புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜூன், 2013

தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு நடத்துவதற்கு தேவை ஒபாமாவின் பங்களிப்பு மட்டுமே!- ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு
தென் சூடான் சுதந்திர நாடாக அமைவதற்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் பொதுவாக்கெடுப்புக்கான ஆர்வமே காரணமாக இருந்தது என ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பானது ஒபாமா அவர்களுக்கு கடிதத்தினை எழுதியுள்ளனர்.
அதில் தென் சூடானைப் போன்று வடக்கு, கிழக்கிலும் (தமிழீழத்தில்)  அதை ஒத்த சூழ்நிலையே காணப்படுகின்றது என்பதை விளக்கி, தென் சூடானை ஒத்த நடவடிக்கைகளை வடகிழக்கிலும் (தமிழீழத்தில்) மேற்கொள்ளலாம் என்றும் விளக்கி உள்ளனர்.
தென் சூடானில் நடைபெற்ற பொதுவாக்கெடுப்பானது, உண்மையில் ஒரு நல்ல ஒரு நடவடிக்கையாகும். ஏனெனில் அது நல்ல பலனை கொடுத்துள்ளது. இதுவே ஈழத்தமிழர்களுக்கு ஒரு சரியான தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் முடிவாக இருக்கும்.
எனவே நிச்சயமாக இதனை இலங்கையின் வடக்கு கிழக்கிலும் (தமிழீழத்தில்) செயற்படுத்த ஆவன செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
தென் சூடான் ஆனது இரத்தக்களரி நிறைந்த கொடிய உள்நாட்டு போரில் பாதிக்கப்பட்டிருந்தது. பெரும்பான்மையினரின் ஒடுக்குமுறை, சிறுபான்மையினரை சொந்த இடங்களை விட்டு வெளியே துரத்தியது, இன மோதல்கள் என பல தசாப்தங்களாக நடைபெற்ற போரானது, ஒபாமா அவர்களின் முயற்சியினால் தென் சூடானில் கொண்டுவரப்பட்ட பொதுவாக்கெடுப்பும் புதிய நாடு உதயமாகியவையும் நல்லதொரு தீர்வாக அமைந்தது.
மேலும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் சிங்கள அரசாங்த்தால் ஒரு கொடிய இரத்தக்களரியை உருவாக்கிய போராக நடத்தியும், சிங்களவர்களினால் தமிழர் தொடர்ந்து அடக்குமுறைக்கு உட்படுத்துதல், சொந்த மண்ணை விட்டு அப்புறப்படுத்துதல், நாட்டை விட்டே அனுப்புதல் என தொடர் அடக்குமுறையைப் பிரயோகித்து வருகின்றமையும், இதன் மூலம் சிங்கள் அரசாங்கத்தினால் திட்டமிட்ட இன அழிப்பினை தமிழர்கள் மீது அரங்கேற்றி வருகின்றனர் எனவும் கடித்தில் குறிப்பிட்டுள்ளார்கள்.
புதியதொரு பொதுவாக்கெடுப்பு நடைபெற்று அதன் மூலம் புதிய நாடு ஒன்று உருவாக வேண்டும். இம்முறை அப்புதிய நாடு தமிழீழமாக அமைய வேண்டும். அது ஒபாமா அவர்களினால் மட்டுமே முடியும்.
கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளமையானது,
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களும், முன்னாள் இந்தியா வெளிவிவகாரத்துறை அமைச்சர் திரு ஜஷ்வன்த் சிங்ஹா அவர்களும் தமிழீழம் கிடைப்பது வெகு தொலைவில் இல்லை என்று சமீபத்தில் கூறியுள்ளனர்.
இவர்கள் முன்னர் தமிழீழத்தை ஆதரிக்காத கொள்கை உடையவர்களாக இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் தற்போது தமிழீழம் என்றும் விடயத்தில் ஒத்த நிலைப்பாட்டிற்கு வந்துள்ளமையானது, தெற்காசிய பிராந்தியத்தில் ஒரு புதிய சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதையே காட்டுகின்றது.
இலங்கையிலும் மற்றும் உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் அனைவரும், குறிப்பாக அமெரிக்காவில் உள்ள தமிழர்கள் உட்பட அனைவருமே இந்த வாக்கெடுப்பையே விரும்புகின்றனர் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே தென் சூடான் போன்று ஒபாமா அவர்களின் பங்கே இவ் விடயத்தில் மிக மிக முக்கியமானதாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ad

ad