புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 செப்., 2012


பிரிட்டன் தமிழ் உணவகமொன்றில் சட்டவிரோதமாக பணிபுரிந்த மூவருக்கு 15,000 பவுண்ட் அபராதம்
லண்டன் நகரில் உள்ள லூசியம் பகுதியில் அமைந்துள்ள தமிழருக்கு சொந்தமான எவரெஸ்ட் உணவகத்தில் சட்டவிரோதமாக பணி புரிந்த மூவர் பிரித்தனிய குடிவரவு குடியகல்வு அமைச்சினால் நடத்தப்பட்ட திடீர் சோதனையின் போது கைது செய்யப்பட்டனர்.
கைதான மூவரும் பிரித்தானியாவில் தங்கி இருப்பதற்கான் விசா நிராகரிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து சட்டவிரோதமாக வாழ்ந்து வந்ததாக குடிவரவு குயகல்வு அதிகாரிகளினால் குற்றஞ்சாட்டப்பட்டது.  
கைதான மூவரிடமிருந்தும் தலா பதினைந்தாயிரம் பவுண்டுகள் தண்டமாக அறவிடப்பட்டுள்ளது.
33, 43, மற்றும்  52 வயதுடைய தமிழர்களே இவ்வாறு சட்டவிரோதமாக பணி புரிந்து வந்தநிலையில், இவர்கள் மூவரும் கடந்த வருடம் நவம்பர் இருபத்தைந்தாம் திகதி பிடிபட்டனர்.
எனினும் இவர்கள் மூவருக்குமான தண்டப் பணம் தற்போதே அறவிடப்பட்டுள்ளது.
பரபரப்பான பகுதியில் சுறுசுறுப்பாக இயங்கி வந்த எவரெஸ்ட்  சிறந்த உணவகமாக முன்னர் மக்கள் மத்தியில் பெயர் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
எனினும் கைதானவர்களின் பெயர் விபரங்களை குடிவரவு குடியகல்வு அதிகாரிகள்  இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad