புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஏப்., 2014

ஒத்திவைப்பு பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டு பத்து நிமிடங்களில் சபை ஒத்திவைப்பு

* கோரமின்மையால் இருதரப்பும் வாதப்பிரதிவாதம்
* ஒலிவாங்கி செயலிழந்த நிலையிலும் சூடானவாதம்

இலங்கை மின்சார சபை மற்றும் மின்சக்தி அமைச்சின் நடவடிக்கைகள் தொடர்பாக ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க நேற்று சபையில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையொன்றை சமர்பித்தார். சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று பகல் 1.00 மணிக்கு பாராளுமன்றம் கூடியது.
வழமையான கேள்வி நேரம் மற்றும் அமைச்சு அறிக்கை போன்ற முக்கிய விடயங்கள் நிறைவடைந்ததன் பின்னர் நேற்றைய நிகழ்ச்சி நிரலின்படி சபை முதல்வர் நிமால் சிறிபால டி சில்வாவினால் ஒத்திவைப்பு வேளை பிரேரணைக்காக சபை ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து சபை ஒத்திவைப்பு பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளதால் சபைக்கு பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தலைமை தாங்கினார்.
சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை சமர்பிக்குமாறு ரவி கருணாநாயக்காவை பிரதி சபாநாயகர் பணித்தார்.
ரவி கருணாநாயக்க எம்.பி. பிரேரணையை சமர்பித்து பேச ஆரம்பித்தார்.
அப்போது ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை எழுப்புவதாக கூறி ஏ.எச்.எம். அஸ்வர், எம்.பி. எழுந்து நின்றார்.
எதிர்க்கட்சியினர் கொண்டு வந்துள்ள இந்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை சமர்பிக்கப்படும் போது சபையில் போதிய நேரமில்லாமல் இருப்பதை பிரதி சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
அப்போது சபைக்குள் ஆளும் தரப்புடன் 15 பேர் மட்டுமே இருந்தனர். இதனையடுத்து நேரம் ‘மணி’ ஒலிக்கப்பட்டது. ஜே.வி.எம்.பி. அஜித் குமார, ஐ.தே.க. எம்.பி. அஜித் பி. பெரேரா ஆகியோர் சபைக்குள் வந்தனர். நீண்ட நேரமாக கோரம் மணி ஒலித்துக் கொண்டிருந்த போதும் சபைக்குள் எதிர்க்கட்சியிலிருந்தோ ஆளும் தரப்பிலிருந்தோ உறுப்பினர்கள் சபைக்குள் வரவில்லை.
இந்த நிலையில் போதிய நேரமின்மை காரணமாக பாராளுமன்றம் எதிர்வரும் 24ம் திகதி வரை ஒத்திவைக்கப்படுவதாக பிரதி சபாநாயகர் அறிவித்து சபையை ஒத்திவைத்தார்.
கோரம் ‘மணி’ ஒலித்துக் கொண்டிருந்த போது ஆளும் தரப்பினருக்கும் எதிர்த்தரப்பினருக்கும் இடையே கடும் காரசாரமான வாக்குவாதங்கள் நடைபெற்றன. ஒலிவாங்கிகள் செயற்படாத காரணத்தால் அவை ஊடகங்களால் செவிமடுக்க முடியாதிருந்தது.

ad

ad