புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜூன், 2013




          தேசிய பாதுகாப்பு சட்டத்திலும் குண்டர் தடுப்பு சட்டத்திலும் பா.ம.க.வினரை சிறையில் தள்ளுவதை தொடர் நடவடிக்கையாக கையாண்டு வருகிறது ஜெ.அரசு. இந்த நிலையில், இந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டுமென தமிழக கவர்னர்nakkeran  தொடங்கி இந்திய ஜனாதிபதி வரை சந்தித்து தமிழக காவல்துறைக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பதிவு செய்திருக்கிறார் பா.ம.க.வின் இளைஞர் அணி தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாசு. டெல்லியிலிருந்து திரும்பிய அவரை சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.         

* பா.ம.க. மீது பாய்ச்சப்படும் வழக்குகளை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?


கடந்த ஒரு மாதத்தில் மட்டும் எங்கள் கட்சியினர் 7000 பேர் கைது செய்யப்பட்டனர். 2000 பேரை முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்கிற பேரில் சிறைக்கு அனுப்பியது தமிழக போலீஸ். இது தவிர, தேசியப்பாதுகாப்பு சட்டத்திலும், குண்டர் தடுப்பு சட்டத்திலும் இதுவரை எங்கள் கட்சி தொண்டர்கள் 112 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். 

இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் இப்படி நடந்ததில்லை. நெருக்கடி காலத்தில்கூட தமிழகத்தில் கைது செய்யப்பட்டவர்கள் 80 பேர் தான். ஆட்சி அதிகாரம் இருக்கிறது என்பதற்காக இந்த அம்மையார் நடத்தும் அராஜகத்தின் உச்சம் இது. தன்னையும் தனது ஆட்சியையும் எதிர்ப்பவர்களை அடக்கி ஒடுக்கவே அதிகாரத்தைப் பயன்படுத்துகிறார். இது அவருக்கு பழக்க தோஷம்.

இந்த அம்மையார் ஆட்சியில் மகாமகம் குளத்தில் 49 பேர் மாண்டார்கள். டி.என்.சேஷன் தாக்கப்பட்டார். சுப்ரமணிய சாமிக்கு ஆபாச நடனத்தை அர்ப்பணித்தார்கள். ப.சிதம்பரத்தை கொல்லும் நோக்கத்தில் அவரது கார் தாக்கப்பட்டது. மணிசங்கர் அய்யர், வழக்கறிஞர்கள் விஜயன், சண்முகசுந்தரம் தாக்குதல்களுக்கு ஆளானார்கள். கலைஞரை கைது செய்து அலைக்கழித்து ரசித்தனர். அரசு ஊழியர்கள் 12 லட்சம் பேர் ஒரே ராத்திரியில் அனாதை களாக்கப்பட்டனர். பத்திரிகைகளும், ஊடகங்களும் நசுக்கப்பட்டன. எல்லாத்துக்கும் மேலே நக்கீரன் அலுவலகம் கொடூரமாக தாக்கப்பட்டது. ப்ளசண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் இவருக்கு எதிராக தீர்ப்பு வந்ததால் 87 பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டன. 8 பேருந்துகள் எரிக்கப்பட்டன. கல்லூரி மாணவிகள் 3 பேரை உயிருடன் எரித்தனர்.

ஆக, தன்னை எதிர்ப்பவர்களை துவம்சம் செய்வது இவருக்கு இயல்பான குணம். எதிர்ப்பவர்களையும், விமர்சிப்பவர்களையும் உள்ளே தள்ளுங்கள் என்பதற்காக, இவரை ஆட்சியில் மக்கள் உட்காரவைக்கவில்லை. நேர்மையாக நிர்வாகம் செய்ய அனுப்பினர். ஆனால், அதில் துளியும் கவனம் செலுத்தாமல் எதிர்ப்பவர்களை அழித்தொழிக்க நினைக்கிறார். அது தமிழகத்தில் செல்லாது. சிறையில் இருக்கும் அனைவரையும் வெளியே எடுக்கும் எல்லா முயற்சிகளையும் பா.ம.க. அதன் சொந்த செலவில் செய்து வருகிறது.

அனைவரையும் வெளியே எடுத்தபிறகு, பா.ம.க.வினர் மீது பொய் வழக்குகள் போட்டுள்ள அத்தனை பேர் மீதும் வழக்கு தொடரவிருக்கிறோம். சாதாரண கான்ஸ்டபிள் முதல் உச்ச அதிகாரம் கொண்ட டி.ஜி.பி. மற்றும் மாவட்ட கலெக்டர்வரை அனைவரையும் கோர்ட்டுக்கு இழுப்போம். பொய் வழக்குகளை போட்ட காவல்துறையினரையும் அவர்களுக்கு உத்தரவிட்டவர் களையும் நாங்கள் சும்மா விடப்போவதில்லை.

* சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க கைது நடவடிக்கை எடுப்பது சரிதானே?


தேசிய பாதுகாப்பு சட்டத்தையும் குண்டர் தடுப்பு சட்டத்தையும் பயன்படுத்த சில நடைமுறைகள் இருக்கிறது. குறிப்பாக, 3 முறைக்கு மேல் கடுமையான குற்ற நடவடிக்கை களுக்காக கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டவர்கள் மீது தான் இந்த சட்டங்கள் போடப்பட வேண்டும் என்கிறது சட்டம். கைது செய்யப்பட்டுள்ள 112 பேரில் 80 பேர்கள் மீது இதுவரை ஒரு சாதாரண வழக்குகள் கூட இல்லை. மீதி இருப்பவர்கள் மீது ஓரிரு வழக்குகள் மட்டுமே இருக்கிறது. அதுவும் கடுமையான குற்றங்களுக்காக கிடையாது. அப்படியிருக்க, சட்ட-ஒழுங்கை பாதுகாக்கும் லட்சணம் இதுதானா? ஆத்திரத்தில் தவறு செய்கிறார்கள். அதன் பலனை விரைவில் அனுபவிப்பார்கள்.

* கவர்னர் மற்றும் ஜனாதிபதியை சந்தித்து தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக முறையிட்டிருக்கிறீர்களே?


பா.ம.க. மீது போடப்பட்டுவரும் வழக்குகள் ஜன நாயகத்துக்கும், மனித உரிமைகளுக்கும் எதிரானது என்றும் சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்யும் விதமாக தமிழக அரசின் நடவடிக்கைகளை தடுக்க வேண்டும் என்றும் கவர்னரிடம் முறையிட்டோம். அவரும் இது குறித்து தமிழக அரசிடம் அறிக்கை கேட்பதாகச் சொன்னார். ஜனாதிபதியை சந்தித்த போது, மருத்துவர் அய்யாவின் உடல் நலம் பற்றி விசாரித்தார். அவருக்கு ஏன் இந்த நிலை ஏற்பட்டது என்பதை நான் விவரித்தபோது அதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் எங்கள் புகாரை வாசித்தவர், "ஜனநாயக நாட்டில் ஒரு அரசியல் கட்சிக்கு எதிராக இவ்வளவு கடுமையான நடவடிக்கைகள் எந்த மாநிலத்திலும் எடுக்கப்படவில்லை. ஒரு மூத்த அரசியல் தலைவரை எப்படி நடத்த வேண்டும் என்கிற குறைந்தபட்ச நேர்மைகூட தமிழகத் தில் இல்லாதது வருத்தமடையச் செய்கிறது. ஜீரணிக்க முடியாத விஷயம் தான். நான் இது குறித்து கவனிக் கிறேன்' என்றார். அதிகாரத்தில் இருப் பவர்கள் சட்டத் திற்கு புறம்பாக சட் டத்தை பயன்படுத் தும் போக்குகள் தடுக்கப்பட வேண்டு மென்பதற்காகத்தான் இவர்களை சந்தித்து முறையிட்டிருக்கிறேன். பிரதமரும், மத்திய உள்துறை அமைச்ச ரும் வெளிநாட்டில் இருந்ததால் சந்திக்க முடியவில்லை. அடுத்த வாரம் அவர்களையும் சந்தித்து முறையிட விருக்கிறோம்.


* ராஜ்யசபா தேர்தலில் தி.மு.க.வை ஆதரிக்கப் போவதாகவும் அதன் மூலம் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க., பா.ம.க. கூட்டணி உருவாகுகிறது என்றும் செய்திகள் பரவியுள்ளது. பா.ம.க.வின் ஆதரவு கேட்டு தி.மு.க.உங்களை அணுகியதா?


திராவிட கட்சிகளை விரட்டு வற்கு பா.ம.க. சங்கல்பம் எடுத்திருக்கிறது. அதிலிருந்து ஒரு போதும் நாங்கள் விலகப்போவதில்லை. 100 சதவீதம் அல்ல... 1000 சதவீதம் சொல்வேன். தி.மு.க., அ.தி.மு.க.வுடன் இனி எந்த காலத்திலும் கூட்டணி கிடை யாது... கிடையாது... கிடையாது. இதனை பல முறை அழுத்தமாக நானும் மருத்துவர் அய்யாவும் சொல்லி விட்டோம். மக்கள் அதனை தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள்.

ஆனால், அந்த மக்களை குழப்பு வதற்காகவே உளவுத்துறையும், பத்திரிகைகளும் ஊடகங்களும் சிந்திக்கின்றன. அதாவது அவர்களது விருப்பத்தை இப்படி தீர்த்துக் கொள்கிறார்கள். நாங்கள் பலமுறை அழுத்தமாக சொன்னபிறகும் அதற்குப் புறம்பாக பத்திரிகைகள் எழுதுவது அவர்களின் உள்நோக்கத்தைத்தான் காட்டுகிறது. திராவிட கட்சிகளுடன் மட்டுமல்ல, தேசிய கட்சிகளுடனும் கூட்டணி கிடையாது. மேலும் அவர்கள் சந்தித்தார்கள் இவர்கள் சந்தித்தார்கள் என்பதிலெல்லாம் உண்மை இல்லை. தமிழகத்தில் 2016-ல் பா.ம.க.வின் ஆட்சிதான். இது உறுதி செய்யப்பட்ட ஒன்று. மாநிலங்களவை தேர்தலுக்காக தி.மு.க. எங்களை அணுகவில்லை. அணுகினாலும் ஆத ரவு தரப்போவ தில்லை. மொத்தத் தில், மாநிலங் களவை தேர்தலில் எங்களின் ஆதரவு யாருக்கும் கிடை யாது. அத்துடன் இந்த தேர்தலை பா.ம.க. புறக் கணிக்கும்.

* தேர்தலுக்கு தேர்தல் மாறி மாறி கூட்டணி வைத்ததால் சரிந்து போன செல்வாக்கை மீட்டெடுக்கவே, கூட்டணி இல்லை என்கிற அஸ்திரத்தை பா.ம.க. எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறதே?


திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைத்தது தவறு தான். அதை வெளிப்படையாக ஒப்புகொள்கிறேன். தவறை ஒப்புக்கொள்வதில் எங்களுக்கு தயக்கம் இல்லை. ஆனால், கூட்டணி மாறுவதால் செல்வாக்கு சரிந்துவிட்டதாக கூறுவதில் உண்மை கிடையாது. பா.ம.க.வின் வலிமையும், செல்வாக்கும் அதிகரித்த படியேதான் இருக்கிறதே தவிர குறைய வில்லை. குறைந்திருப்பதாக சொல்கிற அல்லது கருதுகிற அரசியல் கட்சி தலைமைகளுக்கு தங்க ளின் செல்வாக்கு குறைந்து போயுள்ள உண்மையும், பா.ம.க. இல்லாமல் நம்மால் ஜெயிக்க முடியாது என்கிற பயமும் தெரிவதால்தான் தங்களின் பலகீனத்தை மறைக்க பா.ம.க.வின் செல்வாக்கு மீது சொல்லெறிந்து பார்க்கிறார்கள்.


நான் கேட்கிறேன்... என்னமோ பா.ம.க. மட்டும்தான் கூட்டணி மாற்றிக்கொண்டே இருக்கிறதா? தி.மு.க., அ.தி.மு.க., கம்யூனிஸ்டு கள் என அனைத்து கட்சிகளும் ஒரே கூட் டணியிலா இருக்கிறது? அவைகளும் தேர்த லுக்கு தேர்தல் கூட்டணியை மாற்றிக் கொண்டுதானிருக் கின்றன. அப்படி யிருக்க தி.மு.க.விட மும் அ.தி.மு.க.விட மும் போய் பத்திரி கைகள் இப்படி கேட்க முடியுமா? ஏன் கேட்க மறுக் கிறீர்கள்? திராவிட கட்சிகளுக்கு கூட் டணி தேவை இல்லை என்றால் அவர்களுக்குத் தான் பெரிய்ய்ய்ய்ய செல்வாக்கு இருக் கிறதாக சொல்கிறார்களே... அப்படியானால் தனித்துப் போட்டியிட வேண்டியது தானே? அதை விட்டுவிட்டு ஏன் தேர்தலுக்கு தேர்தல் கூட்டணிக்காக அலைய வேண்டும்? இப்போது கேட் கிறேன்... திராவிட கட்சிகளுக்குத் தனித்துப் போட்டியிட துணிச்சல் இருக்கிறதா? இதனை பல முறை கேட்டிருக்கிறோம். திராவிட கட்சிகளிடத்திலிருந்து பதில் இல்லை. நக்கீரன் மூலம் மீண்டும் கேட்கிறேன். பதில் சொல்லட்டும் அவர்கள்.

-இரா.இளையசெல்வன்

ad

ad