புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 செப்., 2012

டி20 உலகக் கிண்ண பயிற்சி: அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது இங்கிலாந்து
அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கெதிரான டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இலங்கையில் நாளை தொடங்க உள்ள டி20 உலகக் கிண்ண தொடருக்கு முந்தைய பயிற்சி ஆட்டம் நடைபெற்று வருகிறது.
கிரிக்கெட் கிளப் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியும், அவுஸ்திரேலியா அணியும் மோதின.
முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 172 ஓட்டங்கள் எடுத்தது.
தொடக்க வீரராக களமிறங்கிய அலெக்ஸ் ஹேல்ஸ் 52 ஓட்டங்களும், அடுத்து களமிறங்கிய லூக் ரைட் 35 ஓட்டங்களும், மோர்கன் 30 ஓட்டங்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
இதனையடுத்து 173 ஓட்டங்கள் இலக்குடன் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 163 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
தொடக்க வீரராக களமிறங்கிய ஷேன் வாட்சன் 37 ஓட்டங்களும், அடுத்து களமிறங்கிய மைக் ஹஸ்சி 71 ஓட்டங்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
பந்துவீச்சில் இங்கிலாந்து அணி சார்பாக ஸ்டீவன் பின் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இன்று நடைபெற்ற மற்ற போட்டிகளில் அயர்லாந்து, வங்கதேச அணிகள் மோதிய போட்டியில் அயர்லாந்து அணி 164 ஓட்டங்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய வங்கதேசம் 159 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
ஆப்கானிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் மோதிய போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ad

ad