வெள்ளி, ஏப்ரல் 11, 2014


புதுச்சேரியில் பாமகவுக்கு ஆதரவு: விஜயகாந்த்
புதுச்சேரி மக்களவை தொகுதிக்கான தேர்தலில், பா.ம.க.வுக்கு ஆதரவு தெரிவித்து, தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.


இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நடைபெறவுள்ள 16வது நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரி மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் அனந்தராமனுக்கு தேமுதிக ஆதரவு அளிக்க முடிவெடுத்துள்ளது.
எனவே, புதுச்சேரி மாநில பொறுப்பாளர்கள், தொகுதி செயலாளர்கள், கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள் என அனைவரும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் அளித்து மாபெரும் வெற்றிக்கு பாடுபட வேண்டுமென கேட்டுக் கொள்ளுகிறேன் என்று கூறியுள்ளார்.