புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஆக., 2012

16 ஆயிரம் கோடி மோசடி : மதுரையில் பிரபல கிரானைட் அதிபர் பி.ஆர்.பழனிச்சாமி தலைமறைவு


சகாயம் ஐஏஎஸ், மதுரையில் கலெக்டராக இருந்தபோது, மதுரையில் நடக்கும் கிரானைட் மோச டியை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தார். அந்த சூழ்நிலையில் அவர் மே 23ம் தேதி மதுரை கலெக்டர் பதவியில் இருந்து கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக மாற்றப்பட்டார்.


அவர் பதவி மாற்றப்படுவதற்கு முன்பு, கடந்த மே 13ம் தேதி கிரானைட் மோசடி குறித்து ஆதாரங் களூடன் 13 பக்கங்கள் கொண்ட புகார் அறிக்கையை அனுப்பினார்.

அந்த மோசடி புகார் அறிக்கையில், கிரானைட் மோசடி மூலம் அரசுக்கு 16 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இதையடுத்து, இந்தப்புகாரின் பேரில் மதுரையின் தற் போதைய கலெக்டர் அன்சுல் மிஸ்ரா தலை மையில் 18 அதிரடி படைகள் சோதனை நடத்தியதில், கிரானைட் தொழிலில் பல்லாயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வரி ஏய்ப்பு நடத்தியிருப்பது தெரியவந்தது.


இதன் பேரில் பிரபல கிரானைட் அதிபர் பி.ஆர். பழனிச்சாமி மீதும் அவரது நெருங்கிய பி.எஸ். செல்வராஜ் மீதும் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர் மதுரை கீழ வளவு போலீசார்.

சாட்சியங்களை மறைத்தல், பொய்த்தகவல், திருட்டு, அத்துமீறல்,அரசு நில அபகரிப்பு, அரசு உத்தரவை மீறுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு செய்து இருவரையும் கைது செய்ய போலீசார் தேடி வருகின்றனர். பி.ஆ.பழனிச்சாமி தலைமறைவாகிவிட்டார். அவர் வெளிமாநிலத்திற்கு சென்றூ தலைமறைவாகியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

ad

ad