புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஆக., 2012

அனாதை விடுதிகளில் இறந்த விதவைகளின் உடலை வெட்டி புதைக்கும் கொடுமை!

உத்தரபிரதேச மாநிலம் மதுரா அருகே விரிந்தாவன் என்ற இடத்தில் அரசு அனாதை விடுதிகளில் ஆதரவற்ற விதவைகள், முதியோர் தங்கியுள்ளனர். சமீபத்தில் இங்கு இறந்த விதவைகளின் உடலை உரிய முறைப்படி சடங்குகள் செய்யாமலும், துண்டு துண்டாக வெட்டி பைகளில் கட்டி அடக்கம் செய்யப்பட்டது.


இதற்கு அங்குள்ள சமூக நல அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. இதுபற்றி சுப்ரீம் கோர்ட்டில் தேசிய சட்டமைய அமைப்பைச் சேர்ந்த மூத்த வக்கீல் எல்.நாகேஷ்வர்ராவ் வழக்கு தொடர்ந்தார்.
அவ்வழக்கில், ‘’உத்தரபிரதேசத்தில் அனாதை விடுதிகளில் தங்கியுள்ள விதவைகளின் மரணத் துக் குப்பின் அவர்களது உடல்களுக்கு முறைப்படி இறுதி சடங்கு செய்வதில்லை. அதற்கு அரசு போது மான நிதி ஒதுக்கீடு செய்வதில்லை.
இதனால் இறந்த விதவைகளின் உடல்களை துண்டு துண்டாக வெட்டி சாக்கு பைகளில் போட்டு அப்புறப்படுத்தும் நிலை உள்ளது. எனவே கோர்ட்டு தலையிட்டு உரிய மரியாதையுடன் முறைப்படி
சடங்குகள் செய்து அடக்கம் செய்ய உத்தரவிட வேண்டும்.
மேலும் அங்கு தங்கியுள்ள விதவைகளுக்கு முறையான உணவு வழங்கவும், மதுரா அரசு டாக்டர்கள்
வாரம் இரு முறை சென்று அனாதை விடுதிகளில் உள்ள சுகாதார நிலைமை குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும்’’என்று கூறியிருந்தார்.
மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் டி.கே.ஜெயின், மதன் லோகூர் ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது. அப்போது நீதிபதிகள் உத்தரபிரதேச மாநில அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
பின்னர் நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், விதவைகள் இறந்ததும் உடல்களை உரிய மரியாதையுடன் அவர்கள் சார்ந்த மத வழக்கப்படி இறுதிச் சடங்குகள் செய்து அடக்கம் செய்ய வேண்டும். அனாதை விடுதிகளில் நடந்த சம்பவம் அதிர்ச்சிஅளிப்பதாக உள்ளது.

மதுரா மருத்துவமனை முதன்மை மருத்துவ அதிகாரி, அனாதை விடுதிகளில் இறக்கும் விதவைகளின் உடல்களை உரிய மத வழக்கப்படி அடக்கம் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
இந்த விஷயத்தில் மத்திய அரசு உத்தரபிரதேச அரசுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்க வேண்டும். தற்போது உத்தரபிரதேச அரசுக்கும், மத்திய அரசுக்கும் சுமூக உறவு இருப்பதால் அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’’என்று கூறப்பட்டது.






தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும் * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :

ad

ad