புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 மே, 2013






            டந்த பனிரெண்டாம் தேதி திருமணம் செய்வதற்கு மிகவும் உகந்த சுபமுகூர்த்தநாள் என ஜோதிடர்களால் கணிக்கப்படுகிறது. அன்றைய தினத்தை நரக முகூர்த்த நாளாக மாற்றிவிட்டார் தமிழக வி.வி.ஐ.பி. ஒருவர் என புலம்புகிறார்கள் nakeeranதிருப்பதி திருமலை கோயிலுக்கு அன்று வெங்கடேச பெருமாளை தரிசிக்க சென்ற பக்தர்கள்.

""அவர் ராம் மோகன் ராவ் ஐ.ஏ.எஸ். முதல்வரின் இரண்டாம் நிலை செயலாளர். அவரது மகள் அபிநந்தனாவுக்கும் அஜய்க்கும் பனிரெண்டாம் தேதி திருமணம் திருப்பதியில் நடைபெற்றது. அந்த திருமண வைபவம் ஆந்திராவிலுள்ள அனைத்து மீடியாக்களின் கவனத்தையும் கவர்ந்தது'' என்கிறார் ஈநாடு தொலைக்காட்சி நிருபர் ஸ்ரீனிவாஸ்.

""பொதுவாக மலைமேல் உள்ள கோயிலில் திருமணம் செய்ய வேண்டுமென்றால் கோயிலைச் சுற்றி அமைந்துள்ள மடப்பள்ளிகள், புரோகிதர் சங்க கட்டிடம் மற்றும் திருமணம் செய்வதற்கென்றே அமைக்கப்பட்ட திருமண மண்டபங்கள் ஆகிய மூன்று இடங்களுக்குத்தான் திருப்பதி திருமலை தேவஸ்தான போர்டால் அனுமதி வழங்கப்படும். ஆனால் ராம் மோகன் ராவ் குடும்ப திருமணத்திற்கு மட்டும் கோயிலுக்கு 200 மீட்டர் தொலைவில் மேகரமெட்டா என்கிற பகுதியில் ஒரு பெரிய பந்தல் போட்டு திருமணம் நடத்த தேவஸ்தான போர்டு அனுமதித்தது.

அங்கே தமிழக போலீசார் குவிக்கப்பட்டி ருந்தனர். மஃப்டியில் இருந்த அவர்கள் எங்களை அங்கிருந்து துரத்தினர். ஏன் துரத்துகிறார்கள் என விசாரித்தபோது தேவஸ்தான விதிகளுக்கும், கோயிலின் ஆகம விதிகளுக்கும் முரண்பாடாக ஐந்து ஏக்கர் பரப்பளவில் ஒரு பிரம்மாண்ட பந்தல் அங்கே அமைக்கப்பட்டு வந்தது. அதை நாங்கள் படமெடுத்து வெளியிட்டால் பெரிய பிரச்சினை உருவாகி திருமணம் தடைபட்டு விடும் என்பதால்தான் தமிழக போலீசாரை வைத்து எங்களை துரத்தினார்கள்.

பனிரெண்டாம் தேதி திருமலையில் மொத்தம் 150 திருமணங்கள் நடைபெற இருந்தன. அந்த திருமணங்களில் பங்கேற்க மாப்பிள்ளை, மணப்பெண், உறவினர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் ஆந்திரா-தமிழக பகுதிகளிலிருந்து வந்து சேர்ந்திருந்தனர். அவர்கள் அனைவரும் திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான டிராவலர்ஸ் பங்களா எனப்படும் தங்கும் விடுதிக்குச் சென்று தங்குவதற்கு ரூம் கேட்டபோது "ரூமெல்லாம் இல்லை; எல்லாம் புக் ஆகிவிட்டது' என அவர் களை தேவஸ்தான ஊழியர்கள் விரட்டியடித்துக் கொண்டிருந்தனர். வேறு வழியில்லாமல் மக்கள் சாலை ஓரங்களிலும், மரத்தடிகளிலும் கொசுக் கடியில் படுத்துக் கிடந்தனர். ஏன் இப்படி மக்களை துரத்துகிறீர்கள் என தேவஸ்தான அதிகாரிகளை கேட்டோம்.


"தமிழக முதல்வரின் செயலாளர் ஐ.ஏ.எஸ். அதிகாரி ராம்மோகன் ராவ் திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் தலைவ ரான ஆதிகேசவ நாயுடு குடும்பத்தின் சம்பந்தியாம். ஆதி கேசவ நாயுடு திருப்பதி தேவஸ்தான நிர்வாக கமிட்டியின் தலைவரான பாலசுப்ரமணியன் ஐ.ஏ.எஸ். மூலமாக திருமலை யில் உள்ள தங்கும் விடுதிகளில் இருந்த அனைத்து அறை களையும் முன்கூட்டியே புக் செய்துவிட்டார். அதனால்தான் ரூம் கேட்டு வருபவர்களை துரத்துகிறோம்' என்றனர்.


13-ம் தேதி காலையில் ஒன்பது மணிமுதல் பத்தரை வரை திருமணம் நடந்தது. அந்த திருமணத்திற்கு மேளமும் நாயனமும் வாசித்தவர்கள் சாட்சாத் வெங்கடேச பெருமாள் வீதி உலா வரும்போது வாசிப்பவர்கள். அவர்கள் பெருமாளின் தனிப்பட்ட சொத்து, அவர்களது வாத்தியம் வேறு யாருக்காகவும் வாசிக்கப்படக் கூடாது என்பது ஐதிகம். மேள வாத்தியக்காரர்கள் மட்டுமல்ல திருமணத்தில் வேத மந்திரங்கள் ஓதியவர்கள் பெருமாளின் அர்ச்சகர்கள். குடிதண்ணீர் வழங்கியவர்கள், சாப்பாடு பரிமாறியவர்கள் அனைவரும் தேவஸ்தான ஊழியர்களாகவே இருந்தனர்.

தரிசன வரிசைகளையும் ஆக்கிரமித்துக் கொண்டார்கள். இதனால் பெருமாளை சேவிக்க வந்த பக்தர்கள் குமுறத் தொடங்கினர். நாங்கள் இதையெல்லாம் படமெடுத்து "திருப்பதியை ஹைஜாக் செய்த தமிழக வி.ஐ.பி.' என்ற தலைப்பில் ஒளிபரப்பினோம். அதில் பொதுமக்களின் குமுறல் பேட்டியை வெளியிட்டோம்.


இந்த செய்தி ஆந்திரா முழுவதும் பெரும் கொந் தளிப்பை உருவாக்கியது. பா.ஜ.க., தெலுங்கு தேசம், காங்கிரஸ் என அனைத்து கட்சிகளும் திருப்பதி தேவஸ்தானம்... தமிழக வி.ஐ.பி.க்காக வெங்கடேச பெருமாளையே அவமானப் படுத்தி விட்ட தாக அறிக்கை வெளியிட்டனர்'' என்றார் தெளி வாக.

பா.ஜ.க.வின் திருப்பதி வட்டார செய லாளரான பிரம்மானந்த ரெட்டியிடம் கேட்டோம். ""பக்தர்களுக்கு சொல்ல முடியாத துன்பங்களை விளைவித் திருக்கிறார்கள். நடந்தவையெல்லாம் கோயிலின் ஆகம விதிகளை மீறிய செயல்கள். இதை நீதிபதி தலைமையிலான விசாரணைக் கமிஷன் மூலம் விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து ஆந்திரா முழுவதும் போராட்டம் நடத்த உள்ளோம்'' என்றார்.

மறுபக்க கருத்தை திருப்பதி தேவஸ் தான அதிகாரியான பாலசுப்ரமணியன் ஐ.ஏ.எஸ்.சிடம் கேட்டோம். அவர் பதில் கூற மறுத்துவிட்டார். ராம் மோகன் ராவ் ஐ.ஏ.எஸ். அவர்களை தொடர்பு கொண் டோம். செயலாளர் இல்லை இல்லை என்றே சொன்னார்கள்.

திருப்பதியில் நடை பெற்ற திருமணத்தின் தொடர்ச்சியாக வருகிற 15-ம் தேதி சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சியினை நட்சத்திர ஓட்டலில் வைத்துள்ளார் ராம் மோகன் ராவ். இங்கும் கூட்டம் அலைமோதும்.

-தாமோதரன் பிரகாஷ்

ad

ad