புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஆக., 2012

ஒலிம்பிக் ஹொக்கி: ஹாட்ரிக் தோல்வியால் இந்தியாவின் பதக்க கனவு தகர்ந்தது
லண்டன் ஒலிம்பிக் ஹொக்கியில் தொடர்ந்து மூன்றாவது தோல்வியை பதிவு செய்த இந்திய அணியின், பதக்க கனவு தகர்ந்தது. லண்டனில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் ஹொக்கி, “பி” பிரிவு லீக் போட்டியில், இந்திய அணி, நடப்பு சாம்பியன் ஜேர்மனியை சந்தித்தது. முதல் இரு போட்டிகளில் தோல்வியுற்ற இந்திய அணி, வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது.
போட்டி தொடங்கிய 7 வது நிமிடத்தில் ஜேர்மனியின் புளோரியன் பக்ஸ், தனது அணிக்காக முதல் கோல் அடித்தார். இதைச் சமன் செய்ய கிடைத்த, பெனால்டி கார்னர் (8வது நிமிடம்) வாய்ப்பை இந்திய வீரர்கள் வீணடித்தனர்.
பின்பு, 13வது நிமிடம் மற்றொரு பெனால்டி கார்னரை ரகுநாத் கோலாக மாற்ற, 1-1 என, ஸ்கோர் சமன் ஆனது. இம்மகிழ்ச்சி சிறிது நேரம் கூட நீடிக்கவில்லை. அடுத்த 3வது நிமிடம், புளோரியன் பக்ஸ் இரண்டாவது கோல் அடிக்க, ஜேர்மனி முன்னிலை பெற்றது.
தொடர்ந்து அசத்திய ஜேர்மனியின் ஆலிவர் கார்ன் 24வது நிமிடத்தில், கிறிஸ்டோபர் வெஸ்லே தலா ஒரு “பீல்டு” கோல் அடிக்க, முதல் பாதியில் ஜேர்மனி, 4-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதி தொடங்கிய வேகத்தில் புளோரியன் பக்ஸ், மூன்றாவது கோல் அடித்தார். 43, 48, 58 வது நிமிடங்களில் கிடைத்த அனைத்து பெனால்டி கார்னர் வாய்ப்புகளையும் இந்திய வீரர்கள் வீணடித்தனர்.
62வது நிமிடம் இந்தியாவின் துஷார் கண்டேகர், ஒரு கோல் அடித்து ஆறுதல் தந்தார். முடிவில், இந்திய அணி 2-5 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இதன் மூலம், அரையிறுதி வாய்ப்பை இழந்து, பதக்க கனவும் தகர்ந்தது.

ad

ad