புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 நவ., 2013

இலங்கையுடன் 13வது திருத்தம் பற்றிய இந்தியாவின் பேச்சுக்கள் முறிவடையும் ஆபத்து
மாகாணங்களுக்கு அதிகளவான அதிகாரங்களை வழங்கும் 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் தொடர்பில் இலங்கையுடன் இந்தியா நடத்தும் பேச்சுக்கள் முறிவடையும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக இந்திய அரச வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
13வது திருத்தத்தின் அதிகாரங்களை விரிவுப்படுத்துவது தொடர்பில் இலங்கை அரசுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் பேச்சுவார்த்தைகள் முறிவடையும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு, அந்நாட்டு பிரதமரின் அலுவலகத்திற்கு வழங்கியுள்ள இரகசியமான அறிக்கையில் கூறியுள்ளதாக தெரியவருகிறது.
இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்ட அரசியல் ஆலோசகர்களின் தகவல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையில், கடந்த காலங்களில் இலங்கை தொடர்பில் இந்தியா எடுத்த இராஜதந்திர தீர்மானங்கள் பற்றி கடுமையான கேள்விகள் எழுப்பபட்டுள்ளன.
இந்தியாவினால் விடுக்கப்பட்ட பல்வேறு கோரிக்கைகளை இலங்கை நிறைவேற்றியுள்ளது.
எனினும் இந்தியா, ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக வாக்களித்தமை, பிரதமர் மன்மோகன் சிங் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் பங்கேற்காமை போன்ற நடவடிக்கைகள் இரு நாடுகளுக்கு இடையிலான இராஜதந்திர உறவுகளில் சரிவை ஏற்படுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக 13வது திருத்தச் சட்டம் தொடர்பில் நடத்தப்படும் பேச்சுவார்த்தைகள் ஆபத்தான நிலைக்கு சென்றுள்ளன.
இந்த காரணங்களின் அடிப்படையில் இலங்கை மேலும் சீனா மற்றும் பாகிஸ்தானை நோக்கி நெருங்கி செல்வதை தடுக்க முடியாது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தில் உள்ள அதிகாரங்களையும் மாகாணங்களுக்கு வழங்காது இலங்கை, சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுடன் உறவுகளை பலப்படுத்திக்கொள்ளக் கூடும் எனவும் இந்திய அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ad

ad