புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜூன், 2013

கொழும்பு பிரபல பாடசாலையில் ஆசிரியை முத்தமிட்ட ஆசிரியரால் பரபரப்பு

சங்கீத ஆசிரியைக்கு முத்தமிட்டதாக கூறப்படும் உடற்பயிற்சி ஆசிரியருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், இருதரப்பு விளக்கங்களையும் நீதிமன்றம் கோரியுள்ளது.

எழுத்து மூலமான இருதரப்பு விளக்கங்களையும் எதிர்வரும் 13 ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்ட கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் வழக்கையும் அன்றைய தினத்திற்கே ஒத்திவைத்தது.
முறைப்பாட்டாளர் மற்றும் பிரதிவாதி தரப்பிலான சாட்சியமளிப்புகள் இன்றுடன் நிறைவடைந்தன.
குற்றஞ்சாட்டப்பட்ட உடற்பயிற்சி ஆசிரியர் இது தனக்கெதிரான பொய்யான குற்றச்சாட்டாகும் என்று சாட்சியமளித்தார். தனிப்பட்ட கோபம் காரணமாகவே தன்மீது இவ்வாறான பொய்க்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சாட்சியமளித்துள்ளார்.
கொழும்பிலுள்ள பிரபல ஆண்கள் பாடசாலையில் சங்கீதம் கற்பிக்கும் ஆசிரியைக்கே அதே பாடசாலையில் உடற்பயிற்சி கற்பிக்கும் ஆசிரியர் முத்தமிட்டதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.
அந்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே கொழும்பு, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வகுப்பறையில் ஆசிரியை தனியாக இருக்கும்போது வகுப்பறைக்குள் உடற்பயிற்சி ஆசிரியர் சென்றுள்ளார். அவரை வகுப்பறையை விட்டு வெளியேறுமாறு ஆசிரியை கூறியபோதே குறித்த ஆசிரியர் முத்தமிட்டதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில், 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம் திகதி பொலிஸில் முறையிடப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது நீதவான் திலின கமகே, இருதரப்பு விளக்கங்களையும் எழுத்து மூலமாக சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.

ad

ad