புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஏப்., 2015

தூய நீருக்காக திரண்ட யாழ்ப்பாணம்: எழுத்துருவில் பதில் கிடைக்கும் வரை தொடரும் உண்ணாவிரதம்


கழிவு ஒயிலால் பாதிக்கப்பட்ட வலிகாமப் பிரதேச மக்கள் இன்று காலை 10மணியளவில் நல்லூர் ஆலய முன்றலில் இன்று கவனயீர்ப்புப் போராட்டம்

6 ஏப்., 2015

திருமாவளவன் மீது கோவை பெண் கவிதா மீண்டும் பரபரப்பு புகார்




கோவையை சேர்ந்த கவிதா(34) என்பவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் மீது சென்னை

வடகொரியாவின் அறிவிப்பால் நடுங்கும் தென்கொரியா: தீபகற்பத்தில் நிலவும் பதற்றம் (வீடியோ இணைப்பு)


கிழக்கு கடற்பகுதியில் கப்பல் செல்லவேண்டாம் என வடகொரியா விடுத்துள்ள எச்சரிக்கையால் தென் கொரியா பீதியில் உறைந்துள்ளது.

மீள்குடியேறிய மக்களின் வீட்டுத்தேவைகள் தொடர்பில் சாதகமான முடிவை பெற்றுத்தருவோம் : உறுதியளித்தார் றொபின் மூடி


அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் றொபின் மூடிக்கும் யாழ்.மாட்ட அரச அதிபர் வேதநாயகம்  இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

தேர்தலை நடாத்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு நாட்டமில்லை: விஜயகலா


ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகள் தான் தேர்தலை நடத்த வேண்டும் என்ற

மூன்றாம் கட்ட மீள்குடியேற்ற காணிகள், நாளை பார்வையிடப்படும்


உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்த காணிகளில், 1000 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படும் என்ற, புதிய அரசின் அறிவித்தலுக்கமைய

பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு அதிரடி தடை: காரணம் என்ன?


துருக்கி நாட்டில் பேஸ்புக், டுவிட்டர், யூடியூப் உள்ளிட்ட 166 சமூக வலைதளங்களை அரசு அதிரடியாக முடக்கியுள்ளது.

பசில் ராஜபக்ச 24ம் திகதி பொலிஸில் வாக்குமூலம் அளிப்பார்?


முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச எதிர்வரும் 24ம் திகதி பொலிஸில் வாக்கு மூலம் அளிப்பார் என

விளம்பரத்துக்காக வாங்கினாரா 1 ரூபாய் சம்பளம்? (ஜெ. வழக்கு விசாரணை -15)


னல் பறக்க நடைபெற்ற ஜெயலலிதா மேல்முறையீட்டு மனு விசாரணையில் இருந்து... 

313 விதியின்படி குற்றவாளிகள் தரப்பு வாக்குமூலத்தை ஜெயலலிதாவின் வழக்கறிஞர் குமார் வாசித்தார். 
 
குமார்: போயஸ் கார்டன் மற்றும் போயஸ் கார்டன் கூடுதல் கட்டடம், ஹைதராபாத் திராட்சைத் தோட்டத்தில் உள்ள வீடுகள் மராமத்துப் பணிகள் செய்ததற்கான செலவை தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை போலீஸார் ரூ.13,65,31,900 எனத் தவறாக மதிப்பீடு

மத்திய அமைச்சருக்கு எதிராக சாலை மறியல் - சென்னையில் காங்கிரசார் 200 பேர் கைது


சென்னை திருவொறற்றியூரில் சாலை மறியல் செய்த காங்கிரஸ் கட்சியினர் 200 பேர் கைது செய்யப்பட்டனர். 

வடபகுதி நிதியே மகிந்தவின் மாளிகை : விஜயகலா சுட்டிக்காட்டு


news









மகிந்த அரசு அபிவிருத்தி என்று சொல்லி வீதிகளையும் கட்டடங்களையும் கட்டியுள்ளார்களே தவிர  போரால் அங்கவீனமானவர்களுக்கோ விதவைகள் ஆக்கப்பட்டவர்களுக்கோ எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை அத்தோடு வடபகுதிக்கென ஒதுக்கப்பட்ட நிதி எங்கே போய்விட்டது கே.கே.எஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மாளிகைக்கு தான் செலவளிக்கப்பட்டுள்ளது போல தெரிகிறது என மகளிர்

ஆட்சி மாற்றத்திற்கு அசுர பலமாக இருந்து வித்திட்டவர்கள் வடக்கு மக்களே :சந்திராணி


அரசியலில் பெண்களின் பங்களிப்பு குறைவாக காணப்படுகின்றது .எனவே இதனை மாற்றியமைக்க முயற்சிக்க வேண்டும் மகளீர் விவகார

அரசியல்வாதிகளே பங்கேற்காதீர்கள் : தூய நீருக்கான கவனயீர்ப்பு போராட்டம் நாளை


அரசியல்வாதிகளே பங்கேற்காதீர்கள் என்ற கோரிக்கையுடன் கழிவு ஒயிலால் பாதிக்கப்பட்ட வலிகாமப் பிரதேச மக்கள் நல்லூர் ஆலய

ரொனால்டோ புதிய சாதனை


லா லிகா லீக் உதைப்பந்தாட்ட சுற்றுத்தொடரின் நேற்றைய போட்டியில் ரியல் மாட்ரிட்- கிரனாடா அணிகள் மோதின.

தூக்கில் தொங்கிய நிலையில் 7பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு


ஏழாலை தெற்கு மயிலங்காட்டை சொந்த இடமாகக் கொண்ட தச்சுத் தொழிலாளி  இன்று காலை தூக்கில் தொங்கிய நிலையில்

யேமனிலிருந்து இலங்கையர்கள் வெளியேற முடியாத நிலை


யேமனிலிருந்து 43 இலங்கையர்கள் வெளியேற முடியாது நெருக்கடியான சூழ்நிலைக்கு உள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி மன்னிப்பு வழங்கிய போதிலும் மட்டக்களப்பு யுவதி விடுவிக்கப்படவில்லை


சிகிரியா சுவரில் கிறுக்கிய மட்டக்களப்பு யுவதிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பு வழங்கியிருந்த போதிலும்,

அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகரின் யாழ் விஜயம்!: முதலமைச்சர் உட்பட பலருடன் பேச்சுவார்த்தை


வடமாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவுஸ்திரேலியா நாட்டின் உயர் ஸ்தானிகர் ரூபின் மூடி தலைமையிலான குழுவினர்

விக்னேஸ்வரன் ஒரு நீதி அரசியல்வாதி

திங்கட்கிழமை, 06 ஏப்ரல் 2015, 10:28.24 AM GMT ]
உயர்நீதிமன்ற நீதியரசராக இருந்து ஓய்வுபெற்ற சி.வி. விக்னேஸ்வரனிடம் அயோக்கியர்களின் புகலிடமாக இருக்கும் அரசியல் துறையில் பிரவேசிக்க தயக்கம் இருந்து வந்தது.
எனினும் ஒரு இன அழிப்பு போரின் உச்சக்கட்டம் காரணமாக அவர் ஆழமாக அர்ப்பணிப்புடன் கூடிய அரசியலுக்குள் பிரவேசித்தார்.
விக்னேஸ்வரன் புதிய சுவாசத்துடன் மற்றவர்களில் இருந்து வேறுப்பட்ட நேர்மையான மற்றும் தைரியமான அரசியல்வாதியாக இருப்பார் என்பதால், அவரது அரசியல் வருகையை தமிழர்கள் வரவேற்றனர்.
தேர்தலில் போட்டியிட்ட வெற்றி பெற்ற பின்னர் 2013 ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள விக்னேஸ்வரனின் வீட்டில் அவரை சந்தித்த ஊடகவியலாளர் ஒருவர் அரசியல் தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள விக்னேஸ்வரன், தன்னை ஏனைய அரசியல்வாதிகளுடன் ஒப்பிட வேண்டாம் எனவும் தான் மற்றையவர்களை விட  வித்தியாசமானவர் என கூறியுள்ளார்.
முதலமைச்சராக பதவிக்கு வந்த பின்னர் அவரது வார்த்தைகளும், நடவடிக்கைகளும் வெளிப்படையாக இருந்ததுடன் அவர் தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியிருந்தார்.
மகிந்த ராஜபக்சவும் வடக்கு மாகாண சபை தொடர்பில் பல வாக்குறுதிகளை விக்னேஸ்வரனுக்கு வழங்கியிருந்தார்.
ஜனாதிபதி என்ற வகையில் மகிந்த ராஜபக்ச இந்த வாக்குறுதிகளை வழங்கியதாக விக்னேஸ்வரன் நம்பினார்.
எனினும் மகிந்த ராஜபக்ச அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாது தான் கீழ் மட்ட அரசியல்வாதி என்பதை காட்டினார்.
விக்னேஸ்வரன் தனது அதிகாரத்தையும் உரிமைகளையும் உறுதிப்படுத்திக்கொள்வதற்காக இராணுவ ஆளுநருடன் மோத வேண்டியிருந்தது. எனினும் அரசியல் அதிகாரம் அவருக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், மைத்திரிபால சிறிசேன புதிய ஜனாதிபதியாக தெரிவானார். அவர் தமிழ் மக்களின் மனதையும் எண்ணங்களையும் வெல்ல சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும் 60 வருடங்களாக நீடித்து இருக்கும் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் இன்னும் முனைப்புகளை மேற்கொள்வில்லை.
மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்கு தமிழ் மக்களே பின்பலமாக அமைந்தனர் என்பதால், ஜனாதிபதி என்ற வகையில், தமிழர்களின் பிரச்சினைளுக்கு தாமதமின்றி தீர்வை வழங்க வேண்டியது அவரதும் அவரது அலுவலகத்தினதும் பொறுப்பும் கடமையுமாகும்.
எவ்வாறாயினும் இலங்கை என்பது சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு சொந்தமானது என வெளியாகும் அறிக்கைகள் மூலம் சிங்கள அரசியல்வாதிகள், கடந்தகால மகாவம்ச மனநிலை அரசியல் தலைவர்களில் இருந்து மாறியிருப்பதை அவதானிக்க முடிகிறது.
மைத்திரிபால சிறிசேன ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர் என்பதால், நல்லாட்சி, சட்டம், ஒழுங்கு மற்றும் குற்றங்களுக்கு தண்டனை வழங்கி பொறுப்புக்கூறலுக்கு விக்னேஸ்வரன் அழுத்தங்களை கொடுக்க வேண்டும்.
இந்த நேசத்துக்குரிய கொள்கைகளில் ஏதேனும் ஒரு தோல்வி கண்ட பிறகு மற்றொரு அரசியல் சந்தர்ப்பத்தை தேடுவதே ஒரு ராஜதந்திரம்.
அவ்வாறான வாய்ப்பு தவறவிட்ட நிலையில், முடிவடைந்துவிட்டது என்றாலும் விக்னேஸ்வரனின் இனப்படுகொலை தீர்மானம், தைரியமான வெளிப்படையான மற்றும் தகுதியுடைய தீர்மானமாகும்.
1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றது முதல் நேரடி மற்றும் மறைமுக இனப்படுகொலைகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சந்தர்ப்பவாத தமிழ் அரசியல் தலைவர்கள் மற்றும் அரசியல் சக்திகளுடன் இணைந்து கடந்த அரசு தமிழர்களின் அரசியல் சக்தி மற்றும் உடல் பலத்தை இரக்கமற்றவகையில் ஒடுங்கியது. இது அரச பயங்கரவாதத்தை ஊக்குவித்தது.
தமிழர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். அவர்களின் முகங்களில், மிறச்சி, இராணுவமயப்படுத்தல் மற்றும் நில ஆக்கிரமிப்பு சாதாரண குடிமக்கள் பாதுகாப்புப் படைகளால் ஆக்கிரமிக்கப்படுதல், குறைவான வாழ்வாதாரம், பாதுகாப்பு படைகளின் தயவில் இருக்க வேண்டிய நிலைமை என்பன தமிழ் மக்கள் எதிர்நோக்கும் முக்கியமான பிரச்சினைகளாகும்.
இந்த நிலையில், முன்னெடுக்கப்பட்டுவரும், பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்கள் அரசாங்கத்திற்கு எந்த தாக்கத்தையும் உருவாக்கியதாக தோன்றவில்லை.
பிரச்சினைகளை அதிகரித்து நிலைமையை மேலும் மோசமாக்கும் விதத்தில், ரணில் மற்றும் சம்பிக்க போன்ற மைத்திரியின் பங்காளிகளின் செயற்பாடுகள் மைத்திரி அரசாங்கத்தின் நேர்மை தொடர்பில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சி.வி. விக்னேஸ்வரன் நல்ல மனிதர் அவருடன் எளிதாக வடக்கு மற்றும் கிழக்கு பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும் என மைத்திரி, சி.வியை பாராட்டும் படி தெரிவித்துள்ளார்.
எனினும் விக்னேஸ்வரன் பொய்யர், அவரது பேச்சு பெறுமதியானதல்ல என ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளர்.
மைத்திரி, சி.வியின் நீதித்துறை நேர்மையை புரிந்து கொண்டுள்ளார் எனினும் சி.வி அரசியல் நேர்மையை புரிந்து கொள்ளவில்லை.
இனப்படுகொலை மற்றும் சர்வதேச விசாரணை தொடர்பான விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த சிலர் மைத்திரியின் மந்திரத்தை நம்புகின்றனர். சிலர் எதிர்க்கின்றனர். சிலர் ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றனர்.
ஐக்கியமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இல்லாமல் தமிழ் மக்களின் கோரிக்கைகளை பிரதிபலிப்பது என்பது சந்தேகத்திற்குரியது என்பதை மன்னர் ஆயர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
அனைத்து தமிழ் குழுக்களை ஒன்றிணைத்து தமிழர் ஐக்கிய முன்னணியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மாற்றுவது சிறந்ததாக அமையும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சீரமைக்கப்பட்டு உருக்குலைந்த தமிழர்களை காப்பற்றுவதற்காக ஒரு உறுதியான பாதையில் அஞ்சாத, உண்மையாக செல்லக் கூடியவர்களிடம் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட வேண்டும்.
தெளிவான மற்றும் வெளிப்படையான உண்மையான தமிழ் அரசியல்வாதிகளுக்கு உலக அளவில் குறிப்பாக புலம்பெயர் நாடுளில் பரிவும் ஆதரவும் இருந்து வருகிறது.
மைத்திரி அரசாங்கம் சர்வதேச சமூகத்தின் ஆதரவுக்காக வலிந்து சென்று செயற்படும் விதமாக தனது ராஜதந்திர பாதையை மாற்றிக்கொண்டு செயல்பட்டு வருகிறது. இது தமிழர்களுக்கான சர்வதேச ஆதரவை நீக்கிவிடக் கூடிய முயற்சியாக காணப்படுகிறது.
மைத்திரியின் மென்மையான கருத்துக்கள் விக்னேஸ்வரனுக்கு முறையான நீதி காத்திருக்கிறது என்று தோன்றலாம்.
விக்னேஸ்வரனின் தமிழ் வரலாற்றில் பதிவுகள், இராணுவமயப்படுத்தல் மற்றும் இனப்படுகொலை பிரச்சினை குறித்த துணிச்சல் யதார்த்தமான தோரணைகளை உடைக்கும் நோக்கமாக இது இருக்கலாம்.
விக்னேஸ்வரன், உண்மை மற்றும் நீதி மீது நம்பிக்கையுடையவர். தமிழர்கள் கண்ணியம் மற்றும் சுய மரியாதையுடன் வாழ ஒரு

ஸ்ரீ.சு.கவின் பிரதம வேட்பாளராக சந்திரிக்காவை நியமிக்க தீர்மானம்?


எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதம வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவை

ad

ad