புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 மார்., 2014

இலங்கை மீதான விசாரணை அமெரிக்கத் தீர்மானத்தில் வலுவடையும் நிலையில்! முக்கிய திருத்தங்களில் சுவிட்சர்லாந்து 
மனித உரிமைபகள் சபையில் பங்கெடுக்கு நாடுகள், சிவில் சமூக அமைப்புக்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எ.சுமந்திரன், சி.சிறீதரன், மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜெந்திரகுமார் பென்னம்பலம், செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் சட்டத்தரணிகளான குருபரன்
மணிவண்ணன், பிரதீப் எக்னலிகொடவின் மனைவி, நிமல்கா பெர்னான்டோ ஆகிய பிரதிநிதிகளுடன் இலங்கைத் துதரக அதிகாரிகளும் பங்கெடுத்திருந்தனர்.
இரண்டு மணி நேரம் நீடித்த ஆய்வில் கியூபா, ரஸ்யா, எகிப்து, சீனா, வியட்நாம் ஆகிய நாடுகள் தீர்மானத்தினை பலவீனப்படுத்தும் வகையில் தொடர்சியாக கருத்துக்களை முன்வைத்திருந்திருந்தனர்.
இலங்கை நல்லிணக்கு ஆணைக்குழுவின் நியாயத் தன்மையை சுட்டி வாதிட்டனர்.
இந்தியா சார்பில் அதிகாரி ஒருவர் பங்கெடுத்திருந்ததோடு கருத்துக்கள் எதனையும் கூறாமல் மௌனமாக இருந்தார்.
பெரும்பாலான மேற்குலக நாடுகள் தீர்மான திருத்தத்தினை வரவேற்றிருந்ததோடு, பன்னாட்டு விசாரணைக்கு ஆதரவு தெரிவித்ததுடன், சுவிட்சர்லாந்து, கனடா, பிரித்தானியா, இத்தாலி, ஜெர்மன், இன்னும் பல நாடுகள் இலங்கை அரசு மீது சர்வதேச பெறிமுறை ஏற்படுத்த வேண்டும் எனும் அர்த்தத்தில் கடும் தர்க்கத்தில் ஈடுபட்டனர்.
கூட்டம் முடியும் தறுவாயிலும் சுவிட்சர்லாந்து பெறுமதியான பல திருத்தங்கள் உள்வாங்கப்பட வேண்டும் என்றதுடன் சில விடயங்களில் இலங்கை நிலைமையை வாதிட்டது. ஏனைய மேற்குலக நாடுகள் வாதிட்டாலும் சுவிட்சர்லாந்தின் அக்கறையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
ஒரு சில நாடுகள் அனைத்துலக விசாணையை விளக்க வேண்டும் என கருத்துரைத்தன.
இலங்கை மீது விசாரணையினை மேற்கொள்வதற்கான அதிகாரம் ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளருக்கே உண்டென்றும், அவரது அலுவலகத்திற்கு இல்லை என கியூபா கருத்துரைத்தது.
இக் கலந்துரையாடலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.எ.சுமந்திரன் மற்றும் நிமல்கா பெர்னான்டோ ஆகியோர் இலங்கை மீதான சர்வதேச அழுத்தம் தொடர்பில் இக் கலந்துரையாடலில் கருத்துரைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இக்கலந்துரையாடல் இடம்பெற்ற போது இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பின்புறமாக இருந்து கூட்டம் முழுவதையும் அவதானித்ததுடன் சில வெளிநாட்டு இராஜதந்திரிகளையும் சந்தித்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

ad

ad