புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜூன், 2014


ஆசியாவின் ஆச்சர்யம்! தமது வர்த்தக நிலையங்களை தாமாகவே தீக்கிரையாக்கிய முஸ்லிம் வர்த்தகர்கள்
தமது வர்த்தக நிலையங்களை முஸ்லிம்களே தீக்கிரையாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படும் சம்பவத்தின் மூலம் இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமிக்க நாடாக நிரூபிக்கத் தமது பங்களிப்பையும் முஸ்லிம்கள் வழங்கியுள்ளனர்.
ஊடகவியலாளர் சந்திப்பின் போது பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண இந்த ஆச்சரியமான தகவலை வெளியிட்டுள்ளார்.
இது பற்றி மேலும் தெரிய வருவதாவது,
பேருவளையில் இரண்டு நாட்களுக்கு முன்னா் எரியூட்டப்பட்ட முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான புத்தக நிலையத்தை அதன் உரிமையாளரே எரித்து இருப்பதாக பொலிஸ் மோப்ப நாய் கண்டு பிடித்துள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதனையடுத்து முஸ்லிம்களின் இழப்புகள் எல்லாம் அவா்களே செய்து கொண்டவைதான் என்ற தொனியில் பொலிஸ் ஊடக பேச்சாளரை மேற்கோள் காட்டி சிங்கள ஊடகங்கள் பரபரப்புச் செய்திகளை வெளியிடத் தொடங்கியுள்ளன.
பொலிசாரின் ஆதரவுடன் சிங்களவர்களே கொலை, கொள்ளை தீவைப்பில் ஈடுபட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும போன்றோர் குற்றம்சாட்டி வரும் நிலையில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் முழுப் பூசினிக்காயை சோற்றில் மறைக்க முற்பட்டுள்ளார்.
அத்துடன் அளுத்கம இனக்கலவரத்தின் அடுத்த நாளே சிரச நிறுவனத்தில் பணியாற்றும் சாலிய டி. ரணவக்க போன்ற பொதுபல சேனா முக்கியஸ்தர்கள் இதே கருத்தை சமூக வலைத்தளங்களில் பரப்பத் தொடங்கியிருந்தனர்.
இந்நிலையில் பொலிஸ் திணைக்களமும் அதே கருத்தை தற்போது வெளியிட்டிருப்பது, பொது பல சேனா எழுதிக் கொடுப்பதை வாசிப்பதுதான் பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் பணியா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

ad

ad