போரின் இறுதி தருணங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் மற்றும் வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித
-
16 மே, 2015
மே 16.2009
இன்றைய நாளில் முள்ளிவாய்க்கால் மிகவும் நெருக்கடியை சந்தித்து இருந்தால் எந்த நகர்வுகளையும் எங்களாலும் கூட இருந்தவர்களினாலும் எடுக்க முடியவில்லை. அந்தளவிற்கு உக்கிரமாக கொடிய தாக்குதல்களை மக்கள் மீது திணித்து விட்டிருந்தது சிங்களப்படைகள். உண்ண உணவின்றி குடிக்க நீரின்றி பலநாட்கள் அங்குமிங்குமாக தவித்த எங்களுக்கு இன்று விசப்புகையினை மாத்திரமே சுவாசிக்க முடிந்ததால் கூட வந்த பலர் மயக்க நிலையில் காணப்பட்டனர். அவர்களை அந்த நிலையில் எங்களால் அழைத்து போக முடியாத நிலையில் இருந்தோம். உணவின்றி நீரின்றி நடக்க முடியாத நிலையில் காணப்பட்டனர். திரும்பும் திசையெல்லாம் கண்ணுக்கு எந்த இடமும் தெரியவில்லை எல்லா இடங்களும் புகைமண்டலமாகவே காணப்பட்டது. எங்களுடன் 121பெண்போராளிகள் உட்பட ஆண்போராளிகள் 43 பேரும் பொதுமக்கள் 18 பேரும் இருந்தனர். அதில் காயம்பட்ட பெண்போராளிகள் வேகமாக பாதிக்கப்பட்டனர். இரத்த ஓட்டம் உணவின்றிய சோர்வு என கந்தக காற்றின் விசவாயு சுவாசம் என அவர்களை நினைவிழக்க செய்திருந்த்து.
ஒருவாறாக ஒரு வீட்டில் கிணற்றில் நீர் கிடைத்த நிலையில் அண்ணா மற்றும் கூட இருந்த போராளிகள் பலர் உதவியுடன் நீர் கொடுத்தனர். அப்போது பலருக்கு உயிர் போயிருந்த நிலையில் காணப்பட்டனர். அத்தனைபேரும் காயப்பட்ட போராளிகளின் உயிர் போயிருந்தது . அப்போது இன்னும் ஓர் துயரச்சம்பவம் அந்த வீட்டில் காண கூடியதாக இருந்தது. அது ஒரு இளம் குடும்பமாக இருக்கலாம். கணவன் மனைவி முப்பது வயது மதிக்க தக்கவர்கள். அதோடு இளம் பெண் 15 வயது மதிக்க தக்கவர்கள் எல்லோரும் பயங்கரமான முறையில் தாக்கப்பட்டு கட்டப்பட்ட நிலையில் கொல்லப்பட்டு இருந்தனர். அதன் பிறகு அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்ல முடிவு எடுத்தோம். கிட்டத்தட்ட அந்த இருபது நிமிட இடைவெளியில் கூட இருந்தவர்களில் 35 பேர் இறந்து இருந்தனர். பெண்கள் 24 பேர் உயிர் போயிருந்தது.
ஒருவாறாக வெளியேற முற்பட்ட எங்களுக்கு மீண்டும் துயரம் காத்திருந்த சம்பவம் அது எங்கள் பின்பகுதியால் சென்றிருந்த சிங்கள படை பொதுமக்கள் வெளியேறும் பாதையை நோக்கி எறிகணைத் தாக்குதல் தொடுத்தது. இதனால் கூட்டமாக சென்ற மக்கள் மீது மிலேச்சத்தனமான தாக்குதல் நடாத்தப்பட்டது. இதில் எங்கள் குழுவில் இருந்த ஐம்பதிற்கும் மேற்பட்டவர்கள் ஒரே இடத்தில் மாண்டு போயினர்.
இப்படி எத்தனை காட்சிகள் எத்தனை துயரங்கள் தாண்டி வந்மோம். மறக்க முடியுமா. காலம் ஓடிப்போகலாம் மனதில் இருக்கும் வடுக்களும் உடலில் இருக்கும் காயங்களின் தழும்புகளும் ஞாபகப்படுத்திக்கொண்டுதான் இருக்கும்.
பவித்ரா_தமிழினி

சிறு கட்சிகளிடையே ஏக இணக்கப்பாடு * ஜனாதிபதி - பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் 20ம் திகதி இறுதி முடிவு
* எம்.பிக்கள் தொகை 255ஆக அதிகரிக்க உடன்பாடு
20 ஆவது தேர்தல் திருத்தம் தொடர்பில் சிறு கட்சிகளிடையே உடன்பாடு ஏற்பட்டிருக்கிறது. எதிர்வரும்
முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நேற்று கொட்டும் மழையிலும் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களது நினைவுத்தூபிக்கு முன்பாக நடைபெற்றது. இதில் வடமாகாண சபை அமைச்சர் ஐங்கரநேசன், மாகாணசபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
(படம்: சுமித்தி தங்கராஜா, நவரட்ணராஜா)
(படம்: சுமித்தி தங்கராஜா, நவரட்ணராஜா)
ஜெ.வுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கக் கூடாது: ஆளுநர் ரோசய்யாவிடம் இருவர் நேரில் மனு
21 இலங்கையர்களை கறுப்புப் பட்டியலில் இணைக்கும் கட்டார்
கட்டாரின் செஹெலியா பகுதியிலுள்ள குடியிருப்புத் தொடர் ஒன்றில் பரவிய தீயை அடுத்து எதிர்ப்பு நடவடிக்கையில்
மே17 மெரீனா கடற்கரையின் கண்ணகி சிலை அருகே இலட்சம் தமிழராய் ஒன்று கூடுவோம்
தமிழர் கடலை நாம் ஒருபோதும் இன அழிப்பு சக்திகளுக்கு விட்டுத்தர முடியாது என மே 17 இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
சத்தமில்லா யுத்தம் நடக்கிறது வடக்கில்...!
ட்டிக் கேட்க ஆள் இல்லை என்றால் தம்பி சண்டப் பிரசண்டன் என்றொரு பழமொழி தமிழ் மக்களிடையே உண்டு. அப்பழமொழியின் தாக்கம் இப்பொழுது இலங்கையின் வடபுலத்திற்கு நன்றாகவே ஒத்துப்போகின்றன.
புங்குடுதீவு மாணவி படுகொலை : சிவ மங்கையர் அமைப்பு கண்டனம்
புங்குடுதீவில் காமுகர்களால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடூரத்திற்கு
புங்குடுதீவு மாணவி கொலை : சந்தேக நபர்கள் மூவருக்கு 21ஆம் திகதி வரை மறியல்
புங்குடுதீவில் பாடசாலை மாணவி கொடூரமாக கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது
வீரத்தளபதி சொர்ணம்- ஓர் மூத்த போராளியின் நினைவுப் பதிவு - 26 வருடங்கள் அயராது உழைத்தவர்
தலைவர் அவர்கள் ஒருபோதும் தலைக் கவசமோ, நெஞ்சுக்கு கவசமோ போராட்ட வேளையில் அணிந்ததில்லை.ஆனால் தலைவரின் கவசமே சொர்ணம்தான் என்பதை எதிரியும் நன்கு உணர்ந்திருந்தான்.
களத்தில் சொர்ணம் ஓர் தாக்குதலுக்கு தலைமை தாங்கிவிட்டால் அந்தத் தாக்குதல் நிச்சயம்
கட்சித் தலைமைப் பதவியிலிருந்து விலகுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை?
கட்சித் தலைமைப் பதவியிலிருந்து விலகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்கப்படவுள்ளது.
முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு சுய தொழில் வாய்ப்பு: வட மாகாண சபை உதவி
புனர்வாழ்வளிக்கப்பட்டு வேலைவாய்ப்பில்லாமல் இருக்கும் முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களுக்கு சுய தொழில்களை ஆரம்பிக்க நிதி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)