புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஆக., 2012

தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமையோடு சுதந்திரமாக வாழ வீடு சின்னத்திற்கு வாக்களியுங்கள்! பிரசன்னா இந்திரகுமார்
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் வீடு சின்னத்திற்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்வதன் மூலம் எமது இனத்தை பிரித்தாள நினைக்கும் பேரினவாதிகளுக்கும் அதன் அடிவருடிகளுக்கும் எடுத்துக்காட்ட வேண்டும் என தமிழரசுக் கட்சி தேர்தல் வேட்பாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்துள்ளார். 
தமிழ் மக்களின் தாயக பூமியான இணைந்த வடக்கு கிழக்கில் எங்களை நாங்களே ஆள வேண்டும் என்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் கொள்கையை தமிழ் மக்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்பதை நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் வீடு சின்னத்திற்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யவேண்டும். என தெரிவித்தார்.
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இலங்கை தமிழரசுக் கட்சி வேட்பாளர் ஞானமுத்து கிருஸ்ணபிள்ளை தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உட்பட பிரதேச மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
பிரசன்னா இந்திரகுமார் தொடர்ந்து உரையாற்றுகையில்,
தமிழ் மக்கள் தமது பூர்வீக பூமியில் சுயநிர்ணய உரிமையோடு சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்காக அகிம்சை வழியில் போரடிய போதும் பேரினவாதிகள் ஏற்றுக் கொள்ளவில்லை.
அடுத்த கட்டமாக இளைஞர்கள் ஆயுதமேந்தி போராட்டத்தை முன்னெடுத்தனர் அந்தப் போராட்டம் 2009 ஆண்டு மே மாதத்துடன் முள்ளிவாய்காலில் முற்றுபெற்றது.
ஆனால் இந்த போராட்டத்தின் பயனாக தமிழ் மக்களின் உண்மையான பிரச்சினைசர்வதேச ரீதியில் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாம் அடுத்த கட்டமாக இராஜதந்திரரீதியல் எமது பிரச்சினைகளை அணுகவேண்டிய கட்டாயத்திலுள்ளோம்.
இவ்வாறான சூழ்நிலையில் கிழக்கு மாகாண சபைத் தேர்தல்நடைபெறவுள்ளது. கடந்த காலங்களில் எமது மக்களை பிரித்து ஆள நினைத்தவர்கள் இம்முறைதேர்தலில் பிரதேச வாதத்தை தூண்டும் வகையில் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன.
இவ்வாறு பிரித்தாள நினைப்பவர்களுக்கு வடக்கு கிழக்கு எமது தாயக பூமி என்பதை தமிழரசுக் கட்சியின் வீடு சின்னத்திற்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்வதன் மூலம் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.
1956 ஆண்டு தொடக்கம் தொடர்ச்சியாக வந்த தேர்தல்களில் எமது மக்கள் கொள்கை மாறாது ஒற்றுமையுடன் வாக்களித்துள்ளார்கள். கடந்த பாராளுமன்ற தேர்தலில்கூட தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து அரசுடன் இணைந்து போட்டியிட்டவர்களுக்கு தமிழ்மக்கள் ஆதரவளிக்கவில்லை.
அதே போன்று நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரை வெற்றி பெறச்செய்து நாங்கள் ஒற்றுமையுடன் இருக்கிறோம்.
இவர்கள் எங்களுக்கு ஒரு தீர்வைப் பெற்றுத் தருவார்கள் என்பதில் நாங்கள் உறுதியுடனுள்ளோம். தமிழ் மக்களுக்கு இருக்கின்ற அரசியல் பலம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரே என்பதை நிருபிக்க வேண்டும்.
இந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பை போட்டியிட விடக் கூடாது என்பதற்காக எமது வேட்பாளர்களை சீர்குலைய வைக்க வேண்டும். அவர்கள் நாங்கள் சுதந்திரமாக தேர்தலில் பங்குபற்றுவதை தடுக்க வேண்டும் என்பதற்காக தலைமை வேட்பாளர் துரைராஜசிங்கம் அவர்களின் வாசல் கதவில் பெரிய பூட்டு போட்டு பூட்டினார்கள். அதையும் தாண்டி எமது வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
அது மட்டுமின்றி மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தில் நான் மற்றுமொரு வேட்பாளர் பரசுராமன் சிவனேசன் சகிதம் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த வேளை பச்சை நிற ஆட்டோ ஒன்றில் வந்த இரண்டு, மூன்று பேர் அச்சுறுத்தி துண்டுப்பிரசுரங்களை பறித்து சென்றனர். இவ்வாறு பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நாங்கள் இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறோம் என்றார். 

ad

ad