புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஆக., 2012

அநியாயத்தைத் தட்டிக்கேட்க முடியாவிட்டால் ஆட்சிக் கதிரைகளில் இருந்து பயனில்லை!- ஹக்கீம்
கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு பிறகு மிக நேர்மையாக பேசுவதற்கு எங்களுக்கு அந்தஸ்தை தாருங்கள். அநியாயத்தை தட்டிக் கேட்பதற்கு எங்களுக்கு அந்தஸ்து இல்லையென்றால் ஆட்சிக் கதிரைகளில் இருப்பதில் எந்த அர்த்தமும் கிடையாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
காத்தான்குடியில் நேற்று மாலை நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் ஹக்கீம் மேற்கண்டவாறு கூறினார்.
அமைச்சர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
அமைச்சரவையிலும் இன்னும் சில இடங்களிலும் என்னை சண்டைக்கு இழுக்கும் பாணியில்தான் சில கதைகள் வரும். ஆனால் நான் சண்டைக்கு செல்வது கிடையாது. சண்டைக்கு இழுத்தாலும் நான் போக மாட்டேன்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமை பேசவேண்டிய இடத்தில் பேசும். அது ஏற்படுத்தும் தாக்கம் எதிரொலிக்க வேண்டிய இடத்தில் எதிரொலிக்கும். அந்த நம்பிக்கையுடன் நாங்கள் அரசியல் செய்கின்றோம்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைப் பாதுகாப்பதற்கான முக்கிய கவசம் எங்களுக்கு இருக்கின்ற அரசியல் அந்தஸ்து.
இதை முஸ்லிம் காங்கிரஸ் எப்படி பாவிக்கிறது என்பதை சாதரண பாமரர்கள் மிகக் கூர்மையாக பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனியாக இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு காத்தான்குடி நகர சபைத் தலைவர் மர்சூக் அஹமது லெவ்வையும் ஒரு காரணமாவார்.
ஏனெனில் சரியான நேரத்தில் அவர் எனக்கு எழுதிய கடிதத்தில் தனியாக முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என்பதற்கான காரணங்கள் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது எனத் தெரிவித்தார்.

ad

ad