புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 பிப்., 2013


பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருப்பதி சென்றார் மகிந்த!
ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று மாலை தனி விமானம் மூலம் ரேணிகுண்டா விமான நிலையத்துக்கு வந்திறங்கி அங்கிருந்து கார் மூலம் திருப்பதி திருமலைக்கு சென்றுள்ளார்.
மகிந்த ராஜபக்ஸவின் இந்திய வருகைக்கு தமிழகம் மற்றும் டெல்லி உட்பட பல்வேறு அமைப்புகள் எதிர்ப்புக்களையும் போராட்டங்களையும் நடத்தியிருந்தன.
இந்நிலையில், ராஜபக்‌ஷ இன்று இரவு திருப்பதி பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ளார். நாளை அதிகாலை ஏழுமலையான் கோவிலுக்கு செல்லவுள்ள அவரை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பாபிராஜு, செயல் அலுவலர் சுப்பிரமணியம் ஆகியோர் வரவேற்கவுள்ளனர். நாளை காலை நடைபெறும் சுப்ரபாத சேவையில் ராஜபக்‌ஷ பங்கேற்று சாமி தரிசனம் செய்யவுள்ளார். பாபிராஜு ராஜபக்‌ஷவுக்கு பிரசாதம் வழங்கவுள்ளார்.
சாமி தரிசனம் முடிந்ததும் பத்மாவதி தாயார் விருந்தினர் மாளிகைக்கு வந்து. அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுத்து, பின்னர்  காலை 9.30 மணிக்கு காரில் ரேணிகுண்டா சென்று அங்கிருந்து தனி விமானம் மூலம் இலங்கை புறப்பட்டு செல்லவுள்ளார்.
ராஜபக்‌ஷவுடன் மொத்தம் 60 பேர் வருகின்றனர் என தேவஸ்தானத்துக்கு தகவல் கூறப்பட்டுள்ளது.
மேலும் ரேணிகுண்டா விமான நிலையத்தில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை போலீசார் கிழித்து அப்புறப்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad