புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஆக., 2012

தென்னிலங்கை பஸ் நடத்துனர்கள் யாழ். தமிழ் இளைஞனை பஸ்ஸில் இருந்து தள்ளிப் படுகொலை: பொது மக்கள் அச்சத்தில்
 
தென்னிலங்கை பஸ் நடத்துனர்களினாலும் சாரதிகளினாலும் தமிழ் இளைஞர் ஒருவர் கடுமையாகத் தாக்கப்பட்டு பஸ்ஸில் இருந்து கீழே தள்ளிவிட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்றிரவு 9.45 மணியளவில் கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த பஸ் ஒன்றில் யாழ். பஸ்ரியன் சந்தியில் இடம்பெற்றுள்ளது.
இதில் கிளிநொச்சி சோலைபல்லவராயன் கட்டையைச்  சேர்ந்த கண்ணன் வயது 25 என்ற இளைஞரே படுகோலை செய்யப்பட்டவராவார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா செல்வதற்காக பஸ்ரியன் சந்தியிலிருந்து நான்கு பேர் கொழும்பு செல்லும் பஸ்ஸில் ஏறியுள்ளனர். இவர்கள் ரிக்கெட் கேட்டு பணத்தைச் செலுத்தியபோது  அதிகூடிய பணத்தை நடத்துநனர் அறவிட்டுள்ளார்.
இதனைத் தட்டிக் கேட்டபோதே அவர்களை நடத்துனர்களும் சாரதிகளும் இணைந்து கடுமையாகத் தாக்கியதோடு பஸ்ஸில் இருந்தும் தள்ளிவிட்டுள்ளனர்.
இதன்போது பஸ்ஸின் சில்லு ஏறியதால் குறித்த இளைஞர் சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு சிகிச்சைக்கு பலனின்றி மரணமானார்.
இதனைத் தொடர்ந்து பொது மக்கள் குறித்த பஸ் நடத்துனர்களிடம் தர்க்கத்தில் ஈடுபட்டு பஸ்ஸை பொலிஸ் நிலையம் கொண்டு சென்றனர். தொடர்ந்து பொலிஸார் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டனர்.
குறித்த பஸ்ஸின் நடத்துனர்களும் சாரதிகளும் சிங்களத்தில் உரையாடியதோடு பயணிகளையும் அச்சுறுத்தியதாக பொது மக்கள் தெரிவித்தனர்.
அத்தோடு குறித்த பஸ் மற்றும் சாரதி நடத்துனர்கள் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத சில தகவல்கள் தெரிவிக்கி

ad

ad