புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜூன், 2013


          டிகர் விஜய், தன் அரசியல் வியூகத்தை அறி விக்கும் நாளாக ஜூன் 8 இருக்கும்’ என பரபரப்பாக எதிர்பார்க்கிறார்கள் அவரது ரசிகர்கள். காரணம் வரும் ஜூன் 22-ந் தேதி நடிகர் விஜய்க்குப் பிறந்தநாள்
.nakkeran

அதற்கு முன்னதாக ஜூன் 8-ந் தேதியே சென்னை மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரி வளாகத்தில் ஒரு பிரமாண்ட மான நலத்திட்ட விழாவை ஏற்பாடு செய்திருக்கிறார் விஜய். சுப்ரீம்கோர்ட் நீதிபதியும் தேசிய பசுமை தீர்ப்பாய உறுப்பினருமான ஜோதிமணி போன்றோர் பங்கேற்கும் இந்த விழாவில்... தனது 39-வது வயதைக் குறிக்கும் வகையில், 3,900 பயனாளிகளுக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளைச் செய்ய இருக்கிறார் விஜய். கூடவே ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடும் வைபவத்தையும் நடத்துகிறார். இந்த விழாவைத்தான் விஜய்யின் அரசியல் வியூக அறிவிப்பு நாளாக எதிர்பார்க்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.

எதனால் இந்த எதிர்பார்ப்பு? என்ற கேள்வியை கடலூர் மாவட்ட விஜய் ரசிகர் மன்ற செயலாளர் ராஜ சேகரிடம் வைத்தபோது.. 

""இந்த விழா மிக முக்கியமான விழா என்பதால், அது மிகப் பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்று தலைமை மன்றம் சொல்லியிருக் கிறது. மாவட்டத்திற்கு ஆயிரம் பேரையாவது திரட்டி வரவேண்டும்  என அறிவுறுத்தப்பட்டி ருப்பதால் நாங்கள் எங்கள் மாவட்டத்தில் இருந்து 150 வாகனங்களை புக் பண்ணியிருக்கிறோம். அதேபோல் தமிழக புதுவை மாநிலங்கள் முழு திலும் இருந்தும் ஏறத்தாழ 30 ஆயிரம் பேருக்கு மேல் திரள இருக்கிறார்கள். இதன் பின்னணியில் அரசியல் எதிர்பார்ப்பு இருப்பதற்குக் காரணம் என்னவென்றால், போன மாதம் 7-ந் தேதி மாநில நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தினார் விஜய். அப் போது "தலைவா'’ படத்தின் டப்பிங் வேலைகள் நடந்ததால், டப்பிங்கிற்கு இடையிடையே வந்து போன விஜய், நமது மன்றத்திற்கு அனைத்து நகரங்களிலும் கிராமங்களிலும் கிளைகள் தொடங்கப்பட வேண்டும். ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு வார்டிலும் நமக்கு கிளைகள் அமைக் கப்பட்டாக வேண்டும். அதற்கான விண்ணப்பங் களை கையோடு வாங்கிச்செல்லுங்கள். அர சியல் பற்றி நாம் இப்போது பேச வேண்டாம். நலத்திட்ட உதவிகளை மட்டும் இப்போது செய்வோம் என்றபடி ஒரு புன்னகையை வீசி னார். அந்த சிரிப்பே, நாம் விரைவில் அர சியலில் குதிப்போம் என்று சொல்வதுபோல் இருந்தது. ""கடந்த தேர்தலில் எந்த பலனும் இல்லாமல் அ.தி.மு.க.வுக்குத் தேர்தல் வேலை செய்தோம். வரும் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை இளையதளபதி விரைவில் அறிவிப் பார். எங்கள் மன்றத்தில் இங்கே அதிக அளவில் வன்னியர்களும் தலித்துகளும் இருக்கிறார்கள். எனவே வன்னிய தலித் மக்களின் ஆதரவை, நாங்கள் ஆதரிக்கும் அணி வாங்கும்''’என்கிறார் அழுத்தமாக.



அகில இந்திய விஜய் ரசிகர் மன்றத் தலைவர் ஆனந்த்தோ ""விஜய் சார், உதவி செய்வதில் கொடை வள்ளல். அவர் தங்கை வித்யா பெயரில் வைத்திருக்கும் டிரஸ்ட் மூலம் நிறைய உதவிகளை செய்துவருகிறார். திருநெல்வேலி மாணவி ஒருவர் சென்னையில் விபத்தில் சிக்கி மியாட் மருத்துவமனையில் இருந்தார். மும்பையில் "தலைவா' படப்பிடிப் பில் இருந்த விஜய் சார், அந்த மாணவியின் சிகிச்சைக்கு உதவினார். அதேபோல் கடலூர் ரசிகர் ராஜா கடலில் தவறிவிழுந்து இறந்து விட்டார். ஆஸ்திரேலியாவில் இருந்த விஜய் இதைக் கேள்விப்பட்டு, அவருக்கு எத்தனை பிள்ளைகள் என்றெல்லாம் விசாரித்துவிட்டு, அவர்களுக்கான படிப்பு செலவுகளை ஏற் போம் என்றிருக்கிறார் இப்போது சென்னை யில் எல்லோரும் திகைத்துத் திரும்பிப் பார்க்கும் வகையில் ஒரு நலத்திட்ட விழாவை நடத்த இருக்கிறோம். இந்தக் கூட்டம் விஜய் சாரின் பலத்தை காட்டும் விதத்தில் இருக்கும். விஜய் சார் அரசியலுக்கு வரவேண்டும் என்பது எங்கள் எதிர்பார்ப்பு. விஜய் சாரும் அவரது அப்பாவும்தான் ஒரு நல்ல முடிவை விரைவில் அறிவிக்கவேண்டும்''’ என்கிறார் பலத்த எதிர் பார்ப்போடு.

அரசியல் வட்டாரங்களில் விசாரித்த போது, ""நாயுடு ஓட்டுக்களோடு தலித், வன்னியர் வாக்குகளை வாங்கவேண்டும் என்றுதான் விஜயகாந்த்தை தன் கூட்டணியில் சேர்த்துக்கொண்டார் ஜெ’. இப்போது விஜயகாந்த் இடத்தில் விஜய்யை ஜெ.’பார்க்கிறார். மேற்கண்ட வாக்குகளை வாங்க விஜய்யின் ஆதரவு தேவை என்பதை அவர் தெரிந்து வைத்திருக்கிறார். எனவே ஜெ.வுக்கு தங்கள் பலத்தைக் காட்ட விஜய் விருப்பப்படுகிறார். அதனால்தான் இந்த பிர மாண்டமான விழா ஏற்பாடு செய்யப்பட்டிருக் கிறது''’ என்கிறார்கள் கூர் மையாய்.

இப்படி ஒருபக்கம் விஜய்யின் நலத்திட்ட விழா குறித்த ஏற்பாடுகளும் எதிர் பார்ப்புகளும் ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் விஜய் ரசிகர்கள் தரப்பிலேயே ஒருவித ஆதங்கம் இருக்கிறது. இது குறித்து அவர்கள் தரப்பில் கேட்டபோது ""முன்பு விஜய் ரசிகர் மன்ற தலைமைப் பொறுப்பில் ஜெயசீலன் இருந்தார். மன்றம் இலைப்பக்கம் சாய்வதைக் கண்ட அவர், ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வில் இணைந்துவிட்டார். அடுத்து அந்தப் பொறுப்புக்கு பாஸ்கர் வந்தார். அப்போது புதுவை மாநில முன்னாள் எம்.எல்.ஏ.வான ஆனந்த் மன்றத்தில் இணைந்து, கொஞ்சம் கொஞ்சமாக விஜய்யை நெருங்கி, பாஸ்கரை ஓரம்கட்டிவிட்டு அந்தப் பதவிக்கு வந்துவிட்டார். முன்பு தன் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் சொன்னபடி எல்லாம் கேட்டு வந்த விஜய், இப் போது ஆனந்த் சொன்னபடியெல்லாம் செய்துவருகிறார். ஆனந்துக்கு எப்படியும் புதுவையில் எம்.பி.தேர்தலில் சீட்டை வாங்கிவிடவேண்டும் என்று ஆசை. முதல்வர் ரெங்கசாமியின் நெருக்கத்தை வைத்து இதை சாதிக்க முடியும் என்று நம்புகிறார். எனவே தன் பலத்தை நிரூபிக்க, விஜய் பெயரில் பெரும் கூட்டத்தைக் கூட்ட நினைக்கிறார்'' என்கிறார்கள் எரிச்சலாய். 

எது எப்படியோ, விஜய்யின் அரசியல் பிரவேசத்துக்கு அடித்தளம் போடும் நிகழ்ச்சியாக 8-ந் தேதி நிகழ்ச்சி இருக்கும் என அவர் தரப்பே எதிர்பார்க்கிறது.

-காசி, இளங்கோவன்

ad

ad