வெள்ளி, ஏப்ரல் 11, 2014

ரித்தீஷுக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை: அழகிரி ஆவேசம்!
அதிமுகவில் இணையப் போவதாக ரித்தீஷ் என்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை என்று மு.க.அழகிரி மறுப்பு தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் எம்.பி.யும், மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளருமான ரித்தீஷ் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டபின் அளித்த பேட்டியில், அ.தி.மு.க.வில் நான் சேருவதை மு.க.அழகிரியிடம் தெரிவித்து விட்டு வந்ததாக கூறியுள்ளார்.
இதுகுறித்து மு.க.அழகிரி கூறியதாவது, ரித்தீஷ் அதிமுகவில் சேரும் தகவலை என்னிடம் கூறியதாக பேட்டியளித்துள்ளார். அவர் அப்படி சொல்லியது தவறு என்றும் அதனை தான் முற்றிலுமாக மறுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் அதிமுகவில் சேர்ந்ததற்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லையென்று கூறிய அழகிரி, ரித்தீஷை பார்த்திபனூரில் நடந்த நிகழ்ச்சியில் பார்த்ததாகவும் அதன்பின் என்னிடம் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார்.