புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 செப்., 2012


பிரதமர், சோனியா மீது வழக்கு பதிவு செய்யவேண்டும்! விஜயராஜ் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் கதறல்
பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா மீது விஜயராஜாவின் தற்கொலைக்கு காரணம் என வழக்கு பதிவு செய்தால்தான், விஜயராஜாவின் உடலை வாங்கிக்
கொள்வோம் என்று, அவரது உறவினர்களும், பல்வேறு அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சேலம் அரசு பொது மருத்துவமனைக்கு எதிரே சுமார் 10க்கும் மேற்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை நூற்றுக்கணக்கானோர் அமர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி வருகின்றனர்.
இவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வந்த சேலம் தாசில்தார் சுரேஷையும், பேசவிடாமல் திருப்பி அனுப்பி விட்டார்கள்.
அவரது உறவினர்கள் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள் அவரது உடலை வாங்க மறுத்துள்ளனர்.
எப்.ஐ.ஆர் பதிவு பிரதியை  பார்க்க அனுமதிக்க வேண்டும், கைப்பற்றப்பட்ட 36 பக்க கடிதத்தை திருப்பிக்கொடுக்க வேண்டும்,
அவர் கொடுத்த மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் பிரதமர் மன்மோகன் சிங், சோனியாகாந்தி, ராஜபக்ச ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யவேண்டும். அப்படி செய்தால்தான் நாங்கள் உடலை வாங்குவோம்’’ என்று பிடிவாதமாக இருப்பதோடு அல்லாமல், உடலை பிரேத பரிசோதனை  செய்வதற்கும் அனுமதி அளிக்காமல் உள்ளனர்.
விஜயராஜ் உறவினர்களோடு, அனைத்திந்திய பெருமன்றம், விடியல் பெண்கள் மையம், விடுதலை சிறுத்தைகள் மற்றும் பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், மருத்துவர்கள் மற்றும் பொலிஸார் சமாதானம் பேசிவருகின்றனர்.
தீக்குளித்து உயிரிழந்த விஜயராஜின் மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் எப்ஐஆர் பதிவு செய்தால்தான் அவரது உடலை அங்கிருந்து எடுக்கவே நாங்கள் அனுமதிப்போம் என்று பல்வேறு கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ad

ad