ரங்கசாமியின் கோரிக்கையை ஏற்றார் ஜெ., :புதுவை சிறைக்கைதிகள் திருச்சி சிறைக்கு மாற்றம்
புதுச்சேரி சிறையில் அடைக்கப்பட்டுள்ள 26 கைதிகள் நாளை திருச்சி மத்திய சிறைக்கு அழைத்து வரப்படுகின்றனர். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தம்புள்ளை அம்மன் கோவிலிலிருந்து அனைவரும் வெளியேற வேண்டும்!- இனாமலுவ தேரர்
தம்புள்ளை அம்மன் கோவில் அமைந்துள்ள இடத்தில் குளம் ஒன்று நிர்மாணிக்கும் பணி முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் தம்புள்ளை விகாராதிபதி இனாமலுவ தேரரினால் அப்பகுதியிலுள்ள மக்கள் இன்று வெள்ளிக்கிழமை அங்கிருந்து வெளியேற வேண்டுமென காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நடைபெற்ற கொலை மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்கள் பற்றி ஐ.நாவுக்கு அறிக்கை
இலங்கையில் கடந்த 2007ம் ஆண்டு முதல் 2011 ம் ஆண்டு வரையான 5 வருட காலத்தில் நடந்த கொலைச் சம்பவங்கள், பாலியல் துஷ்பிரயோகங்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய அறிக்கை ஐக்கிய
இராணுவம் நிறுத்திய வேட்பாளர்களுடன் ஹத்துருசிங்க வல்லிபுரக் கோயிலில் வழிபாடு!- ஆதாரப் புகைப்படங்கள் கசிந்தன
யாழ். இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்கவுடன் இராணுவ வேட்பாளர்கள், வடமராட்சியிலுள்ள வல்லிபுரக் கோயிலுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
வடமாகாண சபைத் தேர்தலில் அரசாங்க கட்சியில் இராணுவத்தினரால் சில வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், அதனை உறுதிப்படுத்துவது போல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அனந்தி வீட்டில் நடந்த தாக்குதலுடன் இராணுவத்திற்கு தொடர்பில்லை!- இராணுவப் பேச்சாளர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கீழ் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் அனந்தி (எழிலன்) சசிதரனின் வீட்டில் இடம்பெற்ற தாக்குதலுக்கும் இராணுவத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்தார்.
இலங்கை மீது போர்க்குற்றம் சுமத்தும் அமெரிக்கா உட்பட 5 நாடுகள் புலிகளுக்கு ஆயுதங்களை விற்றுள்ளன.
இலங்கை அரசாங்கத்தின் மீது போர்க் குற்றச்சாட்டுக்களை சுமத்தும் நாடுகள், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்துள்ளன. குறிப்பாக ஐந்து நாடுகள் இவ்வாறு புலிகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்துள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அனந்தி சசிதரன் மீது இனவாதத் தாக்குதல்: ஈழத்தமிழரை அமெரிக்கா உடனே காப்பாற்ற வேண்டும்: ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு
வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், வீட்டு சின்னத்தில் இலக்கம் 1 போட்டியிடும் திருமதி அனந்தி சசிதரன் (எழிலன்) அவர்கள் மீது இன்று அதிகாலை 12.20 மணியளவில் சிங்கள இராணுவம் மற்றும் ஈபிடிபி ஆகியோர் இணைந்து கொலை வெறித்தாக்குதலை மேற்கொண்டார்கள். இது திருமதி அனந்தி சசிதரன்(எழிலன்) அவர்கள் மீதான தாக்குதல் என்று மட்டும் பாராமல், எமது உரிமைக்காக குரல் கொடுத்தால் இப்படித்தான் தாக்குவோம் என்று சிங்கள அரசாங்கம் தமிழருக்கு மீண்டும் கூறியுள்ள செய்தியாகும்.
அனந்தி எழிலன் மீது நள்ளிரவில் ஈபிடிபியும் இராணுவமும் இணைந்து பாரிய தாக்குதல் சுழிபுரத்தில் பதட்டம்
சுழிபுரத்தில் அமைந்துள்ள அனந்தியின் வீட்டை நடுநிசியில் இராணுவத்தினரும் ஈபிடிபியினரும் வாள், கத்திகள், துப்பாக்கிகள் சகிதம் சுற்றி வளைத்ததாக அனந்தி தெரிவித்துள்ளார்.
உங்கள் ஈழத்து உறவுகளை வடமாகாண தேர்தலில் வாக்களிக்க ஊக்குவியுங்கள்-கவிஞர் பகீரதன் கனடா
”அரசியல் ஒரு சூது”, ”அரசியல்வாதிகள் சுயநலவாதிகள்” என்கின்ற கருத்து காலம் காலமாக ஒப்புவிக்கப்பட்டு வந்தாலும், பல்வேறு சந்தர்ப்பங்களில், மேலைத்தேச-கீழைத்தேச அரசியலில் இது நிரூபணமாகியிருப்பினும், அரசியலில் இருந்து நாம் பிரிக்கமுடியாதவர்களாக உள்ளோம்
ஈபிடிபியினரும் இராணுவ புலனாய்வு பிரிவினருமே தனது வீட்டை சுற்றிவளைத்து தாக்கியதாக யாழ். மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் ஆனந்தி எழிலன் தெரிவித்துள்ளார்.
யாழ். சுழிபுரத்தில் உள்ள ஆனந்தியின் வீடு இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்களின் தாக்குதலுக்கு உள்ளானது. Video
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணையவுள்ளார் பதுமன்
தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட முன்னாள் கட்டளைத் தளபதி பதுமன் என்ற சிவசுப்ரமணியம் வரதநாதன் விரைவில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்து கொள்ள உள்ளதாக தெரியவருகிறது.
கிளிநொச்சி மாவட்டத்தில் கீதாஞ்சலிக்காக கபே அமைப்பு தேர்தல் பரப்புரை
கிளிநொச்சி மாவட்டத்தில் அரச கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியில் போட்டியிடும் கீதாஞ்சலிக்காக கபே அமைப்பு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.
தேர்தல் கண்காணிப்புக்கென இலங்கை அரசால் உருவாக்கப்பட்ட அரசின் புலனாய்வுப் பிரிவான கபே அமைப்பு சர்வதேசத்திற்கு தன்னையொரு நேர்மையானதும்,
கே.பி.யை அரசாங்கம் தனது தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தியமை பாரதூரமான குற்றம்: ஐ.தே.க
இலங்கையில் ஆயிரக்கணக்கான அப்பாவிகளின் உயிர்கள் அழிக்கப்பட்டத்தில் நேரடியாக பொறுப்புக் கூறவேண்டிய கே.பி. என்ற குமரன் பத்மநாதனை மக்களின் பணத்தில் அரசாங்கத்தின் தேர்தல் பிரசாரகராக செயற்பட இடமளித்தமை பாரதூரமா
அண்ணா மேம்பாலத்தில் தற்கொலை செய்த பெண்ணின் காதலன் கைது
கோடம்பாக்கம் காமராஜர் கிழக்கு தெருவில் குடியிருந்தவர் அஞ்சலி (26). மேற்கு வங்காளம் மாநிலத்தை சேர்ந்த இவர் நேற்று மாலை சென்னை அண்ணா மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொணடார். இதையறிந்
சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்து நீக்கம் செய்யப்பட்டவரும், நீலகிரி மாவட்ட ஊட்டி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வுமான புத்திசந்திரன் கைது செய்யப்பட்டார். அவருடன் வந்த 29 பேரும் கைது செய்யப்பட்டனர்.
காணாமல் போனவர்களின் அடையாளமே நான்: எழிலனின் மனைவி அனந்தி தெரிவிப்பு
நான் வெறுமனே விடுதலைப் புலிகளது திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராகவிருந்த எழிலனின் மனைவி என்பதற்கப்பால் காணாமல் போயுள்ள ஆயிரமாயிரம் தமிழர்களதும் குடும்பங்களதும் அடையாளமாகவிருக்கின்றேன் என்பதே உண்மையாகும்.
ஆனால் இலங்கை அரசோ காணாமல் போனோர்களது நிலைபற்றி வாய் திறக்க மறுக்கின்ற அதே வேளை, அதற்காக குரல் கொடுப்பவர்களை அச்சுறுத்தி வாய்மூட வைக்க முற்படுவதாக அனந்தி சசிதரன்(எழிலன்) குற்றஞ்சாட்டியுள்ளார்.