புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜூன், 2013

தமிழக அகதி முகாமில் வாழும் மாணவர்களின் கல்வி சாதனைகள் 
எவ்வித நம்பிக்கைகள் அற்று வாழ்ந்து வரும் இந்த மக்கள் மத்தியில் இருந்து கொண்டு சில மாணவர்கள் நன்றாகப் படித்து கல்வியில் சாதனை படைத்து அம்
மக்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி வருகின்றார்கள்.
அந்த வகையில் ஏற்கனவே பிளஸ் 2 இல் அதிக மார்க் எடுத்து சாதனை படைத்த மாணவன் அருண்ராஜ்
தமிழகத்தில் கடந்த 31/05/2013 அன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. (இலங்கையில் இதனை கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சை O/L என்பார்கள்).
இந்த தேர்வில் தமிழகத்தில் உள்ள அனைத்து ஈழத் தமிழ் மக்களின் முகாம்களில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று ஸ்பைனா சுவீட்டி என்ற மாணவி மகத்தான சாதனையை நிலைநாட்டி இருக்கின்றார்.
இவர் பரீட்சையில் 500 க்கு 490 மதிப்பெண்கள் பெற்று இருக்கின்றார். புவிராஜ், பத்திமா தம்பதிகளின் மகளான இவர் தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டத்தைச் சேர்ந்த புளியம்பட்டி அகதி முகாமில் வாழ்ந்து வருகின்றார்.
இரண்டாவதாக திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு அகதிகள் முகாமைச் சேர்ந்த எஸ். பவித்திரா என்ற மாணவி 500 க்கு 486 மதிப்பெண்கள் பெற்று இருக்கின்றார்.
மூன்றாவதாக அதே முகாமைச் சேர்ந்த மாணவியான ஆர். கவிதா 500 க்கு 481 மார்க் பெற்று இருக்கின்றார்.
அனைத்து முகாம்களிலேயும் அதிக மதிப்பெண்கள் பெற்று 98 வீதத்துக்கும் மேலான மாணவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளார்கள்.
manavi

ad

ad