பொது வேலை நிறுத்தத்தை மிகக் பெரிய வெற்றியாக ஆக்கித் தந்திருக்கிறார்கள். இந்தப் பெரிய வெற்றிகரமான

மகிந்த ராஜபக்ச அரசுக்கு எதிராக ஜெனீவாவில் 62 இலங்கையர்கள்
ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் மகிந்த தலைமையிலான இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்வைக்கவுள்ள பிரேரணைக்கு வலுச்சேர்க்கும் வகையில் அரச சார்பற்ற நிறுவனங்களைச் சார்ந்த சுமார் 62  இலங்கைப் பிரதிநிதிகள் அங்கு சென்றுள்ளனர் என்று செய்திகள் வெளிவந்துள்ளன.

ad

ad