புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 டிச., 2019

வடக்கில் உள்ளவர்களின் தலைகளில் பிரபாகரனின் சிந்தனைதான் ஓடுகிறது!
வடக்கில் உள்ளவர்களின் தலைகளில் இன்னமும் பிரபாகரனின் சிந்தனை தான் ஓடிக் கொண்டிருக்கிறது. இதனால், பிள்ளைகளின் மனங்களில் எல்லாம் பிரபாகரன் இருந்து வருகிறார் என இராஜாங்க அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க குற்றஞ்சாட்டினார்.
கண்டியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
வடக்கில் உள்ளவர்களின் தலைகளில் இன்னமும் பிரபாகரனின் சிந்தனை தான் ஓடிக் கொண்டிருக்கிறது. இதனால், பிள்ளைகளின் மனங்களில் எல்லாம் பிரபாகரன் இருந்து வருகிறார் என இராஜாங்க அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க குற்றஞ்சாட்டினார். கண்டியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இவர்களின் தலைகளில் இன்னமும் பிரபாகரனின் சிந்தனை தான் ஓடிக் கொண்டிருக்கிறது. வடக்கில் எமது உறவுகள், பிள்ளைகள் அனைவரும் கடந்த 30 வருடங்களாக பிரபாகரனுக்குக் கட்டுப்பட்டே வாழ்ந்து வந்தார்கள். இதனால், பிள்ளைகளின் மனங்களில் எல்லாம் பிரபாகரன் இருந்து வருகிறார். அவரது பெயரைச் சொன்னவுடன் கைத்தட்டுவதும், கூச்சலிடுவதும் இதன் விளைவுகளினால் தான்.

நீதியரசராக இருந்து வடக்கின் முதல்வராக பதவியேற்ற, சி.வி.விக்னேஸ்வரன் கூட இனவாதமாகத்தான் செயற்பட்டு வருகிறார். அவர். இளைஞர்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றுதான் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்.

ஆனால், இது பிழையானதொரு எடுத்துக்காட்டாகும். தமிழ், சிங்கள, முஸ்லிம்கள் என அனைவரும் ஒன்றிணைவதன் ஊடாகத்தான் இந்த பிரிவினைவாதத்தை இல்லாதொழிக்க முடியும்.

நாம்தான் இந்த இளைஞர்களின் மனங்களில் நல்லதை விதைக்க வேண்டும். 27 மொழிகளைக் கொண்ட இந்தியாவில் இனங்கள் ஐக்கியமாக வாழ முடியுமாக இருந்தால், ஏன் எம்மால் வாழ முடியாது.

அத்தனை மொழிகள் உள்ள இந்தியாவில், பெங்காலி மொழியில் தேசிய கீதத்தை பாட முடியுமாக இருந்தால், ஏன் இங்கு மட்டும் ஒரு மொழியில் தேசிய கீதத்தை பாட முடியாது?

இது முற்றுமுழுதாக இனவாதத்தை வெளிப்படுத்தும் ஒரு செயற்பாடாகும். தேவையில்லாமல் இனங்களை பிரிக்க வேண்டாம் என் நாம் கேட்டுக் கொள்கிறோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

ad

ad