""ஏழு நாள் கஸ்டடி கேட்டோம்.. ஆறு நாள் கிடைச்சிருக்கு.. இவங்கள்ல மூணு நாலு பேரு கத்துக்குட்டி பசங்க.. பகல்ல லோடுமேன் வேலை பார்த்துட்டு ராத்திரி பார்ட் டைம் ஜாப் பார்க்கிற மாதிரி.. கொலை செய்ய வந்தவனுக.. ஒழுங்கா அருவா பிடிக்கத் தெரியாதவனுக.. அதான்.. பொட்டு சுரேஷ போடுறப்ப சந்தானம் கையிலயும் வெட்டு விழுந்திருக்கு.. இவங்ககிட்ட இருந்து உண்மைய வரவழைக்க ஆறு நாள் எதுக்கு? ஆறு மணி நேரமே போதும்..''’ நக்கீரன்
மதுரை ஜுடிசியல் கோர்ட்டிலிருந்து சபாரத்தினம், சந்தானம் உள்ளிட்ட ஏழு பேரையும் கஸ்டடிக்கு அழைத்துச் சென்றபோது ஒரு சீனியர் காக்கி அடித்த கமெண்ட் இது. ஆனாலும், போலீஸ் காவலில் இருக்கும் இந்த 7 பேருக்காக சுப்பிரமணியபுரம் காவல் நிலையத் தையே அடைத்து வைத்திருக்கிறார்கள்.
’’இவங்க யார் யாருகிட்ட செல்போன்ல பேசியிருக்காங்க.. ட்ரேஸ் பண்ணுற வேலைய நீங்க பாருங்க.. அட்டாக் பாண்டி சென்னைல இருக்கான்னு தகவல் கிடைச்சிருக்கு.. அங்க போயி தேடுங்க.. ஒரு டீம் கொடைக்கானல் போங்க..’’
-அசிஸ்டெண்ட் கமிஷனர் கணேசன் தலைமையில் திடீர் நகர் இன்ஸ்பெக்டர் நாகராஜா, சுப்பிரமணியபுரம் இன்ஸ்பெக்டர் பிரபு, கீரைத்துறை இன்ஸ்பெக்டர் செந்தில், விளக்குத் தூண் இன்ஸ்பெக்டர் கதிர்வேல், திலகர் திடல் இன்ஸ்பெக்டர் ராஜன்பாபு என டீம் அமைத்து ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு அசைன்மெண்ட் தந்து முடுக்கி விட்டிருக்கிறார் டி.சி. திருநாவுக்கரசு.
பொட்டு கொலையில் சம்பந்தப் பட்டிருப்பதாக போலீசார் சந்தேகப்படும் அட்டாக் பாண்டி, விஜயபாண்டி உள் ளிட்ட 16 பேர் தலைமறைவாக இருக் கிறார்கள். இவர்களைப் பிடிப்பதற்கு தேடுதல் வேட்டை நடத்திக் கொண்டிருக் கிறார்கள் தனிப்படையினர்.
காவல் நிலைய விசாரணையின் போது ஏழு பேருமே அழுத்தமாக இருந்திருக் கின்றனர். காக்கிகளும் "சரிடா.. பேச வேணாம்.. என்ன நடந்துச்சுன்னு எழுதி யாச்சும் கொடுங்க..' என்று வழக்கத்துக்கு மாறாக பவ்யம் காட்டியிருக்கிறார்கள். ‘பொட்டு சுரேஷுன்னா யாரு?’ என்று கேட்பது போல ஏழு பேரும் தொடர்ந்து மவுனம் காக்க.. ""சபாரத்தினம்.. நீதான்டா விஜயபாண்டிகிட்ட அடிக்கடி பேசியிருக்க.. கால் டீடெய்ல்ஸ் எங்ககிட்ட இருக்கு.. எதுக்கு பேசின? என்ன பேசின? ஒழுங்கு மரியாதையாச் சொல்லிரு..'' என்று போலீசார் ஆதாரத்தை நீட்டி கிடுக்கிப்பிடி போட, வெலவெலத்துப் போயிருக்கிறான் சபாரத்தினம்.
மேலும், ""கொலை நடந்த அன் னைக்கு சாயங்காலம் ஆறு மணில இருந்து ராத்திரி பத்து மணி வரைக்கும் நீங்கள்லாம் ஒருத்தனுக்கொருத்தன் பேசிக்கிட்டு இருந்திருக்கீங்க.. மொதல்ல அண்ணா நகர், குயவர் பாளையம், எஸ்.எஸ்.காலனி, மூன்றுமாவடி, கோரிப்பாளை யம்னு ஆளுக்கொரு திசைல இருந்து பேசிட்டு.. அப்புறம் மொத்தமா பொட்டு கொலை யான இடத்துல அசெம்பிள் ஆயிருக்கீங்க.. இத நாங்க சொல்லல.. சைபர் கிரைம் எடுத்துக் கொடுத்த கால் டீடெய்ல்ஸ் சொல்லுது.. பத்து மணிக்கு மேல செல்போன ஸ்விட்ச் ஆஃப் பண்ணுனது யார் யாரு.. மறுநாள் காலைல 9 மணி வரைக்கும் செல் போன்ல பேசிக் கிட்டிருந்தது யார் யார்ன்னு எல் லாம் எங்களுக்குத் தெரியும்..'' என்று தங்களது பிடியை மேலும் இறுக்கியிருக் கிறார்கள் காக்கிகள். அதே நேரத்தில், ""அட்டாக்குக்காக இல்லைன்னா.. வேற யாருக் காகத்தான் இத செஞ்சீங்க?'' என்று வேறொரு கோணத் திலும் வேகம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
ஏழு பேரில் ஒவ் வொருவரையும் தனித்தனி யாக விசாரித்து வரும் காவல்துறையினர், இடது கை வெட்டுக் காயத்துக்கு கட்டு போட்டிருக்கும் சந்தானத்தை அவன் வீடு இருக்கும் சிந்தாமணி ரயில்வே கேட் பகுதிக்கு அழைத்துச் சென்றனர். காக்கிகள் வருவதற்கு முன்பாகவே அங்கு சென்ற நாம் சந்தானத்தின் சொந்த பந்தங்களிடம் பேச்சுக் கொடுத்தோம்.
""லோடுமேன் வேலை பார்த்துட்டு களைச்சுப் போயி வர்றவனுக.. பொழுது சாஞ்ச பிறகு இந்தப் புலிக் கொடிக்கு கீழதான் (பூமிநாதன் பாசறை) உக்காந்து பேசிக்கிட்டிருப்பாங்க.. வௌயாட்டுப் பசங்க.. வெவரம் பத்தாது.. இந்த சந்தானம் இருக் கானே.. இவன் போலீசு வேலைல சேர வேண் டியவன்.. இல்லைன்னா மிலிட்டரி வேலைக்கு போகணும்னு நெனச் சான்.. கால நேரம் பாருங்க.. போலீசு இழுத்துக்கிட்டு வந்து இங்க ஜீப்ல உக்கார வச்சிருக்கு.. தங்கச்சி மேல அம்புட்டு பாசமா இருப்பான்.. அவளுக்கு பார்த்த மாப்பிள்ளை வீட்டுக்காரங்க அன் னைக்கு பார்த்து இங்க வந்துட்டாங்க.. போலீசு என்னடான்னா.. அவங் களயும் பிடிச்சுட்டுப் போயிருச்சு.. அவன் குடும்பத்த மட்டும் பிடிச் சிட்டுப் போயிருந்தா இம்புட்டு சங் கடப்பட்டிருக்க மாட்டான்.. கல் யாணம் ஆகுற துக்கு முன்னாலயே.. தங்கச்சி வாக்கப்பட்டு போற வீட்ல உள்ளவங்கள பிடிச்சிட்டுப் போனதுனாலதான் இம்புட்டுச் சிரமமும்.. இவங்கள்லாம் கொலை செஞ்சிருக் காங்கன்னு போலீசு சொல்லுது.. எங்களால நம்பவே முடியல.. சூதுவாது தெரியாத பசங்க.. உண்மையச் சொல்லிட்டா.. போலீசு அடிக்காதுல்ல..’’என்று நம்மிடம் கேட்டார் கள் வெள்ளந்தியாக.
"அட்டாக்க பிடிச்சு வச்சிருக்கு போலீசு.. எப்ப வேணாலும் எதுவும் நடக்கலாம்..' என்று தகவல் ஒன்று பரவிக் கிடக்க, காக்கிகள் வட்டார மோ “செல்போன் ட்ரேஸ் பண்ணுன துல அட்டாக்கின் அக்கா மகன் விஜயபாண்டியைத் தாண்டி வேறு யாருக்கும் இவங்ககிட்ட இருந்து போன் போகல.. குறிப்பா.. அட்டாக் பாண்டியோட நம்பரே யாரோட கால் லிஸ்ட்லயும் இல்ல..'' என்று விழிகளை விரிக்கிறது.
குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ஏழு பேரின் வழக்கறிஞர் கண்ணன்
""எனக்கு ரெண்டாயிரம் ரூபாய் ஃபீஸ் கொடுத்தாங்க.. அப்புறம் பெயில் எடுக்கிறப்ப பார்த்துக்கலாம் னுட்டாங்க.. அவங்க கையில வச்சி ருந்தது மூவாயிரமோ.. நாலாயிரமோ தான்.. இவங்கள்லாம் அட்டாக் பாண்டியின் ஆதரவாளர்கள்தான்.. ஆனா.. அவர் சொல்லித்தான் கொலை செஞ்சாங்களான்னு தெரி யல.. பணம் வாங்கிட்டு பண்ணுன மாதிரியும் தெரியல.. ஒரே புதிராத்தான் இருக்கு..'' என்றார். விசாரணையின் போக்கு குறித்து அசிஸ்டெண்ட் கமிஷனர் கணேசனிடம் கேட்டோம்.
""இன்வெஸ்டிகேஷன் நடந்துக்கிட்டிருக்கு.. அந்தப் பசங்க எதுவும் சொல்ல மாட்டேங்கிறாங்க..'' என்றார்.
டெபுடி கமிஷனர் திருநாவுக்கரசுவை சந்தித்தோம்.
""மத்த கொலைக் கேஸுங்க மாதிரி.. ஒரு கொலை.. ஒரே கோணம்னு விசாரிக்கிற கேஸு இது இல்ல.. பத்து விதமா பார்க்க வேண்டியிருக்கு.. அப்படி பார்த்ததுனாலதான் கொலையாளிகள் வந்த (குட்டி யானை) வேனையும் டூ வீலரையும் செக்யூர் பண்ண முடிஞ்சுச்சு.. ஏழு பேருல ஒருத் தன பேச வச்சிருக்கோம்.. தெற்கு வாசல்ல ஒரு பிரைவேட் கிளினிக்லதான் அவன் ட்ரீட்மெண்ட் எடுத்திருக்கான்.. அங்க போயி அதை கன்ஃபர்ம் பண்ணிட்டு.. அப்படியே அவன் ஏரியாவுக்கு கூட்டிட்டுப் போனோம்.. அப்புறம்.. அவங்க போட்டிருந்த ட்ரெஸ்ஸு.. யூஸ் பண்ணுன அருவா.. கத்தியையெல்லாம் செக்யூர் பண்ணிருக்கோம்.. அட்டாக் பாண்டிய இன்னும் பிடிக்கவே இல்ல.. இன்னும் ரெண்டே நாள்ல நடந்தது அத்தனையவும் வெளிக்கொண்டு வந்திருவோம்..'' என்றார் அத்தனை உறுதியான குரலில்.
‘யாருக்காக பொட்டுவைக் கொன்றார்கள்? கொலை யின் பின்னணி என்ன?’
அரசியல் கட்சியினரை மட்டுமல்ல.. மதுரையைத் தாண்டி யும் மக்களை மண்டை காய வைக்கின்ற கேள்விகளாக இருக்கின்றன.
-சி.என்.இராமகிருஷ்ணன்
படங்கள் : அண்ணல், ஷாகுல்
பொட்டுகுடும்பத்தினரின் வேதனை!
பொட்டு சுரேஷின் குடும்பத்தினரும் கொதித்துப் போய்த்தான் இருக்கிறார்கள். பொட்டுவின் அண்ணன் அசோகனைச் சந்தித்தோம்.
பொட்டு சுரேஷ் குடும்பத்தினர் வெளிப்படுத்திய ஆதங்கம் குறித்து மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் கருத்தினை அறிய, அவரது வீட்டுக்குச் சென்றோம். வாசலிலேயே நம்மைத் தடுத்த உதவியாளர் “""பத்திரிகைக்காரங்களா இருந்தாலும்.. யாரா இருந்தாலும்.. அவரை இப்ப பார்க்க முடியாது.. இன்னும் மூணு வாரத்துக்கு அண்ணன் யாருகிட்ட யும் பேச மாட்டாரு.. அவருக்கு கால் வலி.. போங்க.. போங்க..'' என்றார். அழகிரிக்கு கால் வலி! பொட்டு சுரேஷ் குடும்பத்தினருக்கோ மன வலி! |
சொத்துக்காகவா?
அவருக்கு எப்படி பொட்டு சுரேஷ் நெருக் கமோ.. அது போலவே அவரது மகனுக்கு அட்டாக் பாண்டியிடம் நெருக்கம். அட்டாக் மூலமாக இவ் விருவரையும் இக்கொலைச் சதியில் சிக்க வைக் கின்ற அரசியல் வேறு காக்கிகளை பாடாய்ப் படுத்துகிறதாம். "ஆபத்து என்னை நெருங்கி விட்டது போலத் தெரிகிறது .. பத்து பேரை கூட வைத்துக் கொள்ளட்டுமா?' என்று அவரிடம் பொட்டு கேட்டபோது "வேணாம்யா..' என்று அலட்சியமாகச் சொல்லி விட்டாராம் அவர். இந்த டென்ஷனை தணித்துக் கொள்ளத்தான் சோலை ராஜா போன்ற நண்பர்களுடன் கொடைக்கானல் சென்றாராம் பொட்டு. அங்கு நட்சத்திர விடுதியில் அறையை விட்டு வெளி வராமலேயே தங்களை ரிலாக்ஸ் செய்து கொண்டார்களாம். இந்த விவகாரத்தையும் துருவிக் கொண்டிருக்கும் போலீஸ், சொத்தைக் கைப்பற்றுவதற்காக நடந்த கொலையாக இருக்குமோ? என்ற கோணத்திலும் விசாரிக்கிறது.
|
அந்த இன்னொரு செல்போன்?
சைபர் குற்றங்கள் குறித்து நன்கறிந்த ஒரு காக்கிச் சட்டை, ""பெரிய அதிகாரிகளுக்கு நாம யோசனை சொல்ல முடியாது. இப்பல்லாம் ஐ.டி. ப்ரூஃப் இல்லாம சிம் வாங்கிறது சர்வ சாதாரணமா நடக்கு.. யாரப் பார்த்தாலும் ரெண்டு சிம் வச்சிருக்கான்.. அதுவும் ரெகுலரா மர்டர் பண்ணுற நெட்வொர்க்ல இருக்கிறவன் நிச்சயம் ரெண்டு சிம் வச்சிருப்பான்.... ஒவ்வொரு ஆபரேஷனுக்கும் ஒரு போன்.. ஒரு சிம்முன்னு தெளிவா இருப்பான்.. ஆபரேஷன (கொலை) முடிச்சதும் போனையும் சிம்மையும் உடைச்சி சாக்கடைல தூக்கி வீசிருவான்.. இவங்க டெக்னிக் என்னன்னா.. இவன் ரெகுலரா பேசுற சிம்ல இருந்து இவங்கள ஏவி விடற தலைவனோட ரெகுலர் போனுக்கு மிஸ்டு கால் கொடுப்பான்.. உடனே.. அந்தத் தலைவனோட இன்னொரு போன்ல இருந்து இவன்கிட்ட இருக்கிற இன்னொரு போனுக்கு கால் வரும்.. ஆபரேஷனுக்கு யூஸ் பண்ணுற இன்னொரு போன்ல இருந்துதான் ரெண்டு பேருமே மாறி மாறி பேசிக்குவானுக.. பேசி முடிச்சதும் அந்த ரெண்டாவது போனை ரெண்டு பேருமே ஆஃப் பண்ணி வச்சிருவானுக.. தெளிவான கிரிமினல் நெட்வொர்க்கோட நடைமுறை இப்படித்தான் இருக்குது.. இப்ப இந்தக் கேஸுல எங்க டிபார்ட்மெண்ட் எப்பவுமே ரெகுலரா பேசுற போனை மட்டும்தான் ட்ரேஸ் பண்ணிருக்கு.. சந்தேகத்துக்குரிய நபர்கள் வச்சிருந்த அந்த இன்னொரு போன் எதுன்னு கண்டுபிடிக்கிற முயற்சியில இறங்கல..'' என்று குறைப்பட்டுக் கொண்டார்.
|