![]() உக்ரேனிலிருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்த நாடுகளின் பட்டியலில் போலந்து, ஹங்கேரியுடன் ஸ்லோவாக்கியாவும் தற்போது இணைந்துள்ளது. உள்ளூர் விவசாயிகளைப் பாதுகாப்பதற்காக உக்ரேனிய உணவுப் பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதிப்பதாக போலந்தும் ஹங்கேரியும் சனிக்கிழமை அறிவித்தன. உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பினால், உக்ரேனிய ஏற்றுமதிக்கான பாரம்பரிய கருங்கடல் வழிகள் தடைப்பட்டன |
-
19 ஏப்., 2023
உக்ரேனிய உணவுப் பொருட்களுக்கு மேலும் மூன்று நாடுகள் தடை!
யங்கரவாத செயற்பாடுகளுக்கு ஆதரவாக செயற்படும் ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை!
![]() உத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் தொடர்பில் சமூகத்தின் மத்தியில் வீண் அச்சம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த சட்ட மூலத்தின் ஊடாக ஆர்ப்பாட்டங்கள் , ஊடகங்கள் ஒருபோதும் முடக்கப்பட மாட்டாது. எனினும் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு ஆதரவாக செயற்படும் ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதி , சிறைச்சாலை அலுவல்கள் , அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார். |
நாளை முதல் காலி முகத்திடலில் கூட்டங்கள், நிகழ்ச்சிகளுக்கு தடை!
![]() கொழும்பு - காலி முகத்திடலில் அரசியல் கூட்டங்கள் , இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை நடத்துவதற்காக அனுமதி வழங்காமலிருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த தீர்மானம் வியாழக்கிழமை முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது |
சூடான் இராணுவத் தரப்பினரிடையே மோதல் 185 பேர் பலி!! 1800 பேர் காயம்
இடம் - துணை இராணுவக் குழுத் தலைவர் ஜெனரல் ஹம்தான் டகாலோ: வலம் -
ஐரோப்பாவுக்குள் இலங்கையர்கள் நுழையும் புதிய வழி!
![]() ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பிச் செல்வதற்கு இலங்கையர்கள் பயன்படுத்தும் புதிய வழிமுறையை கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு திணைக்கள அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர் |
தேசிய அரசு - நிராகரித்தார் சஜித்!
![]() மக்கள் நிராகரித்த அரசாங்கத்துடன் எங்களுக்கு எந்த வித தொடர்புகளும் இல்லை.எனவே போலி பிரசாரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார் |
புதுக்குடியிருப்பில் இருந்து கொழும்பு சென்ற பேருந்து விபத்து!- ஒருவர் பலி, 10 பேர் காயம்.
![]() முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்ஸும் டிப்பர் வாகனமும் தம்புள்ளைக்கு அருகில் நேருக்கு நேர் மோதின. தம்புள்ளைக்கு அருகில் நேற்றிரவு 11.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் டிப்பர் வாகன சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். |
16 ஏப்., 2023
விவசாயிகள் போராட்டம்: உக்ரைன் தானிய இறக்குமதிக்குத் தடை விதித்தது போலந்து மற்றும் ஹங்கேரி
போலந்து மற்றும் ஹங்கேரியில் உள்ளூர் விவசாயிகள் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் முனைப்பு பெற்றதைத் தொடர்ந்து போலந்தும்
19ஆம் திகதி அரச எதிர்ப்பு பேரணிகள் ஆரம்பம்- 21ஆம் திகதி கொழும்பு முற்றுகை!
![]() அரசாங்கத்திற்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து எதிர்வரும் 19 ஆம் திகதி மாபெரும் பேரணி ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்துமபண்டார அறிவித்துள்ளார் |
அனலைதீவில் கனடா வாழ் வயோதிபரை கொல்ல முயற்சி - சந்தேக நபர்கள் இருவர் கைது!
![]() கனடாவிலிருந்து வருகை தந்து அனலைதீவில் தனது வீட்டில் தங்கியிருந்த வயோதிபரை திட்டமிட்டு கொலை செய்ய முயற்சித்தமை மற்றும் பெறுமதியான பொருள்களை கொள்ளையிட்டமை தொடர்பாக முதன்மை சந்தேக நபர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் |
15 ஏப்., 2023
சூடானின் அமைதியின்மை: தலைநகரில் வெடிப்புகள், துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள்
சூடான் தலைநகர் கார்ட்டூமில் சூடான் இராணுவத்துக்கும் துணை இராணுவப்
சூடானின் இராணுவ தலைமையகம் மற்றும் மத்திய கார்ட்டூமில் உள்ள
பென்டகனின் இரகசிய ஆவணக் கசிவு: ஜாக் டெக்சீரா மீது குற்றச்சாட்டு
உக்ரைனில் நடைபெறும் போர் தொடர்பான இரகசிய ஆவணங்களையும
14 ஏப்., 2023
வடக்கில் உள்ள தீவுகளை இலக்கு வைத்து உருவாக்கப்படவுள்ள தீவக அதிகார சபையை தடுத்து நிறுத்தாவிட்டால்
![]() வடக்கில் உள்ள தீவுகளை இலக்கு வைத்து உருவாக்கப்படவுள்ள தீவக அதிகார சபையை தடுத்து நிறுத்தாவிட்டால் பல மோசமான பின் விளைவுகளை வடபகுதி மக்கள் எதிர்நோக்க வேண்டி வரும் என தமிழ் தேசிய பண்பாட்டு பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ்.நிஷாந்தன் எச்சரிக்கை விடுத்தார் |
கனடாவுக்கு அனுப்புவதாக இலட்சக்கணக்கில் மோசடி - 23 வயதுப் பெண் கைது!
கனடாவுக்கு அனுப்புவதாகக் கூறிப் பல இலட்சம் ரூபா மோசடி செய்த குற்றச்சாட்டில் 23 வயது இளம் பெண் ஒருவர் யாழ்ப்பாணம் விசேட குற்ற விசாரணைப் பிரிவால் கைது |
ரூ.1.31 லட்சம் கோடி; தி.மு.க. அமைச்சர்களின் சொத்துப் பட்டியலை வெளியிட்ட அண்ணாமலை... யார் யாருக்கு எவ்வளவு கோடி சொத்து?-வீடியோ
ரணில் -பசில் அணிக்குள் கடும் மோதல் - தென்னிலங்கை அரசியலில் ஏற்படவுள்ள மாற்றம்
பொதுஜன பெரமுன கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே போட்டியிடுவார் என பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் வெளியிட்ட அறிக்கையை அடுத்து இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயார் என ஜனாதிபதி சூசகமாகத் தெரிவித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
13 ஏப்., 2023
மன்னாரில் ஒரு இலட்சம் போதை மாத்திரைகள் சிக்கின
![]() மன்னார் - சிலாவத்துறை பகுதியில் இன்று அதிகாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது 111,000 போதை மாத்திரைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட போதை மாத்திரைகளின் பெறுமதி 16 மில்லியன் ரூபாய் என தெரியவந்துள்ளது |
இலங்கைக்கு கை கொடுக்கிறது ஆசிய அபிவிருத்தி வங்கி!
![]() பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவளிக்கப்படும் என ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது. ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அதன் உள்நாட்டு இயக்குநர் சென் சென் இதனைத் தெரிவித்தார். எதிர்காலத்தில் சலுகை நிதியை வழங்குவதன் ஊடாக இலங்கைக்கு ஆதரவை வழங்க எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார் |
ஏலத்தில் விற்கப்பட்ட இலங்கைப் பெண்கள் 90 பேரும் பாலியல் தொழிலுக்காகவும் பாலியல் தேவைக்கவும் கொண்டு செல்லப்பட்டது உறுதி செய் ஐநா விசாரணையில் இறங்கியது ஐ.நா!
![]() ஓமானில் இலங்கை பெண்கள் பாலியல் தொழிலாளர்களாக ஏலத்தில் விடப்பட்ட சம்பவம் குறித்து ஐநா விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அடிமைத்தனத்தின் தற்போதைய வடிவங்கள் தொடர்பிலான ஐநாவின் விசேட அறிக்கையாளர் டொமொயோ ஒபக்கட்டா மூலம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளது |
இது தொடர்பில் பெப்ரவரி ஏழாம் திகதி அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். மனித உரிமைகள் மீறல்கள் குறித்து அவர் அதில் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை அரசாங்கம் 60 நாட்களிற்குள் பதிலளிக்கவேண்டும் என்ற போதிலும் இதுவரை அரசாங்கம் பதிலளிக்கவில்லை. ஜனாதிபதிக்கான குறிப்பிட்ட கடிதத்தில் கைச்சாத்திட்டுள்ள இரண்டு விசேட அறிக்கையாளர்களும் ஓமானிற்கு பாலியல் நோக்கத்திற்காக அல்லது தொழில்ரீதியான துஸ்பிரயோகத்திற்காக கொண்டு செல்லப்பட்ட பெண்கள் எதிர்நோக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்து சுட்டிக்காட்டியுள்ளனர். சுற்றுலா விசாவில் ஓமானிற்கு சென்ற 90 பெண்கள் இலங்கை அரசாங்கத்தின் புகலிட இல்லம் உட்பட புகலிட இல்லங்களில் சிக்குண்டனர் என தமக்கு கிடைத்துள்ளதாக அவர்கள் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளனர். பல பெண்கள் ஓமானிற்கு பாலியல் நோக்கத்திற்காக அல்லது தொழில்ரீதியான துஸ்பிரயோகத்திற்காக கடத்தப்பட்டுள்ளனர் என தகவல்கள் கிடைக்கின்றன ஐக்கிய அரபு இராச்சியத்தில் தொழில்வாய்ப்பு என்ற போர்வையிலேயே இவர்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளனர் எனவும் ஐநாவின் அறிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். சில பெண்கள் ஏலத்தில் விடப்பட்டனர் தனியார் வீடுகளில் வைக்கப்பட்டு துஸ்பிரயோகங்களிற்கு உட்படுத்தப்பட்டனர் போதுமான உணவோ அல்லது உறங்குவதற்கான வசதிகளோ இருக்கவில்லை எனவும் ஐநாவின் அறிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். |