புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 செப்., 2012


காயக்குழி காட்டிற்குள் மரங்களுக்கு கீழ் இருந்து கல்வி கற்கும் மாணவர்களுக்கு ரி.ஆர்.ரி Radio உதவி!

மன்னார் முள்ளிக்குளத்திலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் எந்த ஒரு வசதிகளுமற்ற காட்டுப்பகுதியான காயக்குழி எனும் இடத்தில் வசித்து வருகின்றனர்.  இங்குள்ள
மாணவர்கள் மரங்களுக்கு கீழேயே கல்வி கற்கின்றனர். எந்த ஒரு அடிப்படை வசதிகள் கூட அந்த மாணவர்களுக்கு செய்து கொடுக்கப்படவில்லை.
இந்நிலையில் ரி.ஆர்.ரி தமிழ் ஒலி வானொலி நேயர்களின் பங்களிப்புடன் வழங்கப்பட்ட கற்றல் உபகரணங்களை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அந்த மாணவர்களுக்கு கையளித்தார்.
தற்போது அப்பகுதி மக்கள் மரங்களை வெட்டி கம்புகளை கொண்டு சிறு கொட்டில்களை அமைத்து வருகின்றனர். அரசாங்கம் இந்த மக்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்றும் அடந்த காட்டிற்குள் மரங்களுக்கு கீழ் இருந்தே மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர் என அங்கு நேரில் சென்று திரும்பிய நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

ad

ad