-
27 ஆக., 2013
ஆளும் தரப்பின் எடுபிடிகளாக பொலிஸ்! கூட்டமைப்பு வேட்பாளரை கொலை செய்ய முற்பட்ட பொலிஸ் அதிகாரி!
யாழ்.பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி சமன்சிகாரா தன்னை கொலை செய்ய முயற்சித்ததாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வடமாகாணசபை வேட்பாளர் தம்பிராசா.
குற்றஞ்சாட்டியுள்ளார்.யாழ்.நகரப்பகுதியினில் தன் மீது நடத்தப்பட்ட சுதந்திரக்கட்சி ஆதரவாளர்களது தாக்குதல் பற்றி நியாயம் கேட்கச்சென்றிருந்த வேளையினிலேயே தன்னை கொலை செய்ய அவர் முயற்சித்ததாக தம்பிராசா மேலும்
26 ஆக., 2013
இலங்கையில் யுத்தம் முடிந்தும் பயங்கரவாதச் சட்டம் ஏன் இருக்கிறது; ஹக்கீமிடம் நவிப்பிள்ளை கேள்வி
தடுப்புக் காவலில் உள்ளவர்களின் பல வழக்குகள் ஏன் நிலுவையில் இருக்கின்றது அவர்களை பார்வையிடுவதற்கு உறவினர்களுக்கு அனுமதி வழங்கப்படாமை தொடர்பிலும் ஐ.நா மனித உரிமையாளர் கேட்டறிந்தார் என ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
யாழ் நகரில் தடம் பதித்தார் நவநீதம்பிள்ளை! நாளை கிளிநொச்சிக்கு பயணம்!
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார்.
விசேட விமானத்தின் மூலமாக யாழ் சென்ற ஆணையாளர் 7.00 மணியளவில் தரையிறங்கினார்.
விமானம் மூலம் பலாலி வந்தடைந்த அவர் இன்று மாலை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு விஜயம்
’தலைவா’ படத்தயாரிப்பாளர் மிரட்டல் :
சத்யராஜ் பட இயக்குநர் கமிஷனரிடம் பரபரப்பு புகார்
‘உளவுத்துறை’, ‘ஜனனம்’ போன்ற படங்களை இயக்கியிருப்பவர் ரமேஷ் செல்வன். தற்போது சத்யராஜ் நடிப்பில் ‘கலவரம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், இவர் சென்னை கமிஷனர் அலுவலக த்தில் ‘தலைவா’ திரைப்பட தயாரிப்பாளர் மீது புகார் மனு ஒன்றினை அளித்துள்ளார்.
சுஜூத் சர்க்கார் இயக்கிய ஜான் ஆப்ரஹாம் நடித்துள்ள "மெட்ராஸ் கஃபே' என்ற ஹிந்தி திரைப்படத்தை சென்னையில் வெளியிடுவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழ் தேசிய அமைப்புகளும் ஈழ ஆதரவு அமைப்புகளும் மிகக் கடுமையான கண்டனங்களை முன்வைத்து வருகின்றன. கலைஞர், வைகோ, ராமதாஸ் உள்ளிட்ட தமிழகத்தின் எதிர்க் கட்சித் தலைவர்கள் பலரும் படத்தின் மீதான எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
""ஹலோ தலைவரே... கொடநாட்டிலிருந்து ஜெ. ரிட்டன் ஆன பிறகு எந்த மந்திரிக்குப் பதவி பறிபோகுமோன்னு 32 மந்திரிகளும் திக்..திக் மனநிலை யோடுதான் இருந்தாங்க. ஒருத்தரையொருத்தர் சந்திச்சிக் கிட்டாக்கூட இதைப் பற்றித்தான் பேசிக்கிட்டாங்க. இப்பவும்கூட மந்திரிசபை மாற்றம் பற்றிய தகவல்கள் வந்துக்கிட்டேதான் இருக்குது. ஆனாலும், மந்திரிகள் பலரும் இப்ப பதவி பறிப்பு பயமில்லாம ஓரளவு தைரியமாத்தான் இருக்காங்க. சக மந்திரிகள்கிட்டே பேசுறப்ப, மேலிடம் முன்னே மாதிரி கோபப்படுறதில்லை.. கோபப்பட்டாலும் பதவியைப் பறிக்கிறதில்லைன்னு சொல்றாங்க.''
தமிழ் மக்களின் தேசிய கடமை |
30 வருடங்களாக இந்த நாட்டில் நிலவிய பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டது. போர்ச் சூழல் முற்றாகவே நீங்கி சமாதானமும் இனங்களுக்கிடையேயான நல்லிணக்கம் உருவாக்கப்பட்டுவிட்டது. |
யாழ்ப்பாணத்தில் த.தே.கூவின் பரப்புரைக் கூட்டமும் வேட்பாளர் அறிமுகமும்
வடமாகாண சபைத் தேர்தக்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பரப்புரைக் கூட்டமும் வேட்பாளர் அறிமுகமும் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெற்றது.
‘இலங்கையில் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மற்றும் வட மாகாண முதலமைச்சர் வேட்பாளர் சி.வி. விக்னேஸ்வரன் போன்ற சம்பந்திகள் போல் ஆயிரக்கணக்கில் உருவாக வேண்டும். அப்போது தான் இன மத தீவிரவாதம் தகர்த்தெறியப்படும் நல்லுறவு நிலவும்.
இவ்வாறு கொழும்பு இலங்கை மன்றக்கல்லூரியில் சனியன்று இடம்பெற்ற சர்வமத தலைவர்கள் மாநாட்டில் உரையாற்றிய நுவரெலியா மாவட்டம் சார்பில் பேசிய வண. குசலஞான தேரர் தெரிவித்தார்.
சென்னை : 3 இலங்கைத்தமிழர்கள் கைது
சென்னை பூந்தமல்லி சிறப்பு முகாமில் உண்ணாவிரதம் இருந்த3 பேர் கைது செய்யப்பட்டனர். திறந்தவெளி முகாமுக்கு மாற்றக்கோரி சந்திரகுமார் 10 நாளகாக உண்ணாவிரத இருந்தார். கிருஷ்ணமூர்த்தி 9வது நாள், மகேஸ்வரன் 5 நாளாக உண்ணாவிரதம் இருந்தனர். தற்கொலைக்கு முயன்றதாக 3 பேரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தது போலீஸ்.
25 ஆக., 2013
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)