புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜூன், 2013

வட மாகாணசபைத் தேர்தல் செப்டம்பரில் நடைபெறும்!- ஜனாதிபதி
வட மாகாணசபைத் தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உறுதியளித்துள்ளார். 
 ஈ.பி.டி.பி கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதனை உறுதி செய்துள்ளார்.

சர்வதேசத்திற்கு செப்டம்பரில் வட மாகாணசபைத் தேர்தலை நடாத்துவதாக உறுதியளித்துள்ளதாகவும் அதன்படி தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி தம்மிடம் கூறியதாக அமைச்சர் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
சவால்களை எதிர்நோக்கிய போதிலும் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
இதேவேளை, மாகாணசபைத் திருத்தச் சட்டம் தொடர்பிலான கருத்துக்களை வெளியிட சில அமைச்சர்கள் கால அவகாசம் கோரியுள்ளனர்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் ஜனாதிபதியிடம் இவ்வாறு கோரியுள்ளனர்.
இந்த கோரிக்கையை ஜனாதிபதி மஹிந்த ஏற்றுக்கொண்டுள்ளார்.
மேலும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் அதிலும் கட்சிகள் தங்களது நிலைப்பாட்டை வெளிப்படுத்த முடியும் எனவும் ஜனாதிபதி அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
2ம் இணைப்பு
இதேவேளை, 13வது திருத்தத்தில் மாகாணசபைகளுக்கான அதிகாரம் குறைப்பது   சம்பந்தமாக இன்று வியாழக்கிழமை காலை அமைச்சரவை கூடியது. 
இவ்விடயம் சம்பந்தமாக ஆராய முற்பட்ட போது அமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ் விடயம் சம்பந்தமாக  எனக்கு ஒரு வாரகால  அவகாசம் தருமாறு ஜனாதிபதியையும் அமைச்சரவையிடமும் கேட்டுக்கொண்டார்.
இவ் விடயம்  சம்பந்தமாக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் அரசியல் கட்சிக் கூட்டத்தில் ஆராய்ந்த பின்பே இது பற்றி முடிவை எடுக்க முடியும் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்ததையடுத்து இன்று 13வது திருத்தம் மேலும் ஒரு வாரத்திற்கு பின்போடப்பட்டுள்ளது.
19வது திருத்தம் அடுத்த வார பாராளுமன்ற கூட்டத்திற்கு  கொண்டு செல்வதற்கு அமைச்சரவை முடிவுசெய்துள்ளது.
இவ் விடயம் சம்பந்தமாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரும் கலந்துரையாடியுள்ளதாக தெரியவருகின்றது.

ad

ad