புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 பிப்., 2013




          ""ஹலோ தலைவரே... அந்த திருமண விழாவில் ரொம்பவும் எதிர் பார்க்கப்பட்ட இரண்டு தலைவர்களின் சந்திப்பு நடக்கலையே.''…

""பிப்ரவரி 7-ந் தேதி திருச்சியில் நடந்த தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா வீட்டுத் திரு மணத்தில் கலைஞரும் விஜயகாந்த்தும் சந்திப் பாங்கங்கிற எதிர்பார்ப்பு நிறைவேறாததைத் தானே சொல்றே?  திருச்சியில் திருமணம் நடந்த அதே நாளில், திண்டுக்கல் கோர்ட்டிலும் விஜயகாந்த் விசாரணையை எதிர்கொண்டாக வேண்டியிருந்தது. சென்னையிலிருந்து ஃப்ளைட் டிக்கெட்டெல்லாம் புக் ஆகியிருந்தும் போக லையே..''நக்கீரன் 

""என்ன விவரம்னு தே.மு.தி.க வட்டாரத்தில் விசாரிச்சேங்க தலைவரே.. .. சட்டமன்றத்தில் ஆளுநர் உரை மீதான விவாதம்  நடந்துக்கிட்டி ருந்த சமயத்தில், விஜயகாந்த்கிட்டே தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் சிலர், "தி.மு.க.வோடு சேர்ந்து சட்டமன்றத்தில் பிரச்சினைகளைக் கிளப்பலாமா'ன்னு கேட்டிருக்காங்க. அதற்கு விஜயகாந்த், "சும்மாவே அந்தம்மா ஏகப்பட்ட கேஸைப் போடுது. சட்டமன்றத்தில் ஒன்றாக செயல்பட்டால் சும்மா இருக்குமா?'ன்னு கேட்டிருக்காரு. எம்.பி. தேர்தலுக்கு இன்னும் கால அவகாசம் இருப்பதால, இப்பவே தி.மு.க.வோடு இணைந்து  செயல்பட்டால், தே.மு.தி.க எம்.எல்.ஏ.க்களை அ.தி.மு.க பக்கம் இழுக்கிற வேலைகளை ஆளுங்கட்சி சீரியஸா தொடங்கிடும்னும் விஜயகாந்த் நினைக்கிறாராம். அதனால, அ.தி.மு.க தலைமையின் கண்ணை உறுத்தாம காய் நகர்த்தணும்ங்கிறது விஜயகாந்த்தோட கணக்காம். அதோடு இன்னொரு கணக்கும் இருக்குதாம்?''

""என்ன கணக்கு?''

""கல்யாணத்தில் கலைஞரோடு ஒன்றாகக் கலந்து கொண்டால், மணமக்களை வாழ்த்திப் பேசுற ஒவ்வொருத்தரும் கூட்டணி பற்றித்தான் பேசுவாங்க. கலைஞரும் இதை அரசியல் ரீதியாத்தான் மூவ் பண்ணு வாரு. ஒரு நல்ல நிகழ்ச்சியில், மறுப்பான கருத்து களையும் சொல்ல முடியாது. தி.மு.க தரப்பு பேசுவதை ஏற்றுக்கொள்வதுபோலானால், கூட்டணி விஷயத் தில் தே.மு.தி.க.வின் பிடி தளர்ந்திடும். அதனால் இப்ப பிடி கொடுக்காமல் எலெக்ஷன் நேரத்தில் கூட்டணி பற்றி பேசினால்தான் அதிக சீட் கிடைக் கும்ங்கிறதுதான் அந்தக் கணக்கு. குடும்பத்தோடு விஜயகாந்த் நடத்திய ஆலோசனையிலும் இதே கணக்குத்தான் போடப்பட்டதாம். அதே நேரத்தில், கூட்டணிக்கான மூவ்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்குது.''

""திருச்சியில் கலைஞர்கிட்டே இந்தக் கூட்டணி மூவ் பற்றி பத்திரிகையாளர்கள் கேட்டப்ப, "விஜயகாந்த் நெருங்கி வர்றது உங்களுக்குப் பிடிக்கலையா?'ன்னு திருப்பிக் கேட்டிருக்காரே கலைஞர்.. கணக்குகள் எப்படி அமையுதுன்னு பார்ப்போம். பெங்களூரு ஸ்பெஷல் கோர்ட் கேஸ் தொடர்பாக கார்டன் தரப்பில் புதுப்புது கணக்குகள் போடப்படுதாமே!''

""உங்களுக்கும் ஸ்மெல் வந்திடிச்சா... இந்தத் தரப்பு வக்கீல்கள் அங்கே ஒரு தலைவர் வீட்டில், தாமாகப் போய் அட்டெண்டன்ஸ் போட்டுக்கிட்டி ருந்தாங்க. கர்நாடக அரசியல்வாதிகளே அவ்வளவா ஞாபகம் வச்சிக்காத அந்தத் தலைவர், அந்த மாநி லத்தின் முன்னாள் முதல்வர் தரம்சிங். காங்கிரஸ்காரர். கர்நாடகாவில் முதல்வரா இருந்தாலும் அவரோட பூர்வீகம், ராஜஸ்தான் மாநிலம். சொத்துக் குவிப்பு கேஸில் புது பி.பி.யா நியமிக்கப்பட்டிருக்கிற பவானிசிங் கும், தரம்சிங்கும் சொந்தக்காரங்க. அதனால்தான், தரம்சிங் கைத் தேடிப் போயிருக்காங்க இந்தத் தரப்பு வக்கீல்கள்.''

""தரம்சிங் ஆட்சியில்தான் முதன்முதலில் கர்நாடக ஹைகோர்ட்டில் பவானிசிங் பி.பியாக நியமிக்கப்பட்டார் னும், அப்புறம் பா.ஜ.க ஆட்சியிலும் அவர் தன்னோட செல்வாக்கை நிலைநிறுத்திக்கிட்டாருன்னும் கேள்விப்பட்டி ருக்கேம்ப்பா. கர்நாடக ஹைகோர்ட்டின் தலைமை நீதிபதி பொறுப்பில் இருக்கிற ஸ்ரீதர்ராவின் பரிந்துரைதானே சொத்துக் குவிப்பு கேஸில் இவர் பி.பி.யாவதற்குக் காரணம்?''


""ஆமாங்க தலைவரே..  … ஆச்சார்யா அளவுக்கு பவானி சிங்குக்கு சீனியாரிட்டி கிடையாது. அதனாலதான் தரம்சிங் மூலமா வக்கீல்கள் ட்ரை பண்ணிப் பார்த்திருக்காங்க. தரம்சிங் உடனே இதை தன்னோட கட்சித் தலைவரான சோனியா காந்தியின் கவனத்துக்குக் கொண்டு போயிருக்கிறார். எந்த விதத்திலும் அ.தி.மு.க தரப்புக்கு அட்ஜஸ்ட்மெண்ட் செய்திடக் கூடாதுன்னு அங்கிருந்து கண்டிப்பான குரல் வந்திருக்கு.''

""காங்கிரஸ் தலைமையோடு நெருக்கமா இருக்கிறவரிடம் சிபாரிசுக்காக இந்த வக்கீல்கள் போகலாமா?''

""எந்தக் கல்லையாவது எறிவோம். எந்த மாங்காயாவது விழட்டும் என்ற வியூகத்தில்தான் வக்கீல்கள் டீம் செயல்படுகிறதாம். அதாவது, சொத்துக் குவிப்பு கேஸில் ஆஜர்படுத்தப்படும் விட்னஸ்களை ஆச்சார்யாவின் ஜூனியரும் தற்போதைய பி.பி. பவானி சிங்குக்கு அசிஸ்ட் செய்ய நியமிக்கப்பட்டவருமான சந்தேஷ் சவுடா க்ராஸ் பண்ணிவிடக்கூடாதுங்கிறதுதான் இந்தத் தரப்பு வக்கீல்களின் பதட்டம். பவானிசிங்கே கிராஸ் செய்தால் போதும்னு நினைக்கிறாங்க. அதற்காகத்தான் தரம்சிங் மூலமா மூவ்வாம். இதற்கிடையில், பவானிசிங்கின் சீனியாரிட்டி உள்ளிட்ட விஷயங்களை வைத்து  அவர் பி.பி. யாக நியமிக்கப்பட்டது சம்பந்தமா ஹைகோர்ட் டில் கேள்வி எழுப்பலாமான்னும் கர்நாடக வக்கீல் கள் டீம் ஒன்று ரெடியாகிக் கொண்டிருக்கிறது.''

""ஒரு வழக்கில்தான் எத்தனை ஆண்டுகால மாக, எத்தனையெத்தனைத் திருப்பங்கள்?''

""தலைவரே.. கொலை மிரட்டல் பின்னணியில் பெண் மந்திரின்னு போன முறை நாம பேசியிருந்த செய்தி, தலைமை வரைக்கும் அதிர்வை ஏற்படுத்தியிருக்காம். புகார் கொடுத்த கட்சிக்காரரிடம் பேசும்படியும் மேலிட உத்தரவு. இதையடுத்து, சேப்பாக்கம்- திரு வல்லிக்கேணி பகுதிச் செயலாளர் பாபுகிட்டே பெண் அமைச்சர் வளர்மதி பேசியிருக்கிறார். மிரட் டல் விடுத்த கவுன்சிலர் வாசனின் ஆதரவாளர் ராஜேஷ் யாரென்றே தனக்குத் தெரியாதுன்னு வளர்மதி சொல்ல, 10 நாளுக்கு முன்னாடி ராஜேஷ் வீட்டுத் திருமணத்தை வளர்மதி நடத்தி வைத்ததை ஆதாரத்தோடு நினைவுபடுத்தியிருக்கிறார் பாபு. மந்திரி சைலன்ட்டாம். அதோடு, பெண் மந்திரி மீது துறை அதிகாரிகளே புகார் சொல்லியிருக்காங்களாம்.''

""அதிகாரிகளா?''

""தலைமைச் செயலாளர்கிட்டே ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான சமூக நலத்துறைச் செயலாளர் அசோக் டோங்கரே, ஐ.சி.டி.எஸ். திட்ட அதிகாரி மீனாட்சி ராஜகோபால், சமூகநலத்துறை அதிகாரி கிறிஸ்து தேவசகாயம் மூவரும் மந்திரி வளர்மதி தங்களை மரி யாதையில்லாமல் கண்டபடி பேசுறாருன்னு புகார் கொடுத்திருக் காங்க. முட்டை டெண்டர் பெற்ற ஆரோக்கியா ஃபுட்ஸ், ஃபேர் டீல் நிறுவனங்கள் முட்டை விலையை 5 ரூபாய் என உயர்த்தித் தரச் சொல்ல, தற்போதைய விலை உயர்வுக்காக இப்படி உயர்த்தச் சொன்னாராம் மந்திரி. ஆனால், இது தற்காலிக உயர்வுன்னும் கோடை காலத் தில் மறுபடியும் விலை குறைந்துவிடும். அப் போது இவ்வளவு பணம் கொ டுத்து ஒரு முட்டையைக் கொள்முதல் செய்தால் நட்டம்தான்னும் அதிகாரிகள் சொல்ல, அதற்காகத்தான் அவர்களை ஏடாகூடமாகத் திட்டியிருக்கிறார் வளர்மதி. இதுதான் இப்ப தலைமைச் செயலாளர் கவனத்துக்குப் போயிருக்கு.''


""இளைஞர் காங்கிரஸ் வட்டாரத்திலும் ஏதோ ஒரு புகார் மேலிடம் வரைக்கும் போயிருக்குதாமே?''

""அது பழைய புகார்தான்.. தமிழக இளைஞர் காங்கிரஸ் பெண் நிர்வாகி ஐஸ்வர்யா தற்கொலை விவகாரத்தில், மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜ் பெயர் அடிபட்டதே, அதுதான் டெல்லியில் ராகுல்காந்தி வரைக்கும் புகாராகப் போயிருக்கு. சமீபத்தில் ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டுக்கு பல மாநிலங்களிலிருந்தும் இளைஞர் காங்கிரஸ், மாணவர் காங்கிரஸ் நிர்வாகிகள் அழைக்கப்பட்டிருந்தாங்க. தமிழ் நாடு மாணவர் காங்கிரஸ் தலைவர் பிரபுதாஸ்கூட அழைக் கப்பட்டாரு. ஆனால், தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜுக்கு மட்டும் அழைப்பில்லை. அவரைக் கூப்பிடவேண் டாம்னு அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜீவ் சத்தாவிற்கு, ராகுலிடமிருந்தே நேரடி உத்தரவு வந்ததாம்.'' 

""ஓ..''

""அதோடு தன் நம்பிக்கைக்குரியவங்களான ராஜீவ் சத்தாவையும் மீனாட்சி நடராஜன் எம்.பி.யையும் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனை சந்திக்கும்படி ராகுல் சொல்லியிருக்காரு. ஜி.கே.வாசன் கோஷ்டியில்தான் யுவராஜ் இருக்கிறார். அவங்க இரண்டு பேரும் போனவாரம் வாசனை சந்திச்சி, யுவராஜை இளைஞர் காங்கிரஸ் மாநிலத்தலைவர் பதவியிலிருந்து ரிசைன் பண்ணச் சொல்லும்படி ராகுல்காந்தி அறிவுறுத்தி யிருக்காருன்னு சொல்லியிருக்காங்க. யுவராஜ் பற்றி டெல்லி வரை பரவியுள்ள புகார்களையும் அடுக்கியிருக்காங்க. மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவி என்பது அதன் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பதவி. அதை மேலிடம் பறித்தால் மீடியாக்களில் வேறு மாதிரி ஃப்ளாஷ் ஆகும். அதனால்தான், யுவராஜே ரிசைன் பண்ணட்டும்னு சொல்லியிருக்காங்க.''

""வாசனோட ரியாக்ஷன் என்ன வாம்?''

""இந்த  ஒரு முறை மட்டும் யுவராஜை மன்னிக்கும்படியும், தானும் வார்னிங் செய்வதாகவும், ரிசைன் செய்தா லும் மீடியாக்களில் வேறு மாதிரி செய்தி கள் பரவும்னும் வாசன் சொல்லியிருக் காரு. இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவி தன்  கட்டுப்பாட்டில் இருக்க ணும்ங்கிறதுதான் வாசனின் கணக்கு. ஆனால், ராகுலின் கணக்கு எப்படி அமையப்போகுதோன்னு லோக்கல் காங்கிரசார் சொல்றாங்க.''

""ஆளுநர் உரை தொடர்பான விவாதத்தின்போது, எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு, வெளியேற்றம்னு நாள்தோறும் சட்டமன்றம் களைகட்டிடிச்சே.''…

""காவிரி பிரச்சினை, ஈழத்தமிழர் விவகாரம், கனிமொழியின் இலங்கைப் பயணம் தொடர்பா ஆளுந்தரப்பு வைத்த விமர்சனங்களுக்கு பதிலளிக்க, தங்களுக்கு நேரம் கொடுக்கலைங்கிறதுதான் தி.மு.க.வின் குற்றச்சாட்டு. முதல் இரண்டு நாட்களில்  வெளிநடப்பு செய்தாங்க. அப்புறம், சட்டமன்றத்துக்குள்ளே அவர்கள் தர்ணா செய்ததால வெளியேற்றப்பட்டாங்க. அவங்க மேலே ஆளுந்தரப்பு, புத்தகங்களை வீசியது. கடைசியில், தி.மு.க உறுப்பினர்களை சஸ்பெண்ட் பண்ணிட்டாரு சபாநாயகர். மக்கள் பிரச்சினைகளை பேசவிடலைன்னு தே.மு.தி.க.வும் வெளிநடப்பு செய்தது. அதேபோலத்தான் பா.ம.க உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தாங்க. காங்கிரசும் தன்னோட இருப்பைக் காட்டுற விதத்தில், தமிழக மீனவர் பிரச்சினையில் காங்கிரஸ் மேலே ம.ம.க. எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா சாட்டிய குற்றச்சாட்டுக்குப் பதில் சொல்ல வாய்ப்பளிக்கலைன்னு சொல்லி வெளிநடப்பு செய்துட்டாங்க.'' 

""ஆளுந்தரப்பு இப்போது ஜெ.வின் 65-வது பிறந்தநாள் விழாவில் மும்முரமா இருக்குது. அது பற்றி நான் சொல்றேன்.. சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரைக்கும் பிறந்தநாள் வசூல் கனஜோரா நடக்குது. ஒரு மா.செ. 1சி டார்கெட்டில் விழா நடத்த ணும்னு மேலிடத்திலிருந்து உத்தரவு வந்திருப்பதால, தீவிரமா களமிறங்கிட்டாங்க. பிப்ரவரி 24 வரை ஜரூர்தானாம்.''

 லாஸ்ட் புல்லட்!

அவசர அவசரமாக மருத்துவமனையாக மாற்றப்பட்டது புதிய தலைமைச் செயலகம். இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், மருத்துவமனையின் செயல்பாட்டிற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது உயர்நீதிமன்றத்தில் உள்ள பசுமைத் தீர்ப்பாயம். இந்த வழக்கு தொடர்பான விசாரணை விறுவிறுப்படைந்துள்ள நிலையில், மருத்துவமனையைத் தொடர்ந்து செயல்படுத்த என்னென்ன சட்ட வழிகள் இருக்கின்றன என்று ஆளுந்தரப்பு தீவிரமாக ஆலோசித்துக் கொண்டிருக்கிறதாம்.
விஸ்வரூபம் படம் 7-ந் தேதி ரிலீசான நிலையில், மதுரை பகுதியில் உள்ள சில தியேட்டர்களில் குரூப்பாக டிக்கெட் எடுக்க வந்தவர்களிடம் ஐ.டி. புரூஃப் கேட்டு மிரளச் செய்ததாம் தியேட்டர் நிர்வாகங்கள். எல்லாம் மேலிடத்தின் உத்தரவுப்படிதான் என்று விளக்கமும் தந்தனவாம்.

கவர்னர் உரை மீதான விவாதம் நடந்து கொண்டிருந்த 6-ந் தேதியன்று அவையில் ஜெ. இல்லை. கவர்னர் உரை மீது நன்றி தெரிவிக்கும் பதிலுரையில் காவிரி டெல்டா விவசாயிகளுக்கான நிவாரணம் அளிப்பது தொடர்பான ஆலோசனையில் இருக்கிறார் என்றும், கூட்டத்தொடருக்குப் பிறகு அமைச்சரவையில் மாற்றம் செய்வது குறித்த ஆலோசனைகள் நடக்கின்றன என்றும் கோட்டை வட்டாரத்தில் இருவேறு கருத்துகள் பரவிக் கொண்டிருந்தன.

ஈழத்தமிழர் நலனுக்கான போராட்டங்கள் நடைபெறும் நேரங்களில், சென்னை எழும்பூரில் உள்ள பாங்க் ஆஃப் சிலோன் தாக்கப்படுவது அடிக்கடி நடப்பதுதான். ராஜபக்சேவின் திருப்பதி வருகைக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வந்த நிலையில், கடந்த 7-ந் தேதி இந்த வங்கி மீது தாக்குதல் நடந்தது. இதற்கிடையே, மதுரவாயல் ஏரியாவில் பைப் குண்டுடன் புலி ஒருவர் கைதானதாக அன்று மாலையில் செய்திகள் பரவின. கடைசியில் அது வெறும் புரளிதான் என்றும், கமிஷனர் அலுவலகம் உள்ள பகுதியில் அமைந்துள்ள பேங்க் மீது நடந்த தாக்குதல் பற்றிய விமர்சனத்தை திசை திருப்பவே இந்த புலித் தகவல் என்றும் காக்கிகள் வட்டாரத்திலிருந்தே உண்மைச் செய்திகள் கசிந்தன.  

ad

ad