புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 செப்., 2012


சலுகைகளை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கத்துடன் பேசமுடியாது: செல்வம் அடைக்கலநாதன்
நாங்கள் சலுகைகளை அடிப்படையாகக் கொண்டு பேசமுடியாது. தமிழ் மக்களின் உரிமை தொடர்பில் பேசி ஒரு இணக்கப்பாட்டுக்கு வருகின்றபோதுதான் அரசாங்கத்துடன் இணைந்து ஆட்சியமைக்கும் நிலை உருவாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு நகரில் உள்ள தமிழீழ விடுதலை இயக்க( டெலோ) அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதையடுத்து, இது தொடர்பில் தேர்தல் ஆணையாளருக்கு முறைப்பாடு தெரிவித்துள்ளோம். தேர்தல் ஆணையாளர் இங்கிருக்கும் பாதுகாப்பு உயரதிகாரிகளை எமது உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கூறியுள்ளார்.
அந்தவகையில், இங்கிருக்கும் பிரதி பொலிஸ்மா அதிபரிடம் இது தொடர்பில் ஆணை வழங்கியுள்ளதாக தேர்தல் ஆணையாளர் கூறியுள்ளார்.
அது தொடர்பில், பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு வழங்குமாறு ஆணை கிடைத்தவுடன் பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் பிரதி பொலிஸ்மா அதிபர் உறுதியளித்துள்ளார். தமது உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நடவடிக்கையெடுத்து வருகின்றது.
அரசாங்கத்துடன் தேசிய அரசாங்கம் அமைக்கும் நிலையேற்படுமாகவிருந்தால் எங்களது கோரிக்கைகளை நிபந்தனையாக ஏற்றுக்கொள்ளப்படும் சந்தர்ப்பத்திலேயே இந்த அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதான முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

ad

ad