மனம் திறந்து பேசும் தொல்.திருமாவளவன்
''தேர்தல் கூட்டணிகளில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை என்பது அத்தனை எளிய காரியம் அல்ல. 'முதலில் வந்தவர்களுக்கே முன்னுரிமை’ என்ற லாஜிக் எல்லாம் கூட்டணி அரசியலில் செல்லுபடி ஆகாது. நீண்டகால நட்பு, விசுவாசமான உறவு என்பதெல்லாம் தொகுதிப் பங்கீட்டுக்குப் பயன்படாது. வாக்கு வங்கியை நிறுவிக் காட்டுவதும், பேச்சுவார்த்தையில் அழுத்தம் ஏற்படுத்துவதுமே தொகுதி பேர வலிமைக்கு அடிப்படைத் தேவைகள். அதைவிட முக்கியம்,