![]() இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணங்களில் இராணுவத்தினரிடம் சரணடைந்த குடும்பங்களின் குழந்தைகள் எங்கே அவர்களிற்கு என்ன நடந்தது என சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் கேள்வி எழுப்பியுள்ளார் |
-
21 மே, 2024
சரணடைந்த குழந்தைகள் எங்கே? - சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் கேள்வி6:00]
17 மே, 2024
முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சிக்கு தடையை நீக்கியது மூதூர் நீதிமன்றம்!
![]() முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சியை வழங்குவதற்கு மூதூர் நீதிமன்றம் முன்னர் வழங்கியிருந்த தடை உத்தரவை வியாழக்கிழமை நீக்கியுள்ளது என இவ் வழக்கில் எதிராளிகள் சார்பில் முன்னிலையாகிய சட்டத்தரணி சுகாஸ் கூறியுள்ளார் |
மார்க்கம் தோர்ன்ஹில் தொகுதியில் கொன்சர்வேட்டிவ் வேட்பாளராக போட்டியிட தமிழர் தெரிவு!
![]() கனேடிய பொதுத் தேர்தலில் போட்டியிட கொன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் தமிழர் ஒருவர் வேட்பாளராக தெரிவாகியுள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன |
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களைச் சந்திக்கிறார் சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர்!
![]() முதன்முறையாக இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் இன்று முல்லைத்தீவில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார் |
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் 4வது நாடாளுமன்றத்தின் தொடக்கக் கூட்டம்!
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் 4வது நாடாளுமன்றத்தின்,தொடக்கக் கூட்டம் மே 17 முதல் 19 வரை நியூயார்க்கில் நடைபெறுகிறது |
இனப்படுகொலை, பொதுசன வாக்கெடுப்பு - அமெரிக்க காங்கிரசில் பிரேரணை!
![]() இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களிற்கு எதிரான இனப்படுகொலையில் ஈடுபட்டது என்பதை அமெரிக்க காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளவேண்டும் ஈழத்தமிழர்களிற்கான சுதந்திரம் குறித்த சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதை நோக்கிய செயற்பாடுகளில் ஈடுபடவேண்டும் என கோரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் அமெரிக்க காங்கிரஸில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது |
தமிழ்க்கட்சிகளின் ஒற்றுமையை வலியுறுத்தினார் அமெரிக்க தூதுவர்!
![]() தமிழ்க்கட்சிகள் பிளவுபட்டு நிற்பது பலவீனத்தையே வெளிப்படுத்தும் எனவும், கட்சிகள் ஒன்றுபட்டு நின்றால் மாத்திரமே தமிழர் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து தம்மால் பேசமுடியும் என அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங்,தெரிவித்துள்ளார். |
அடுத்தவாரம் யாழ்ப்பாணம் வருகிறார் ஜனாதிபதி! - பாதுகாப்பு தீவிரம்.
![]() ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 24 ஆம் திகதி யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சிக்கு விஜயம் செய்யவுள்ளார். ஜனாதிபதியின் இந்த விஜயத்தை முன்னிட்டு பாதுகாப்ப பலப்படுத்தப்பட்டுள்ளது |
15 மே, 2024
யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வராமல் இருந்திருந்தால் தமிழ் ஈழம் உருவாகியிருக்கும்!
![]() விடுதலை புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு கொண்டு வராமலிருந்தால் தென்னாசியாவில் தமிழீழம் தோற்றம் பெற்றிருக்கும். அது இஸ்ரேல் போல் மாற்றமடைந்திருக்கும்,காஸாவின் இன்றைய நிலை எமக்கு ஏற்பட்டிருக்கும். இஸ்ரேலுக்கு ஆயுதத்தை வழங்கி விட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருமாறு அமெரிக்கா முதலை கண்ணீர் வடிக்கிறது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார் |
தமிழர்களுக்கு எதிராகவே போர் நடத்தப்பட்டது என நிரூபிக்கப்பட்டால் தனிஈழம் வெற்றி பெறும்!
![]() தமிழர்களுக்கு எதிராகவே யுத்தம் நடத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் வடக்கு கிழக்கில் தனி ஈழத்தை ஸ்தாபிக்க முயற்சிக்கும் அடிப்படைவாத நோக்கம் வெற்றி பெறும் என்று பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். |
14 மே, 2024
கொவிட் தடுப்பூசிகளால் உலகம் முழுவதும் 11,000 க்கும் மேற்பட்டோர் பலி!
![]() கொவிட் வைரஸை கட்டுப்படுத்த பெறப்பட்ட தடுப்பூசிகளால் உலகம் முழுவதும் 11,000 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். 2023 இல் ஐரோப்பிய மருந்துகள் முகமை வெளியிட்ட அறிக்கையை மேற்கோள் காட்டி, இந்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஃபைசர் தடுப்பூசி போட்ட 8,000 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படும் நிலையில், அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசியைப் பெற்ற 1,500 பேர் மட்டுமே இறந்துள்ளனர். |
ரஷ்யாவுக்கு கூலிப்படையினரை அனுப்பும் மோசடிக்குப் பின்னால் உதயங்க வீரதுங்கவா?
![]() ரஷ்ய யுத்த களத்துக்கு இலங்கையில் ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களை சட்டவிரோதமான முறையில் அனுப்பும் மோசடியின் பின்னணியில் ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் தொடர்புப்பட்டுள்ளாரா என்ற சந்தேகம் எழுவதாகத் தெரிவித்த சுயாதீன எதிரணி எம்.பி.யான காமினி வலேபொட, பலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான யுத்தம் தற்போது தீவிரமடைந்துள்ளது. ஆகவே இந்த நாடுகளின் யுத்தக் களத்துக்கும் இலங்கையர்கள் சட்டவிரோதமான முறையில் அனுப்பி வைக்கப்படலாம் எனவும் தெரிவித்தார் |
முள்ளிவாய்க்கால் ஆத்மாக்கள் ராஜபக்ஷ குடும்பத்தை ஒருபோதும் நிம்மதியாக வாழவிடாது!
![]() இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பசியில் வாடி கஞ்சிக்காக வரிசையில் நின்ற குழந்தைகள் மீது குண்டுகளை வீசி கொலை செய்ய கோட்டாபய ராஜபக்ஷ கட்டளை பிறப்பித்தார். 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதற்குக் காரணமாக இருந்த ராஜபக்ஷ குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஒருபோதும் நிம்மதியோடு இருக்கப்போவதில்லை. இறந்துபோன முள்ளிவாய்க்கால் ஆத்மாக்கள்,இவர்களை ஒருபோதும் நிம்மதியாக இருக்க விடாது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார். |
விஞ்ஞான பரீட்சையில் நீக்கப்பட்ட பாடத்திட்டத்தில் இருந்து 12 புள்ளிகளுக்கான வினாக்கள்!
![]() தற்போது நடைபெற்றுவரும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட பிரிவுகளில் இருந்து விஞ்ஞான பாடத்துக்கு 12 புள்ளிகளைக் கொண்ட வினாக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. கற்பிக்காத பாடப்பரப்பில் இருந்து கேள்வி கேட்கும் போது பரீட்சாத்திகள் எவ்வாறு பதிலளிப்பார்கள் என ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.யான ரோஹிணி கவிரத்ன கல்வி அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார் |
இனவாதப் பொலிசாரின் எடுபிடிகளாகியுள்ள நீதிமன்றங்கள்! - கஜேந்திரன் காட்டம்.
![]() வடக்கு மற்றும் கிழக்கில் நீதிமன்றங்கள் இனவாத பொலிஸாரின் கட்டளைகளுக்குப் பணிந்து செயற்படுகின்றனவா? பொலிஸார் நீதிமன்றங்களுக்குச் சென்று எதைச் சொன்னாலும் அதை அப்படியே நீதிமன்றங்கள் ஏற்றுக்கொண்டு செயற்பட வேண்டிய நிலைக்கு நீதிமன்றங்களின் சுயாதீனம் பறிக்கப்பட்டுள்ளதா ? எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் சபையில் கேள்வி எழுப்பினார் |
பள்ளிமுனை கடற்பரப்பில் காற்றுடன் கடும் மழை - வள்ளம் கடலில் மூழ்கி மீனவர் பலி
![]() மன்னார் பள்ளிமுனை கடற்பரப்பில் இருந்து நேற்று மாலை வள்ளத்தில் கடற்தொழிலுக்கு சென்ற குடும்பஸ்தர் ஒருவர் வள்ளம் மூழ்கி கடலில் விழுந்து உயிரிழந்தார். உயிரிழந்தவர் மன்னார் பள்ளிமுனை மேற்கு பகுதியைச் சேர்ந்த எஸ்.ஏ.ஜான்சன் என்ற குடும்பஸ்தர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். |
13 மே, 2024
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பங்கேற்கிறார் சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம்!
![]() யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 15 வருடங்கள் கடந்திருக்கும் நிலையில், சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் இவ்வாரம் இலங்கைக்ஊ வரவுள்ளார் |
கெஹலியவுக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டு!
![]() தரம் குறைந்த மருந்துகளை அப்பாவி நோயாளர்களுக்கு வழங்கி அவர்களின் உயிரை ஆபத்தான நிலைக்குத் தள்ளிய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம், முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மீது கொலை குற்றச்சாட்டில் வழக்குத் தொடரவுள்ளதாக தெரியவந்துள்ளது |
விஞ்ஞான பாட வினாத்தாளில் பாடத்திட்டத்துக்கு அப்பால் கேள்விகள்! - மதுர விதானகே குற்றச்சாட்டு
![]() கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு அமைவாக அண்மையில் நடைபெற்ற விஞ்ஞானப் பாடத்திற்குரிய வினாத்தாள், ஒதுக்கீட்டுத் திட்டத்திற்குப் புறம்பாக தயாரிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே குற்றம் சுமத்தியுள்ளார் |