புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜன., 2013


           சேவை வரி விதித்திருக்கும் மத்திய அரசை கண்டித்து நடிகர் சங்கம் சார்பில் கடந்த 7-ந்தேதி தமிழ்த்திரையுலகினர் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்கள்.

சேவை வரி என்றால் என்ன?


நீங்கள் ஒரு ஹோட்டலுக்குப் போய் ரெண்டு இட்லி கெட்டிச்சட்னி சாப்பிட்டு விட்டுப் போய் விடுவீர்கள். இட்லி சாப்பிட்ட உங்களை அரசால் தேடிக் கொண்டி ருக்க முடியாது. இட்லியை தந்து உங்களுக்கு சேவை செய்த ஹோட்டல் நிர்வாகம் வரியை மொத்தமாக அர சிடம் கட்டும். உங்கள் பில்லில் மறைமுகமாக இந்த வரி வசூலிக்கப் படும்.



            டி.டி.ஹெச். என்கிற புதிய வியாபார முறையை கொண்டு வர கமல் என்கிற தனியொரு ஹீரோ போராடிக்கொண்டிருக்க... "மறந்தும் மறைமுக ஆதரவைக் கூட கமலுக்கு கொடுத்துவிடக்கூடாது' என்பதில் தெளிவாக ஒதுங்கி நின்றார்கள் மற்ற கதாநாயகர்கள். 
ண்பது கோடி ரூபாய் பெறுமானமுள்ள மரங்களை வெறும் 85 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்திருக்கிறார் அப்புக்குட்டி என்பவர்.

இந்த அப்புக்குட்டி, சென்னிமலை ஒன்றிய சேர் மன் அ.தி.மு.க. கருப்புசாமி யின் பினாமி.

சேர்மன் கருப்பு சாமிக்கு, விஸ்வரூப பாது காப்பாக இருப்பது யார்? ""வேறு யார்? நம்ம பொதுப்பணித்துறை மாண்புமிகு கே.வி.ராமலிங்கம் தான்!'' என்கிறார்கள் ஈரோடு மாவட்டம், சென்னி மலை ஒன்றியம், பாலத்தொழுவு ஊராட்சி யின் தலைவரும்




""ஹலோ தலைவரே...…ஒரு எதிர்க்கட்சி யோட அறிவிப்பு தமிழக அரசியலில் இந்த அளவுக்கு பரபரப்பையும் விவாதத்தையும் உருவாக்கிடிச்சே...'' 

""வாய்ப்பிருந்தால் கட்சித் தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினை முன்மொழி வேன்னு கலைஞர் சொன்னதைத்தானே சொல்றே.. தேசிய அளவிலான ஆங்கிலப் பத்திரிகைகளிலிருந்து மாநில அளவிலான தமிழ் பத்திரிகைகள் வரை எல்லாவற்றிலும் இது சம்பந்தமான செய்திகள்தான்.. அவங்கவங்க பார்வை இருக்கட்டும். கட்சியிலும் கலைஞர் குடும்பத்திலும் எப்படிப் பார்க்குறாங்கன்னு சொல்லுப்பா... ...''nakkeeran



             கில இந்திய பல் மருத்துவ கவுன்சிலில் இருக்கும் ஒரு ஊழல் திமிங்கிலத்தை, பொறி வைத்து மடக்கியிருக்கிறது சி.பி.ஐ.யின் லஞ்ச ஒழிப்புத்துறை. அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் இவர், புரோக்கராக இருந்து, வாங்க வேண்டியதை வாங்கிக் கொடுத்துக்கொண்டிருந்ததால், எங்கே தங்கள் குட்டும் வெளியே வந்துவிடுமோ என கைபிசைந்து கொண்டிருக்கிறார்கள் அவர்கள். என்ன நடந்தது?

அரசியலில் இருந்து விலகுகிறேன்:
 ராமதாசுடன் நட்புடன் இருப்பேன்:
பொன்னுசாமி பேட்டி
 
பாமகவின் முன்னாள் பொதுச்செயலாளரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான எ.பொன்னுசாமி இன்று (11.01.2013) காலை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,


இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு
கவுரவ டாக்டர் பட்டம்!

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று (11.01.2013)  நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது. தமிழக கவர்னர் ரோசைய்யா இப்பட்டத்தை எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு வழங்கினார். இவ்விழாவில் தமி்ழக உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன், பல்கலைக்கழக துணைவேந்தர் குமரகுரு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நெடுமாறன் தனது மனசாட்சிக்கு டாட்டா கொடுத்து விட்டாரே என்றெண்ணி வேதனைதான் ஏற்படுகிறது! கலைஞர் அறிக்கை!

நான் கம்யூனிசக் கொள்கைகளில் சிறு வயதிலிருந்தே ஈர்க்கப்பட்டவன் என்பதை மறுக்கவில்லை. ஆனால் பழ.நெடுமாறன் என்னுடைய கருத்துக்களை மிகவும் மூர்க்கத்தனமாக எதிர்த்து எழுதிய கட்டுரை ஒன்றினை ஒரு பத்திரிகை வெளியிட்டுள்ளது.

பிரபாகரன் கொல்லப்பட்ட இடமாம் ! வாழ் நாளில் ஒருமுறைதான் இங்கே நீங்கள் தங்க முடியும் ! பிரபாகரன் கொல்லப்பட்ட இடத்தில் நீங்கள் உங்கள் பொழுதைப் போக்கி படுத்து உருள வெறும் 100 டாலர்கள் தான், செலவாகும் 

ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில், களப்பு முனை என்னும் ஆடம்பர ஹோட்டல் ஒன்றை சிங்களவர்கள் நிர்மாணித்துள்ளார்கள். தமிழர்களின் எலும்புக்கூடுகள் புதையுண்டுள்ள இப்


இது என் விருப்பம்! என்னை தடுப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை!


கமல் இயக்கி, தயாரித்து, நடித்துள்ள விஸ்வரூபம் படத்தின் டி.டி.எச் ரிலீஸ் முயற்சி கமலுக்கும் திரையரங்க உரிமையாளர்களுக்குமிடையே மிகப்பெரிய போராட்டத்தையே உருவாக்கியிருந்தது. பொங்கல் ரிலீஸாக திரைக்கு

“ஹசித மடவலவின் கொலை என்னை சிக்க வைக்க ராஜபக்ஸவினர் மேற்கொண்டது” மேர்வின் சொன்னார்

தனக்கு எதிராக களனி பிரதேச சபையின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களை தூண்டி விடுவது கோத்தபாய ராஜபக்ஷ என தெரிவித்துள்ள அமைச்சர், அவர்கள் என்னுடன் இருந்தவர்கள், எனக்கு உதவியவர்கள், நான் அரசியல் மூலம் தாக்குவேன்,

முன்னாள் இராணுவச் சிப்பாயான ஏ.எம். சமன் சுஜீவ என்பவருக்கு எதிராக இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
2007ம் ஆண்டில் குறித்த இராணுவச் சிப்பாய், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உளவுத் தகவல்களை வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

திவிநெகும சட்ட மூலத்திற்கு ஆதரவு தெரிவித்தோர் தமிழர் உரிமை பற்றி பேசுவதற்கு அருகதையற்றவர்கள்!- பாஸ்க்கரா
திவிநெகும சட்ட மூலத்திற்கு ஆதரவு தெரிவித்த, குறிப்பாக சிறுபான்மை இனத்தைச் சார்ந்த கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இனி வரும் காலங்களிலாவது சிறுபான்மை சமூகத்தின் உரிமை பற்றி பேசி சமூகத்தை ஏமாற்றுவதை கைவிடவேண்டும் என 



இலங்கையில் ஐக்கிய நாடுகள் அமைப்பு பாரிய சவால்களை எதிர்நோக்க நேரிட்டதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் முன்னாள் பிரதம அதிகாரி விஜய் நம்பியார் தெரிவித்துள்ளார்.
சிவிலியன் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு அனுபவங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது. மேலும் பல்வேறு விடயங்கள் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.
புத்தாண்டில் அறிமுகமாகும் புதிய சட்டங்கள்
சுவிட்சர்லாந்தில் 2013ம் ஆண்டில் ஜனவரி முதல் நாளிலிருந்து பல புதிய சட்டங்கள் அறிமுகமாகின்றன.
இவை சிலருக்கு மகிழ்ச்சியையும் சிலருக்குத் துக்கத்தையும் தருவது உறுதி.


மட்டக்களப்பு மாவட்டம், கொக்கட்டிச்சோலையில் அண்மையில் கைதான போலி மருத்துவரைப் பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேற்படி போலி மருத்துவரான திரு அஜித்குமார் என்பவர் பல இளம் பெண்களுக்கு கருத்தடை செய்துள்ளதுடன் பெண்களுக்கான பிரசவ மருத்துவமும் செய்துள்ளார்.


சவுதி அரேபியாவில் ரிசானா நபீக்கிற்கு கழுத்து வெட்டி, மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமைக்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் வெளியிட்டுள்ளது.
ரிசானாவை விடுதலை செய்யுமாறு பல தரப்பில் இருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதும் சவுதி அரசு மரண தண்டனை நிறைவேற்றியதாக ஐரோப்பிய ஒன்றியம் கண்டித்துள்ளது.


சவுதி அரேபியாவில் ரிசானா நபீக்கிற்கு கழுத்து வெட்டி, மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமைக்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் வெளியிட்டுள்ளது.
ரிசானாவை விடுதலை செய்யுமாறு பல தரப்பில் இருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதும் சவுதி அரசு மரண தண்டனை நிறைவேற்றியதாக ஐரோப்பிய ஒன்றியம் கண்டித்துள்ளது.

ad

ad