ஞாயிறு, பிப்ரவரி 02, 2014

பிரேசிலைச் சேர்ந்த கால்பந்து வீரர் ரொனால்டினோ அந்நாட்டு கிளப் அணியான அட்லெடிகோ மினீரியாவுடனான ஒப்பந்தத்தை ஓராண்டு நீட்டிப்பு செய்துள்ளார்.
2002 உலகக் கோப்பையை வென்ற பிரேசில் அணியில் இடம்பெற்றிருந்த நட்சத்திர வீரரான ரொனால்டினோவுடன், கடந்த டிசம்பரில் கிளப் உலகக்
கோப்பைக் கால்பந்துப் போட்டி நடைபெற்றதிலிருந்து, ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது.
சமீபத்தில் அவர் அட்லெடிகோ மினீரியா அணியுடன் ஒப்பந்தத்தை நீட்டிப்பு செய்ய சம்மதம் தெரிவித்து, அதில் கையெழுத்திட்டுள்ளார். இருப்பினும், கிளப் உலகக் கோப்பைப் போட்டியின்போது சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டதால், இந்த மாதம் அவரால் கிளப் அணிக்காக விளையாட முடியாது.