வியாழன், ஜூன் 26, 2014

சென்ஜோன்ஸ் மாணவன் விபத்தில் சாவு 
இன்று மதியம் 2 மணியளவில் யாழ் . சென்ஜோன்ஸ் கல்லூரிக்கு முன்னால் மினிபஸ் ஒன்று மோதியதில் 

குறித்த பாடசாலை மாணவன் ஒருவன் ஸ்தலத்திலேயே சாவடைந்துள்ளார்.
 சென்.ஜோன்ஸ் கல்லூரியில் தரம் 11 இல் கல்வி பயிலும் சுன்னாகத்தைச் சேர்ந்த மனோராஜ் அன்ரன் (வயது 16) என்ற மாணவனே உயிரிழந்தவராவார். இவர் மினி பஸ்ஸால் மோதுண்டு தலையில் படுகாயமுற்ற நிலையில் யாழ் போதனா வைத்திய சாலைக்கு கொண்டு வரப்படும் வழியில் உயிரிழந்தார்.