புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஆக., 2012

டெசோ மாநாடு கலைஞரின் நாடகம்! "பெயர் தான் யாழ்தேவி! பயணம் வவுனியா வரை மட்டுமே"!
தி.மு.க தலைவர் கருணாநிதி அவர்களால் அறிவிக்கப்பட்டு நடாத்தப்படவிருக்கும் TESO மாநாட்டுப் பெயர்வழி நோக்கம் என்னவோ அழகானதாகவும், அர்த்தம் தோய்ந்ததாகவும் கானப்பட்டாலும்கூட, இது முற்று முழுதான கலப்படமற்ற கருணாநிதியின் அரசியல் நாடகமாகவே தமிழீழ மக்களாகிய எம்மால் நோக்கப்படுகின்றது.
போலி அரசியல் வார்த்தைகளைக் கூறி, தமிழ் நாட்டு உறவுகளின் அடிப்படை உணர்வுகளையே மக்கிப்போகச் செய்தது போதாது என்று எமது மக்களையும் ஏமாற்றி அரசியல் இலாபம் தேடும் இப்படியான நடவடிக்கைகளை எமது சமூகம் மிக இலகுவாக புரிந்துகொண்டுள்ளது என்பதை வெளிப்படுத்த எமது அரசியல் தலைவர்களுக்கு கிடைத்திருக்கும் ஒரு அரிய வாய்ப்பாகவே நாம் இதனை பார்க்கின்றோம்.
அன்று இருதிக்கருவறுப்பு நிகழ்ந்துகொண்டிருந்தபோது, அந்தக் கொடிய யுத்தத்தை நிறுத்த ஒரு முறையேனும் டெல்லி சென்று பேசாத இதே கருணா நிதி, தன் மகனுக்கு அமைச்சுபபதவி கோரி டெல்லி சென்றதை மறந்துவிட்டோமா..?
தமிழ் உணவாளர்கள் எல்லோரும் தம் உயிரைத்தீக்கிரையாக்கி (அப்துல் ரவுப், முத்துக்குமார்,...) உணர்வை வெளிப்படுத்தி யுத்தத்தை நிறுத்தக்கோரியபோது, 4 மணி நேர உண்ணாவிரத நாடகமாடி, யுத்தம் நிறுத்தப்பட்டதாக பொய் கூறி உணர்வாளர்களின் உணர்வுத்தீமீது நீரூற்றி அணைத்ததை மறந்துவிட்டோமா..?
தமிழீழக் குழந்தைகள் குண்டுவீசப்பட்டு கருகிக்கிடந்த காட்சிகளைப் பர்த்து இவை நிஜமானவை அன்று, ஏதோ திரைப்படக் காட்சிகள் என்றுரைத்ததை மறந்துவிட்டோமா..?
தமிழ் மக்கள் ஒன்றும் கொன்றொழிக்கப்படவில்லை, புலிகளிடமிருந்து மீட்கப்பட்டார்கள் என்று இந்திய மத்திய அரசிற்கு புகழாரம் சூட்டியதை மறந்துவிட்டோமா..?
தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாழுமன்ற உறுப்பினர்கள் குழு, தமிழ் நாடு சென்று, யுத்தத்தை நிறுத்தக்கோரி பிரச்சாரங்களை மேற்கொண்டபோது, முதலமைச்சரை சந்திக்க காத்துக்கிடந்தவேளையில், வாயிற்படியில் உறங்கும் நாய் போன்றேனும் மதித்து எம்மவர் துயரம் விசாரிக்காது இழுத்தடித்ததை மறந்துவிட்டோமா..?
உலகமே வெகுண்டெழுந்து போராடி, சனல்-4 போர்க்குற்ற காட்சிகளை வெளியிட்டபோது நாடகமாடியதை மறந்துவிட்டோமா..?
உலக அழுத்தம் இலங்கை அரசின்மீது அதிகரிக்கும்போது, நாடாளுமன்ற நாடக குழுவை அனுப்பி, ராஜபக்சவுடன் விருந்துண்டு பரிசுப்பொருள்களோடு நாடுதிரும்பி, ஈழ மக்கள் நின்மதியாக இருப்பதாக அறிக்கை விட்டு, சர்வதேச அழுத்தத்தை குறைத்ததை மறந்துவிட்டோமா..?
இவை அனைத்தயுமே இந்த கருணாநிதி செய்தது (முதல்வர்) அரசியல் அதிகாரத்தை வைத்துக்கொண்டு. இன்று இந்தச் சிறுபிள்ளைத்தனமான நாடகத்தை ஆரம்பித்திருக்கிறார்; மத்திய அரசில் அங்கம் வகித்துக்கொண்டு அவர்கள் மனம் நோகாதவண்ணம் செயல்பட விரும்புவதும் புலனாகவில்லயா..?
தான் செய்த குற்றங்களுக்காக தமிழ் மக்களிடம், தமிழீழ மக்களிடம் என்றேனும் மன்னிப்புக்கோரியதுண்டா..? குறைந்தபட்சம் தவறை உணர்ந்ததுண்டா..?
இப்பொழுதும் தான் செய்தது அனைத்தும் சரி என்று வாதாடும் போக்கை கொண்டவர்தான் இந்த கருணாநிதி..!
தமிழீழம் ஒன்றே எனது இலட்சியம், கனவு என்றெல்லாம் மொழிந்துவிட்டு; தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடை நீடிக்கப்பட்டதும் தமிழீழத் தீர்மானம் இருக்கது என்று சொன்னதிலிருந்தே அவரின் உள் நோக்கமும் மத்திய அரசின் திட்டமிட்ட அட்டவனையில் செயல்படுவதும் புலனாகவில்லயா..?
தமிழ் அரசியல் தலைமைகளே..!
அடுத்த தேர்தலுக்கு அரிசி, பருப்பு, தொலைக்காட்சி எடுபடாத பட்சத்தில் எடுபட்டதே இந்த 'TESO- மா நாடு'.
புகையிரதத்தின் பெயர் தான் 'யாழ்தேவி' அதன் பயணமோ வவுனியா வரை மட்டுமே, என்பது போலல்லவா இருக்கின்றது இந்த வேடிக்கை மாநாடு.
இன்னும் திருந்தாத அர்த்தமற்ற தீர்மானங்களைக்கொண்ட இந்த போலியான அரசியல் பிரச்சார மாநாட்டை, உண்மையான மக்கள்மீது அன்புகொண்ட தாயக அரசியல் தலைவர்கள் புறக்கணிக்க வேண்டும் என்பதே, வாக்களித்த எமக்கு நீங்கள் வழங்கும் கைம்மாறு...!
தமிழ்மகன்

ad

ad