விடுதலைப் புலிகளின் சிறந்த புலம்பெயர் தரப்பினருடனே தாம் நோர்வேயில் பேச்சுவார்த்தைகளை நடத்தியதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
தாம் சிறந்த புலம்பெயர் பிரதிநிதிகளிடம் ஏற்படுத்தி கொண்ட இணக்கப்பாடுகளை புலம் பெயர் புலிகள் சீர்குலைத்து விட்டனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
அரசசார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுக்ள இந்த நாட்டில் எந்தளவுக்கான பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளன என்பதை நாம் அறிவோம். இதனால் நாங்கள் நேரடியாக புலிகளுடன் தொடர்பில்லாத, பிரிவினைவாததுடன் தொடர்பில்லாத புலம்பெயர் குழுவொன்றுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த நாங்கள தீரமானித்தோம். அந்த குழுவுடன் இணைந்து செயற்பட முடியுமாக இருந்தால், கிடைக்கும் நிதியுதவிகளை நேரடியாக மக்களுக்கு வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றுக்கு செல்ல முடியும்.
எனினும் துரதிஷ்டவசமாக உண்மையான புலிகள் சிறந்த புலம்பெயர் பிரதிநிதிகளுடனான வேலைத்திட்டத்தை எதிர்த்தனர். அத்துடன் அந்த முன்னெடுப்புகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டன எனவும் ஞானசார தேரர் கூறியுள்ளார்.