புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 டிச., 2013

 இனி வரும்காலங்களில் பல சிக்கல்களை நாங்கள் எதிர்கொள்ளப் போகின்றோம்; வடக்கு முதல்வர்
சட்ட திட்டங்களைக் குறைகூறிக்கொண்டு பதவிகளைப் பாதுகாக்க நாங்கள் ஆட்சிப்பீடம் வரவில்லை வடமாகாண மக்கள் என்ற முறையில் எமது அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கவே வந்துள்ளோம்.
கணவனைக் கொலை செய்து மலசலக் குளியில் போட்ட மனைவிக்கு மரண தண்டனை!
கணவனைத் தாக்கி கத்தியால் குத்திக் கொன்று அவரது உடலை மலசலக் குளியில் வீசிய மனைவி மற்றும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஆணொருவருக்கும் கேகாலை மேல்நீதிமன்ற
 வடக்கில் சகல நடவடிக்கைகளிலிருந்தும் இராணுவம் விலகிக்கொள்ள வேண்டும்; சலோகா பெயானி
சிறிலங்காவின் வடக்கில் இடம்பெயர்ந்த நிலையில் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்கள் மிகவும் ஆபத்தான நிலையிலேயே வாழ்ந்து வருவதாக இடம்பெயர்ந்தோர் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான

டெல்லியில் ஆட்சி அமைப்பது தொடர்பாக கெஜ்ரிவாலின் கட்சிக்கு துணைநிலை ஆளுநர் அழைப்பு
70 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட டெல்லி மாநிலத்தில் ஆட்சி அமைக்க வேண்டுமானால் 36 எம்எல்ஏக்களின் பலம் வேண்டும். பாஜக கூட்டணிக்கு 32 இடங்கள். அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு 28 இடங்கள். காங்கிரஸ் கட்சிக்கு 8 இடங்கள், சுயேட்சைக்கு 2 இடங்கள் கிடைத்தன. 
சட்டமன்றத்தில் மிகப் பெரும் கட்சி என்ற நிலையில் இருக்கும் பாஜகவை ஆட்சியமைக்க அல்லது நிலவும் தேக்க நிலையை மாற்ற பாஜக முயலவேண்டும் என்று கூறி துணை நிலை ஆளுநர்
வங்காளதேச போர்க்குற்றவாளி அப்துல் காதர் மொல்லா தூக்கில் போடப்பட்டார்
பங்களாதேஷ் பாகிஸ்தானிடமிருந்து 1971 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற நடத்திய போரில், மானுட குலத்துக்கு எதிரான குற்றங்கள் இழைத்ததாகத் தீர்ப்பளிக்கப்பட்ட, இஸ்லாமிய எதிர்க்கட்சியான ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் மூத்த தலைவரான அப்துல் காதர் முல்லா சற்று முன்னர் தூக்கிலிடப்பட்டார். இவர் நேற்று முந்தினம் செவ்வாய்க்கிழமையே தூக்கிலிடப்படவிருந்தார். ஆனால் நீதிமன்றத்தின் தலையீட்டின் பேரில் அவருக்கு வழங்கப்பட்ட மரணதண்டனை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் இவருக்கு அளிக்கப்பட்ட மரணதண்டனை சரியானதே என்று அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்த பின்னணியில் இவர் சற்றுமுன்னர் தூக்கிலிடப்பட்டதாக, வங்கதேசத்திலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. கடந்த செவ்வாய்க்கிழமை அவர் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு சில மணிநேரங்களுக்கு முன்னர், அவர் சமர்ப்பித்த மேல்முறையீட்டு மனு மீது நீதிபதிகள் விசாரணையை நடத்த உதவ, அவரது தூக்கு தண்டனை பரபரப்பான வகையில் நிறுத்திவைக்கப்பட்டது. முல்லாவுக்கு விதிக்கப்பட்ட தூக்குதண்டனையின் மீது நீதிமன்ற மேல் முறையீட்டை செய்ய அவருக்கு சந்தர்ப்பம் வழங்கப்படாமல் அவர் தூக்கிலிடப்பட்டால், அது சர்வதேச சட்டத்தை மீறும் செயலாகும் என்று மனித உரிமைக் குழுக்கள் எச்சரித்திருந்தன. போர்க்குற்றங்களுக்காக ஒரு அரசியல் தலைவர் தூக்கில் போடப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

12 டிச., 2013

வன்னியில் பால் கறக்கும் படையினர் கொழும்பு நிறுவனத்திற்கு ஏற்றுமதி செய்கின்றனர்
"நிலங்களை மட்டுமல்லாது மாடுகளையும் அபகரித்து வைத்திருக்கின்றனர்": ஐங்கரநேசன்
வன்னியில் பால் கறக்கும் படையினர் கொழும்பு நிறுவனத்திற்கு ஏற்றுமதி செய்கின்றனர்:-
வன்னியில் நிலங்களை மட்டுமல்லாது மாடுகளையும் அபகரித்து வைத்திருக்கும்
மஹிந்தவின் அழைப்பு! நானும் பிள்ளையும் வேண்டாமா? அரசியலுக்கு போகலாம் என்கிறார் மனைவி! - குழப்பத்தில் முரளிதரன்!
இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதனை அரசியலுக்குள் இழுப்பதற்கு மகிந்த ராஜபக்‌ஷ, அண்மைக் காலமாக பலத்த பிரயத்தனம் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காதலியின் தாயிடம் அடிவாங்கிய பொலிஸ் உத்தியோகத்தர்: யாழில் சம்பவம்
யாழ். பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் காதல் விவகாரம் காரணமாக அடிவாங்கிய சம்பவமொன்று இன்று இடம்பெற்றுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து ஆனந்த சங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டனி வெளியேற்றப்பட்டுவிட்டதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட போது தமிழரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ரெலோ, ஈபிஆர்எல்எப் ஆகிய கட்சிகளும் கட்சி சாரா உறுப்பினர்களும் உள்வாங்கப்பட்டிருந்தனர்.
ஓரினச்சேர்க்கை கிரிமினல் குற்றம்! இந்த குற்றத்திற்கு ஆயுள் தண்டனை வரை விதிக்கலாம்: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
ஓரினச்சேர்க்கையாளர்கள் சம்மதத்துடன் அந்தரங்கத்தில் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டால் குற்றம் அல்ல என்று, டெல்லி ஐகோர்ட்டு கடந்த 2009–ம் ஆண்டு பரபரப்பான தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு குறித்து
புங்குடுதீவு மடத்துவெளி சனசமூக நிலையத்தின் முன் பள்ளி  சிறப்பான முறையில் புனரமைப்பு செய்யப் பட்டு திறப்பு விழா செய்யப்பட்டது .இந்த  அரிய பணிகளை அ.சண்முகநாதன் என்னும் கண்ணாடி அவர்கள் முன்னின்று சீராக கவனித்து செய்து முடித்துள்ளார் . திறப்பு விழாவில் பாலசுப்பிரமணிய ஆலயக் குருக்கள்,ஒய்வு பெற்ற காவல்துறை அதிகாரியும் சமூக சேவகருமான சிவலிங்கம் .ஊடகவியலாளர் சதீபன் உட்பட ஏராளமானோர் கலந்து சிறப்பித்தனர் (படங்கள் )


ஈழத்தமிழர் எல்லாம் பெருமை அடையும் வண்ணம். 2014 இம் முறைசீனாவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் கனடாவை பிரதி நிதித்துவப்படுத்தும் வகையில். கனடா டொரோன்டோவில் வாழ்ந்து வரும் யாழ்ப்பாணம் கரவெட்டியை சொந்த இடமாக கொண்ட ஆன்ட்ரியா ஜெரோம் வரதராஜா என்ற முதல் தமிழ் இளம்பெண் TAEKWONDO எனும் விளையாடில் கனிஷட்ட பிரிவில் கலந்து கொள்ள இருக்கிறார். தமிழ்ர் என்ற ரீதீயில் பெருமை அடைவதுடன் அவர் வெற்றி பெற உலகத்தமிழ்ர் சார்பில் வாழ்த்துகின்றோம்……
சாத்வீகப் போர் மீண்டும் வெடிக்கும்; யசூசி அகாஷியிடம் சம்பந்தன் தெரிவிப்பு
"தமிழர் தாயகப் பகுதிகளில் அரசு கட்டவிழ்த்து விட்டுள்ள அடக்கு முறைகளை இன்னும் இரண்டு, மூன்று மாதங்களுக்குள் நிறுத்தாவிடின் தமிழ் மக்களை அணிதிரட்டி மாபெரும் சாத்வீகப் போராட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கும். இதை எவரா லும் தடுத்துநிறுத்த முடியாது." 
 
இவ்வாறு இலங்கைக்கான ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாஷியிடம் தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன்.
 
இலங்கையில் போரின் பின்னரான புனர்வாழ்வு மற்றும் நல்லிணக்க விடயங்கள் குறித்து ஆராய்வதற்காகக் கொழும்பு வந்துள்ள இலங்கைக்கான ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாஷிக்கும் இரா.சம்பந்தன் எம்.பி. தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமி
இனக்கொலை குற்றவாளிகள் தப்பவே முடியாது; வைகோ 
சிறிலங்காவில்  இடம்பெற்றது இனப் படுகொலைதான் என ஜெர்மனி மக்கள் தீர்ப்பாயம் அறிவித்துள்ளது. எனவே, இனக்கொலை குற்றவாளிகள் தப்பவே முடியாது என ம.தி.முக. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

11 டிச., 2013

டிசம்பர் மாத ராசிபலன்கள்

மேஷம்


இந்த மாதம் கோட்சார கிரக அமைப்பு உங்களுக்கு மிகமிக சாதகமாக இருப்பதால், உங்களுடைய எண்ணங்களும் திட்டங்களும் நீங்கள் விரும்பியபடியே நிறைவேறும். சில நேரங்களில் சில தடைகளும் குறுக்கீடுகளும் தென்பட்டாலும், அவற்றையெல்லாம் கடந்து உங்கள் வெற்றிப்பயணம் தொடரும். குடும்பத்தில் நிலவிய குழப்பங்களும்



            ம்பள விஷயத்தில் "2சி' என்பதில் பட்டம் நடிகை ஸ்ட்ராங்காக நிற்பதை கடந்த இதழில் சொல்லியிருந்தோம். "வம்பு'க்காக அவரின் டாடி... போன்போட்டு பட்டத்திடம் பேசியபோதும் அதே பதில்தான் கிடைத்ததாம்! அதனால் "வேறு ஹீரோயின் வச்சுக்கலாம்' என டாடி சொல்ல... டைரக்டர் பாண்டியும் ஓ.கே. மனநிலையில் இருக்க... "வம்பு' மட்டும் "பட்டம் தான் வேணும்' என பிடிவாதமாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது!

லயனுக்கு சீயான் என்றால் ஆகாது! அது சொந்த விவகாரம். இந்த கதைக்குத் தேவையில்லாத விவகாரமும்கூட!




"இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமையும் இந்திய அரசின் நிலை யும்' என்கிற தலைப்பில் சென்னையில் நடந்த கருத்தரங்கத்தில் பேசிய ப.சிதம்பரத்தின் ஆதரவாளரும் கடலூர் எம்.பி.யுமான கே.எஸ். அழகிரி, ஈழத்தில் நடந்த யுத்தத்தை நிறுத்த சிதம்பரம் கடும் முயற்சி எடுத்ததாகப் பதிவு செய்தார். இந்த நிலையில், கே.எஸ்.அழகிரி யை தொடர்புகொண்டு சில கேள்விகளைக் கேட்டோம்.
தமிழ்த்தேசிய உறவுகளே! ஊடகவியலாளர்களை அவமதிக்கும் வடக்கு மாகாண சபை? - சுகபோகங்கள்அம்பலப்படாமல் விடுவதற்கான நடவடிக்கையா? வடக்கு மாகாண சபையின் அமர்வுகளில் இடையில் மதிய போசனத்தில் தம்முடன் இணைந்து ஊடகவியலாளர்கள் பங்கெடுப்பதனால் தமக்கு இடையூறு ஏற்படுவதாக தமிழ் மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் தன்னிடம் முறையிட்டுள்ளதாக வடக்கு மாகாண சபையின் உறுப்பினரும் அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்ததைத் தொடர்ந்து ஊடகவியலாளர்கள் சபை நிதியில் பரிமாறப்படும் உணவு மற்றும் தேனீர்


             ""ஹலோ தலைவரே... …  இந்தியாவின் செமி ஃபைனல்ஸ் தேர்தல்னு சொல்லப்பட்ட 4 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க லம்ப்பா ஜெயித்திருப்பதால ஃபைனல்ஸ் தேர்தலான எம்.பி. தேர்தலிலும் இதே மாதிரியான ரிசல்ட்டுகள்தான் வருமோன்னு தமிழக கட்சிகளிடம் எதிர்பார்ப்பு அதிகமாகியிருக்குது.''


"இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமையும் இந்திய அரசின் நிலை யும்' என்கிற தலைப்பில் சென்னையில் நடந்த கருத்தரங்கத்தில் பேசிய ப.சிதம்பரத்தின் ஆதரவாளரும் கடலூர் எம்.பி.யுமான கே.எஸ். அழகிரி, ஈழத்தில் நடந்த யுத்தத்தை நிறுத்த சிதம்பரம் கடும் முயற்சி எடுத்ததாகப் பதிவு செய்தார். இந்த நிலையில், கே.எஸ்.அழகிரி யை தொடர்புகொண்டு சில கேள்விகளைக் கேட்டோம்.

ad

ad