புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜூன், 2013

விடுதலைப் புலிகள் இயக்கம் மறுமலர்ச்சி பெறும் என்று இலங்கை அச்சம்!- அமெரிக்கா அறிக்கை
விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் மறுமலர்ச்சி பெறும் என்ற அச்சத்துடன் இலங்கை அரசு இருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் தற்போதும் ஆயுதங்களை கைப்பற்றி வருவதாக இலங்கை அரசு கூறியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டத்திற்கு வெளிநாடு வாழ் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களே காரணம் என இலங்கை நினைப்பதாக தெரிவித்துள்ள அமெரிக்கா, கடந்த ஆண்டு விடுதலைப் புலிகளின் செயல்பாடு எதுவும் இல்லை என கூறியுள்ளது.
இலங்கையில் நடைபெறும் போராட்டங்களுக்கு விடுதலைப்புலிகளின் சர்வதேச ஆதரவாளர்கள் நிதியுதவி செய்வதாக கூறிவரும் ராஜபக்ச அரசு, அதனை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2ம் இணைப்பு
இலங்கையில் சட்டமும் நீதியும் முறையாக அமுல்படுத்த வேண்டும் என்பதே அமெரிக்காவின் விருப்பம்!-  மிச்சேல் ஜே சிசன்
இலங்கையில் நீதியும், சட்டத்திட்டங்களும் முறையாக அமுலாக்கப்பட வேண்டும் என்பதையே அமெரிக்கா விரும்புவதாக அமெரிக்காவின் இலங்கை தூதுவர் மிச்சேல் ஜே சிசோன் தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் உள்ள நீதி அமைச்சின் அரசாங்க ஆய்வு திணைக்களத்திற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த வேளையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2011ம் ஆண்டு அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் கீழ், இந்த கட்டிடத்தில் டீ.என்.ஏ பரிசோதனை நிலையம் ஒன்றை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இதற்காக அமெரிக்கா 2.1 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதியாக வழங்கி இருந்தது.
இதனை பார்வையிட்ட சிசோன், இலங்கையில் நீதியும், சட்ட ஒழுங்குகளும் முறையாக அமுலாக்கப்பட வேண்டும் என்பதற்காகவே அமெரிக்கா இவ்வாறான நீதித்துறை சார்ந்த உதவிகளை வழங்கி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டதின் மூலம், இலங்கையில் உள்ள யாவருக்கும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை நீக்கிக் கொள்ளவும் இதன் மூலம் வாய்ப்ப கிடைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

ad

ad