புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 நவ., 2013

உலகின் சக்தி வாய்ந்த நபர்களின் பட்டியல்: பிளாட்டர் இடம்பெற்றார்

இந்தாண்டுக்கான உலகின் சக்தி வாய்ந்த நபர்களின் பட்டியலில் பிபா கால்பந்தாட்ட அமைப்பின் அதிபர் பிளாட்டர் இடம்பெற்றுள்ளார்.
லண்டனில் மாபெரும் பேரணிக்கு தயாராகும் பிரித்தானிய தமிழர்கள்
இலங்கையில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டிற்கு பிரிட்டனின் பிரதமர் செல்வதைக் கண்டித்து லண்டனில் மாபெரும் பேரணி ஒன்றை பிரித்தானிய தமிழர் பேரவை ஏற்பாடு செய்துள்ளது.
கல்முனை மேயர் சிராஸ் பதவியிலிருந்து தூக்கப்பட்டார்! ஹக்கீம் அதிரடி நடவடிக்கை
சுழற்சி முறை இணக்கப்பாட்டையும் கட்சியின் தீர்மானத்தையும் மீறியுள்ள கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் இன்று முதல் மேயராக செயற்பட முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் உத்தரவிட்டுள்ளார். 
வேலணை மத்திய கல்லூரி பரிசளிப்பு விழாவில் சிறீதரன் எம்.பி, வடமாகாண முதலமைச்சர் மற்றும் உறுப்பினர்க​ள் பங்கேற்பு
யாழ்ப்பாணம் வேலணை மத்திய கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் மற்றும் மாகாண உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
வேலணை மத்திய கல்லூரியின் கல்லூரி தின விழாவும் பரிசளிப்பு விழாவும் அதிபர் திரு சி. கிருபாகரன் தலைமையில் இன்று காலை நடைபெற்றது.
சம்பந்தன் தொலைபேசியில் முறையீடு! வீடுகள் இடிப்பதை நிறுத்துமாறு ஜனாதிபதி படையினருக்கு உத்தரவு
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் படையினரால் பொதுமக்களின் வீடுகள் இடித்தழிக்கப்படுவதை நிறுத்துமாறு ஜனாதிபதி யாழ்ப்பாண கட்டளை தளபதிக்கு உத்தரவிட்டுள்ளார்
'இலங்கை அரசாங்கத்திற்கான மிகவும் கடுமையான செய்தியுடன் இலங்கை செல்கிறோம்' பிரித்தானியா

இலங்கை அரசாங்கத்திற்கான மிகவும் கடுமையான செய்தியுடன் இலங்கை செல்கிறோம்' பிரித்தானியா

பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்ள கொழும்பு செல்லும் தமது பிரதிநிதிகள் இலங்கை அரசாங்கத்துக்கு ஒரு கடுமையான செய்தியை கொண்டு செல்லப்போவதாக பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
இலங்கையில் வெட்டி எரிக்கப்பட்ட இளம் பெண் .. பட்டப்பகலில் கொடூரம்
தன் காதலை ஏற்க்க மறுத்த பெண்ணின் கழுத்தை வெட்டி விட்டு தன்மேல் தீமூட்டிக் கொண்டு அந்த பெண்ணையும் கட்டி அணைத்து இரண்டு பேரும் நெருப்பில் கருகிப் போனார்கள் ........................................
தவிர்க்க முடியாத காரணத்தினால் எந்த இடத்தில் நடந்த சம்பவம் என்பதை எம்மால் வெளியிட முடியாது .

ஜோசப் பரராஜசிங்கத்தின் மனைவிக்கு சார்பாக கனடா நீதிமன்றம் தீர்ப்பு! நாடு கடத்தப்படும அபாயம் நீங்கியுள்ளது

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் மனைவி “பயங்கரவாத சந்தேகநபர்” என்ற வகுதிக்குள் உள்ளடக்கப்படமாட்டார் என்று கனேடிய நீதிமன்றம் ஒன்று
உயிரோடு பிடிக்கப்பட்டு கொல்லப்பட்ட இசைப்பிரியா - சனல் 4 வெளியிட்ட புதிய போர்க்குற்ற ஆதாரம்

போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்காப் படையினரால் பிடிக்கப்பட்டு கொல்லப்பட்ட, தமிழீழத் தேசிய தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளரான, இசைப்பிரியா தொடர்பான புதிய போர்க்குற்ற ஆதாரம் ஒன்றை சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

வவுனியாவில் இன்று பண்டாரவன்னியன் நினைவு தின விழா நடைபெற்றது

இன்று வவுனியாவில் மாவீரன் பண்டாரவன்னியன் நினைவுதின விழா நடைபெற்றது. வவுனியா நகரில் உள்ள பண்டாரவன்னியன் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன் நகரசபை மண்டபத்தில் விழா நடைபெற்றது.  இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள்,

ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பின் ஏற்பாட்டில் அனந்தி அமெரிக்கா செல்கிறார்

வடமாகாணசபை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன் தமது ஏற்பாட்டில் அமெரிக்கா வருகிறார் என ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம், சிங்கள மக்கள் தங்களை மீள்குடியேற்றக் கோரி கொழும்பில் நேற்று ஆர்ப்பாட்டம் செய்த போது பிடித்த படம்.

அமைச்சரவை கூட்டத்தில் 8 முதலமைச்சர்கள் பங்கேற்பு:

வட மாகாண முதல்வர் வரவில்லை
ஜனாதிபதி தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் பங்கேற்கவில்லை என ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல
 வலி.வடக்கு வீடழிப்பு ஜனாதிபதியுடன் பேச்சு ;உதயனுக்குத் தெரிவித்தார் சம்பந்தன் 
வலி.வடக்கில் இராணுவத்தினரால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் வீடுகள் அழிப்பு நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ஷவுடன் இரண்டொரு தினங்களுக்குள் பேச்சு நடத்தப்படு
பெண்கள் மீதான வன்புணர்வு: இழிவுநிலை மாறவேண்டும்-வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் 
news
ஒரு பெண் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டால் அதை பெரிதாக்கிப் பாதிக்கப்பட்ட பெண்ணை இழிவுபடுத்தும் நிலைமையே இங்கு காணப் படுகின்றது. இந்த நிலை மாற வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். 
 
யாழ்ப்பாணம் மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பெண்கள் விழிப்புணர்வு தொடர்பான குறும்பட மற்றும்  அசையும் படவெளியீட்டு விழா

ஆலய இடிப்பு தொடர்பாக இதொகா ஆளுந்தரப்பிலிருந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் - மனோ

தம்புள்ளை என்பது மாத்தளை மாவட்டத்தின் ஒரு பகுதி. மாத்தளை மாவட்ட தமிழ் இந்து மக்கள் நடந்து முடிந்த மாகாணசபை தேர்தலில், இதொகா உறுப்பினர் ஒருவரை வாக்களித்து தெரிவு செய்துள்ளார்கள். ஆகவே இது காரணமாகவும், ஆளும் அரசில் அங்கம் வகிக்கும் பங்கா

விக்கினேஸ்வரனையும் சம்பந்தனையும் குறை கூறுவதற்கு முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புக்கு அருகதையில்லை -அரியநேத்திரன்

முதலமைச்சர் விக்னேஸ்வரனையும் சம்பந்தனையும் நாடகமாடுபவர்கள் என்று கூறுவதற்கு முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புக்கு எவ்வித தகுதியும் கிடையாது. அவ்வமைப்பின் கூற்றுக் கண்டிக்கத்தக்க விடயமாகும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன்

மிஸ் ஆசிய பிசிபிக் அழகிப் போட்டியில் பட்டத்தை வென்ற இந்திய அழகி
 


2013-ம் ஆண்டுக்கான மிஸ் ஆசிய பிசிபிக் அழகிப் போட்டி கொரியாவில் நடந்தது. இதில் 21 வயதான இந்திய அழகி சிருஷ்டி ரானா கலந்து கொண்டு பட்டத்தை வென்றார்.

சனல் போர் வெளியிட்ட புதிய போற்குற்ற ஆதாரம் -அதிர்ச்சி video

ad

ad