புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 பிப்., 2013


யாழ்.நாவற்குழியில் பா.உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சிங்கள மக்கள்
யாழ்.நாவற்குழி பிரதேசத்திலுள்ள நிலமைகளைப் பார்வையிடச் சென்றிருந்த கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரனுடன் அங்கு குடியேற்றப்பட்டிருக்கும் சிங்கள மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த பகுதியிலுள்ள தமிழ் மக்களுடைய நிலமைகள் குறித்துப் பார்வையிட பாராளுமன்ற உறுப்பினர் இன்று காலை சென்றிருந்தார். இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பிரை அழைத்த சிங்கள மக்கள், இந்த இடத்தில் நாங்கள் வாழப்போகின்றோம். நாங்கள் இங்கேதான் இருப்போம் என கூறினர்.
இதற்குப் பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர், நீங்கள் இருக்கும் இந்த இடத்தில் முன்னர் தமிழ் மக்கள் வாழ்ந்தனரே, அவர்களுடைய நிலை என்ன? அவர்களுக்கு யார் பொறுப்புக் கூறுவார்கள் என கேட்டார் அதற்கு பொருத்தமற்ற முறையில் வாய்த்தர்க்கத்தில் சிங்கள மக்கள் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, நான் உங்களுடன் பேச வரவில்லை, நான் என்னுடைய மக்களுடன் பேச வந்திருக்கிறேன் எனக்கு அனைத்தும் தெரியும் என்று கூறி விட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
இந்நிலையில் அந்தப்பகுதியில் நன்கு திட்டமிட்ட வகையில் நிரந்தர வீடுகளும், பொதுமண்டபங்களும், தண்ணீர் தாங்கிகளும் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
ஆனால் அதே பகுதியிலுள்ள சுமார் 100ற்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த தமிழ் மக்களுக்கு எந்தவிதமான உதவித்திட்டங்களும் இதுவரையில் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இப்பகுதியிலுள்ள தமிழ் மக்களை நேரில் பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் அவர்களுடைய பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்தனர்.

ad

ad