-

3 ஜூன், 2026

பாஜகவில் பரபரப்பு: அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா! [Wednesday 2026-06-03 07:00]

www.pungudutivuswiss.com

பாஜகவில் இருந்து விலகும் முடிவில் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளார். இன்று பாஜக மேலிட தலைவர் நிதின் நபின், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து இந்த விஷயத்தை அண்ணாமலை தெரிவித்தார். அதோடு தமிழக பாஜகவினர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அண்ணாமலை முன்வைத்துள்ளார். இதையடுத்து உடனடியாக டெல்லி வரும்படி நயினார் நாகேந்திரனுக்கு மேலிடம் அதிரடி உத்தரவிட்டுள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த முக்கியமான தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை.

பாஜகவில் இருந்து விலகும் முடிவில் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளார். இன்று பாஜக மேலிட தலைவர் நிதின் நபின், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து இந்த விஷயத்தை அண்ணாமலை தெரிவித்தார். அதோடு தமிழக பாஜகவினர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அண்ணாமலை முன்வைத்துள்ளார். இதையடுத்து உடனடியாக டெல்லி வரும்படி நயினார் நாகேந்திரனுக்கு மேலிடம் அதிரடி உத்தரவிட்டுள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த முக்கியமான தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை

வெசாக் கூடு விவகாரம்- முழுப் பொறுப்பையும் தமிழ் மாணவர் சமூகத்தின் மீது சுமத்த முயற்சி! [Wednesday 2026-06-03 08:00]

www.pungudutivuswiss.com

யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தில் வெசாக் கூடுகள் சேதமாக்கப்பட்ட சம்பவத்தைப் பொதுமைப்படுத்தி, இதற்கான ஒட்டுமொத்தப் பொறுப்பையும் தமிழ் மாணவர் சமூகத்தின் மீது சுமத்தச் சில தரப்பினர் முயற்சிப்பதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர் ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளது.

தாயக எழுச்சிப் பாடலை பதிவிட்ட கிளிநொச்சி பாடகர் கைது! [Wednesday 2026-06-03 08:00]

www.pungudutivuswiss.com

தாயக எழுச்சிப் பாடலை எடிட் செய்து தனது தளத்தில் பதிவிட்ட கிளிநொச்சியை சேர்ந்த பாடகர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரியில் வைத்து யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட பாடகர் சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். தற்போது அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ad

ad